பலகட்சிப் பச்சையப்பன்கள் எங்கும் உண்டு அந்த வகையில் புரட்சி பாரதம், புதிய தமிழகம், விசிக., பகுஜன் சமாஜ், இப்போது காங்கிரஸ்..என பலகட்சி மாறி வந்தவர் செல்வம் அவர்காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அருகில் மணிமங்கலத்தில் ஆதிதிரவிட வகுப்பில் பிறந்தவராவார்
பெருந்தகையானது ஒரு தனிக்கதை அந்த உண்மை பேசினால் தெரியாதவர்கள் அறிவர் ஆனால் இவர் தலைவராக உள்ள காங்கிரஸ் கட்சி நண்பர்கள் அறிவார்களா ?என்பதை யாமறியேன். லோக்சபா தேர்தல் நெருங்கிய நிலையில், திமுகவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை, மற்றும் தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் தேர்வு என பல்வேறு பணிகள் உள்ள நிலையில், திடீரென காங்கிரஸ் மாநில தலைவராக செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டுள்ளார். திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் 9 தொகுதிகள் எதிர்பார்க்கப்படும் நிலையில் 5 வரை தரப்படலாம் என்ற நிலை தான் உள்ளது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள கு.செல்வப்பெருந்தகை,சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ராஜேஷ்குமார் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயால் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சட்டமன்றக் கட்சிக் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார்
மாணவர் காங்கிரஸ் , இளைஞர் காங்கிரஸ் என மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக கிள்ளியூர் மக்களால் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டு, மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராகி பின்னால் சட்டமன்றக் கட்சியின் காங்கிரஸ் துணை தலைவராகப் பொறுப்பேற்ற பின் தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவராக நியமிக்கப்பட்ட ராஜேஷ்குமார் இதனால் தானோ என்னவோ வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்துக்கு சீட்டு வழங்கப்பட்டது. அவரும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அன்று முதல் கட்சி தலைமை மீது அதிருப்தியின் காரணமாக இருந்த கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையின் பேத்தியான விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினரான விஜயதாரணி தீவிர அரசியிலில் ஈடுபடாமல் ஒதுங்கியே இருந்து வந்தார்.
இந்த நிலையில் கன்னியாகுமரி மக்களவை நாடாளுமண்றத் தொகுதியில் இந்த முறை தனக்கு போட்டியிட சீட்டு வழங்க வேண்டும் என்று தலைமையிடம் கராராகக் கூறியுள்ளார். ஆனாலும் தேசிய தலைமையின் ஆதரவும், திமுக சப்போர்ட்டின்
அடிப்படையில் மீண்டும் விஜய் வசந்துக்கே சீட் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ஆகையால் கடும் அதிருப்தியில் விஜயதரணி இருந்து வருவதாகவும் தமிழ்நாடு வரும் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் பாஜகவில் விஜயதரணி இணைய உள்ளதாகவும் தகவல் வெளியானது. இதுகுறித்து விஜயதரணியிடம் விசாரித்த போது ஏற்கவும் இல்லை, ஆனால் அதை மறுக்கவும் இல்லை.அதை உறுதி செய்யும் விதமாக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்காமல் கடந்த சில நாட்களாக டெல்லியில் முகாமிட்டுள்ள விஜயதரணி பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. உச்சநீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு தொடர்பாக டெல்லிக்கு வந்துள்ளதாகவும் தெரிவித்தார். இந்நிலையில் காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் பரவி வருகிறது.
இதனிடையே வரும் 27 ஆம் தேதி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெறவுள்ள பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் நிறைவு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். விஜயதரணி மற்றும் மேலும் இரண்டு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜகவில் இணைய உள்ளனர் என்றும், 27 ஆம் தேதி நடைபெறும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடியின் கையால் அவர்கள் பாஜக உறுப்பினர் அட்டையைப் பெற்று பாஜக நிர்வாகிகளாக அதிகாரப்பூர்வமாக கட்சிப் பணியை தொடங்குவார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது
கருத்துகள்