எந்தவிதமான சோர்வுகளும், தொய்வுமில்லாமல்
ஓயாத அலைகளாய் மீண்டும் மீண்டும் சீக்கிய உழவர்கள் இந்திய அரசாங்கத்தின் தலைநகரான புதுடெல்லியில் தாக்குவதற்கு ஒரு மிக முக்கியமான காரணமுண்டு.
பொதுவாக பஞ்சாபின் அத்துணை சமூக அரசியல் பண்பாட்டு குமுகாய நகர்வுகளும் 'சீக்கிய மதம் சார்ந்த ஸ்பிரிட்' என்கிற சீக்கிய தேசிய பிரக்ஞயோடு தான நிகழ்கிறது.
இங்கே வெறும் 'பிரக்ஞய்' என்பது சரியான பொருத்தப்பாடு கொண்டிருக்கவில்லை.
ஸ்பிரிட் அல்லது அதற்கு மேலான ஒரு வார்த்தை தான் அதை சரியாக விளக்க இயலும். ஏனெனில் இது பிரக்ஞய் தாண்டிய ஒரு புனிதம் கலந்த உணர்வு.
அந்த உணர்வு தான் முன்னொரு காலத்தில் ஆதிமனிதனிடம் 'கடவுளைப் படைத்தது' என்று மானுட இனவியல் பரிணாமக் கோட்பாட்டில் வாசிப்போம்.
இந்திய அரசாங்கத்தின் தெற்குப் பகுதியில் அது பொதுவாக வீழ்த்தப்பட்டிருக்கிறது அதற்குப் பல காரணிகள் அது மிகக் குறிப்பாக தமிழ் நாட்டில் வீழ்ந்ததற்கு திராவிடம் என்கிற போலியான இனமும், ஆரிய-திராவிட இழையில் நெய்யப்பட்டிற்கும் செஞ்சட்டைக் கயவர்களாலும் அது நிகழ்ந்திருக்கிறது.
உழவர் அமைப்புக்களை திராவிட பாணி சிந்தனையும், ஊழல் வடியும் சிகப்புச் சொக்காயும் துண்டும் 'தமிழர் எனும் ஸ்பிரிட்டை' கிட்டத்தட்ட அழித்தே விட்டன என்பது தான்
70 லிருந்து 80 வரை உள்ள தமிழகத்து உழவர் அமைப்புக்களை இனவாத ஊழல் குருதியில் சிவந்த சிவப்புப் துண்டுகள் தான் ஆக்கிரமித்து இருக்கின்றன அதில் அய்யாத்துரை மற்றும் பாண்டியன்களும் தான், அதற்கு ஒரு நாராயணசாமி நாயுடு போலவோ, பின்நாளில் வந்து மறைந்த சடகோபன் அய்யா போல யாரும் வரவில்லை
சீக்கியர்களைப் போல நெருக்கடிக்கு உள்ளாக்கப்படும்போது நாம் தமிழ் நாடு ஸ்பிரிட்டைத் தேடுவதில்லை; நாம் ஈவெராவியம் , செங்காவியம் போன்ற ஒரு மலட்டிசங்களிடம் தேடுகிறோம்.
புரட்சி என்பதே அரசியலில் உதிர்ந்த உரோமமாகி விடுகிறது. அதனால் தான் முன்னேறும் உழவர்கள் காக்கிகளையும், இராணுவ சீருடைகளையும் கண்டதும் இயல்பாக 'கால்சா' முழக்கங்களை விண்ணதிர முழங்குகிறார்கள்.
அந்த உணர்வு களங்கப்பட வாய்ப்பேயில்லை, அது தாயோடு இருக்கும் உறவை, பிணைப்பை போன்றது , இந்த உணர்வு தான் தேசியங்களை வாழவைக்கிறது.
வேளாண்மை என்பது வெறும் தொழிலல்ல. அது பழங்குடி சமூகங்களின் அடிப்படை அடையாளத்தோடு நேரடித் தொடர்புள்ளது.
வரலாற்றில் நாடோடிகளாக அழிந்தொழிந்த காலத்தில் அவன் வெற்றிகரமான மானுட இனமாக பரிணமிக்க அஸ்திவாரமிட்ட சாமி அது தான்.
அது அச்சுறுத்தப்படும்போது தலைநகரங்கள் அதிருமென்பதே எதார்த்தம். ஆனால் அந்தப் புனித உணர்வை தமிழர் மண்ணிலிருந்து அழித்தொழித்தே கம்யூனிஸம் பெயரிலும் பெரியார் ஈ.வே. ராமசாமி நாயக்கர் பெயரிலும் சிலர் அழித்தே விட்டார்கள். மீட்டெடுக்க வேண்டும், தமிழின் பெயரால் அது மீள வேண்டும், என்பதே எதார்த்த நிலை அது மீளும் என்ற நம்பிக்கை இங்கு பலருக்கும் உண்டு
மக்களாட்சியின் அத்துணை எந்திரங்களும் ஆரிய இனவாத எந்திரத்தின் முற்ச்சக்கரங்கள் ஆகியிருக்கும் இந்த வேளையில்...
தெற்கே இருந்து தலைநகர் நோக்கி ஒரு படையணி கிளம்ப வில்லை தானே? அறிவுரை கூறுவதற்குக் கூட ஒரு அருகதை வேணும் விவசாயிகளுக்கு புத்திமதி சொல்ல சிலர் வந்துட்டீங்க. ந....பிழைப்பு நடத்துகிற நாதாறி யெல்லாம் நாட்டுக்கு யோசனை கூறுவதோ?
சோறு போடும் கரங்கள் தானே இந்தத் தேசத்தை அதிகாரம் செய்யனும்...உன்னை போன்ற சோம்பேறிகள் எல்லாம் இங்கே அதிகாரம் செய்வது தேசத்தின் போறாத காலம் தான்.என ஒரு துறவு பூண்ட நபருக்கு கேள்விகளும் எழாமல் இல்லை, பட்டங்களைப் பறக்கவிட்டு காவல்துறையின் "ட்ரோன்"களை காலி செய்த வீரியமிக்க விவசாயிகளைப் பார்க்கிறேன்.. தலைநகரில் அது குறித்து திரைப்படத்தில் வந்த பாடல் தான் நம் நினைவுக்கு வருகிறது "வல்லவனுக்கு வல்லவன் வல்லோர்கள் சுரண்டும் பொல்லாத கொடுமை
இல்லாமல் மாறும் ஒரு தேதி - அன்று இல்லாமை நீங்கி எல்லோரும் வாழ இந்நாட்டில் மலரும் சமநீதி!
நம்மை ஏய்ப்பவர் கையில் அதிகாரம். இருந்திடும் என்னும் கதை மாறும்! "இதுவே இங்கு பொதுநீதி
கருத்துகள்