முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று இது அரசுதுறந்த புலவன்அன்று அறைந்த  கூற்று...



             உள்ளாட்சித் தலைவர் பதவி இரண்டு பேருக்குச் சான்றிதழ் வழங்கிய தேர்தல் ஆணையம் .. தடை போட்ட நீதிமன்றம்! தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலில் வென்று  தலைவர்களான 18 வயது முடிவுற்ற இளம் 
கல்லூரி மாணவிகள், 70 வயது கடந்த முதுமைப்பாட்டிகள், திருநங்கை என  களத்தில் வெற்றி கண்டுள்ளனர்.
தமிழகத்தில் 27 மாவட்டங்களுக்கு உட்பட்ட உள்ளாட்சியில்  உள்ள 91 ஆயிரத்து 975 பதவிகள் மாவட்டக் கவுன்சிலர், ஒன்றியக் கவுன்சிலர், ஊராட்சித் தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு டிசம்பர் 27 மற்றும் 30ம் தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. சராசரியாக 2 கட்ட தேர்தலிலும் 77 % வாக்குகள் பதிவாகின.
91 ஆயிரத்து 975 பதவிகளுக்கு 3 லட்சத்து 2 ஆயிரம் வேட்பு மனுக்கள் பெறப்பட்டதில் 48 ஆயிரத்து 891 நபர்கள்  மனுக்களைத் திரும்பப் பெற்றனர். மேலும் 18 ஆயிரத்து 570 பதவிகளுக்கு வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். 2 லட்சத்து 31 ஆயிரத்து 890 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். இவர்களில் ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிக்கு ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 898 பேரும், ஊராட்சித் தலைவர் பதவிக்கு 35,611 பேரும் போட்டியிட்டனர்.
ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 22 ஆயிரத்து 776 பேரும், மாவட்ட ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிக்கு 2,605 வேட்பாளர்களும் களம் கண்டனர். உள்ளாட்சித் தேர்தலில் அரசியல் கட்சிகளின் 
 பின்புலம் கொண்டவர்கள் மட்டுமே அரசியலுக்கு வர முடியும். அரசியல் என்றால் வேண்டவே வேண்டாம் என்று பெண்கள் ஒதுங்கியே இருப்பதாக சொல்வதெல்லாம் இந்த நூற்றாண்டிலும் தொடரத் தான் செய்கிறது. இதில் அத்தி பூத்தார்போல சில எதிர்பாராத அதிரடிகளும் நடக்கும் அப்படியான சம்பவம் தான் 2019 உள்ளாட்சித் தேர்தலிலும் நடந்திருக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள சூளகிரி ஒன்றியத்திற்கு உட்பட்ட கே.என்.தொட்டி ஊராட்சித்தலைவர் பதவிக்கு 21 வயது கல்லூரி மாணவி சந்தியா ராணி, பிபிஏ இறுதியாண்டு படிப்பவர் முதல் தேர்தலிலேயே வெற்றி கண்டுள்ளார். வயது வித்தியாசமின்றி தனக்கு வாக்களித்த 4 கிராம மக்களுக்கு நன்றிகளை தெரிவித்ததுதடன் தன்னை நம்பி வாக்களித்த மக்களின் தேவைகளை என்னால் முடிந்த அளவிற்கு பூர்த்தி செய்வேன்,” என டைம்ஸ் ஆஃப் இந்தியா பேட்டியில் தெரிவித்துள்ளார்.சந்தியா ராணியின் தந்தை ஜெயசாரதி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர், கே.என். தொட்டி ஊராட்சி, பெண்கள் தொகுதியாக அறிவிக்கப்பட்டதால் சந்தியாராணி அந்தப் பதவிக்கு போட்டியிட்ட நிலையில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளரை 108 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து ஊராட்சி மன்றத் தலைவராகி இருக்கிறார்.


திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயது சுபிதா திருத்துறைப்ழுண்டி யூனியனுக்கு உட்பட்ட பூசலங்குடி பஞ்சாயத்து தலைவர்  பள்ளிப்பருவத்தில் இருந்தே மாணவ அமைப்பில் சேர்ந்து சமூகப் பணியாற்றி வருகிறார் சுபிதா. 499 வாக்குகள் பெற்று  தலைவராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். தமிழகத்தின் 2 ஊராட்சிகளை இளம் பெண்கள் தலைவர்களாக வழிநடத்த இருக்கின்றனர்.
சுபிதா, சந்தியா ராணி மட்டுமல்ல இத் தேர்தலில் இன்னொரு ஆச்சரியமும் இருக்கிறது. முதல் முறையாக திருநங்கை ஒருவர் ஒன்றியக் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியத்தில் 2வது வார்டு கவுன்சிலருக்கான தேர்தலில் போட்டியிட்ட 35 வயது திருநங்கை ரியா 2,701 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுக சார்பில் போட்டியிட்ட ரியா, மக்கள் பிரச்னைகளைப் போக்க தான் தொடர்ந்து பாடுபடப் போவதாகவும், முழு நேர அரசியல்வாதியாக இருந்து மக்களுக்கு உதவுவேன் என்றும் கூறியுள்ளார்.


20’s, 30’s மட்டுமல்ல இந்த தேர்தலில் 70+ பாட்டிகளும் வெற்றி பெற்றுள்ளனர். திருப்ழுர் மாவட்டம் வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் ஊராட்சித்தலைவர் பதவிக்கு 82 வயது விசாலாட்சி  முன்னாள் அமைச்சர் துரை ராமசாமியின் மனைவியான இவர் 3,069 வாக்குகள் பெற்று தலைவர் பதவிக்கு வெற்றி பெற்றார்.
மேலூர் ஊராட்சி ஒன்றியம் அரிட்டாபட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு 79 வயதான வீரம்மாள் போட்டியிட்டார். இவர் தம்மை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளரை விட 195 வாக்குகள் அதிகம் பெற்று ஊராட்சி மன்றத் தலைவராக வெற்றி பெற்று தேர்தல் அதிகாரியிடம் இருந்து வெற்றிச் சான்றிதழைப் பெற்றார்.அது போலவே ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஒன்றியத்திற்கு உட்பட்ட அ.தரைக்குடி ஊராட்சி மன்றத்தின் தலைவராக 73 வயது  தங்கவேலு போட்டியிட்டார். தள்ளாத வயதிலும் தீவிர வாக்கு சேகரிப்பு செய்து வெற்றிக்கனியையும் பறித்திருக்கிறார்


சட்டமன்றம், நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவிகிதம்  இடஒதுக்கீடு போதாது 50 சதம்  வழங்கும் மசோதா நிறைவேற்றப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டு இருக்கிறோம். ஆனால் அப்படி இடஒதுக்கீடு தந்தாலும் தைரியமாக பெண்கள் அரசியல் களம் காண வேண்டும் என்பதற்கு சான்றாக இருக்கின்றனர் உள்ளாட்சித் தேர்தலில் வயது வித்தியாசமின்றி வெற்றி பெற்றுள்ள பெண்கள்...ஆனால் அதன் பின்னணியில் ஆண்கள் இருந்து இயக்குவது தான் பலஹீனமான செயல்   5090 ஊராட்சி ஒன்றிய வார்டுகளில் திமுக – 2099, அதிமுக 1781 வெற்றி       மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியில் சதவீதம் வாரியாக (மொத்த எண்ணிக்கை : 515 )ல் திமுக 42.14, அதிமுக 36.31 பெற்றுள்ளன. மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியில் சதவீதம் வாரியாக (மொத்த எண்ணிக்கை : 515 ) ல் திமுக 42.14, அதிமுக 36.31 பெற்றுள்ளன. ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் (மொத்த எண்ணிக்கை : 5090 ) ல் சதவீதம் வாரியாக திமுக 39.31, அதிமுக 32.77 சதவீதம் பெற்றுள்ளன.
ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கான இடங்களில் அ.தி.மு.க.2,136 இடங்களிலும் தி.மு.க. 2,356  இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன . மாவட்ட கவுன்சிலர்களுக்கான பதவிகளில், திமுக 247  இடங்களிலும் அதிமுக 213  இடங்களிலும் முன்னிலை வகித்தன.
தமிழகத்தில் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் மற்றும் சென்னை மாவட்டத்தை தவிர 27 மாவட்டங்களில் நிலவரம்: 5090 ஊராட்சி ஒன்றிய வார்டுகளில் திமுக - 2099, அதிமுக 1781 வெற்றி.


ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் நிலவரம்:
27 மாவட்டங்களில் மொத்த ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் எண்ணிக்கை 5090
கட்சி வாரியாக வெற்றி பெற்ற இடங்களின் எண்ணிக்கை
திமுக - 2099அதிமுக - 1781காங்கிரஸ் - 132பாஜக - 85இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - 62மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - 33தேமுதிக - 99மற்றவை - 795
 நிலவரம்: 515 மாவட்ட கவுன்சில் இடங்களில் திமுக - 243, அதிமுக 214 வெற்றி ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் நிலவரம்:
27 மாவட்டங்களில் மொத்த மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் எண்ணிக்கை 515
கட்சி வாரியாக வெற்றி பெற்ற இடங்களின் எண்ணிக்கை
திமுக - 243அதிமுக - 214 காங்கிரஸ் - 15பாஜக -7இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - 7மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - 2தேமுதிக - 3மற்றவை - 22


27 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் அரசியல் கட்சிகள் மாவட்ட ஊராட்சி வார்டுகளில் வெற்றி பெற்ற உறுப்பினர்களின் சதவீதம்:
திமுக - 47.18% அதிமுக - 41.55%காங்கிரஸ் - 2.91.%இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - 1.36%பாஜக - 1.36%மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - 0.39%மற்றவை - 4.27%
இதில் பாமக, தேமுதிக தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் என்பதால் அதன் சதவீதம் குறிப்பிடப் படவில்லை.
தேர்தல் ஆணைய இணையதள.
 அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் படி, ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் வெற்றிப் பெற்ற இடங்களின் எண்ணிக்கை திமுக - 2089,அதிமுக- 1762,மற்றவை - 794,காங்கிரஸ் - 131,தேமுதிக - 97,பாஜக - 84,சி.பி.ஐ - 62,சி.பி.ஐ(எம்) -33
 உள்ளாட்சி தேர்தல் என்றாலே பணம் புகுந்து விளையாடும் என்பது தெரிந்ததே. அந்த வகையில் இந்த தேர்தலில் போட்டியிட்ட பல வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வாக்குகளை வாங்கி வெற்றி பெற்றதாக கூறப்படுகிறது
இருப்பினும் பணத்தை வாங்கிக்கொண்டு ஒரு சில வேட்பாளருக்கு வாக்காளர்கள் பட்டை நாமம் போட்ட சம்பவங்களும் நடந்துள்ளது.


  மன்னார்குடி அருகே கீழப்பனையூர் என்ற கிராமத்தில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட ஒரு வேட்பாளர் மிக அதிகமாக செலவு செய்துள்ளார். ஒவ்வொரு வாக்காளருக்கும் 100 முதல் 500 ரூபாய் வரை அவர் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது
இருப்பினும் அவருக்கு ஓட்டு போடாமல் அவரை அந்த பகுதி மக்கள் தோற்கடித்தனர். இதனால் கடுப்பாகிய அந்த வேட்பாளர் ’காசு வாங்கிய நாயே ஓட்டு போட்டாயா’ என்று போஸ்டர் அடித்து அந்த பகுதி முழுவதும் ஒட்டியுள்ளார் இந்த போஸ்டரால் அந்த பகுதி மக்கள் கடும் ஆத்திரத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதுசிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகர் ஒட்டிய பகுதி சங்கராபுரம் ஊராட்சித் தலைவா் பதவிக்கான தோ்தலில் வெற்றி பெற்றதாக குழப்பம்  இரண்டு பெண் வேட்பாளா்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்ட விவகாரத்தில்,முதலில் சான்று பெற்ற  ஒருவரது வீட்டுச் சுவரில் தோ்தல் வெற்றி அறிவிப்பு ரத்து உத்தரவை,  வட்டாட்சியா் மற்றும் அதிகாரிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒட்டிச் சென்றனா். 15 வார்டுகள் கொண்ட பெரிய ஊராட்சி  22,393 வாக்காளர்கள் கொண்ட ஊராட்சித் தலைவர் பதவி பெண்கள் பொதுப் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டது.  இந்த ஊராட்சியில் ஏற்கனவே இரண்டு முறை  தலைவராக இருந்த காங்கிரஸ் பிரமுகர்   மாங்குடியின் மனைவி தேவி போட்டியிட்டார்.
இவரை எதிர்த்து அதே பகுதியைச் சேர்ந்த அரசியல் களம் இதுவரை காணாத  புதியவரான ஒரு பொறியியல் கல்லூரி பங்குதாரரும், நில வணிகம் செய்துவரும் நபருமான  அய்யப்பன் என்பவர்  மனைவி பிரியதர்ஷினி என்பவரும் போட்டியிட்டார்கள்.  கடந்த 30ஆம் தேதி தேர்தலில் 11,924 வாக்குகள் பதிவானது  2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிவில், முதலில் தேவிமீனாள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு படிவம் 25 சான்றிதழும் வழங்கப்பட்டது. பின்பு இன்னும் வாக்குகள் எண்ணப்படவில்லை என்று பிரியதா்ஷினி எதிா்ப்பு தெரிவித்தாா். அதைத் தொடா்ந்து, தோ்தல் அலுவலா், மாவட்டத் தோ்தல் அலுவலா், மாவட்டத் தோ்தல் பாா்வையாளா் ஆகியோா் வாக்கு எண்ணிக்கையை சரிபாா்த்ததாகவும், வெற்றி அறிவிப்பை ரத்து செய்வதாகவும், மறுவாக்கு எண்ணிக்கையில் பங்கேற்குமாறும் தேவிக்கு அழைப்பு விடுத்தனா். ஆனால், இதில் தேவி மீனாள் பங்கேற்கவில்லை.
அதையடுத்து அவர் இல்லாமல் சான்று வழங்கியபின்  நடந்த மறுவாக்கு எண்ணிக்கையில், 63 வாக்குகள் வித்தியாசத்தில் பிரியதா்ஷினி வெற்றி பெற்றதாக அறிவித்து, அவருக்கு தோ்தல் அலுவலா்  சான்றிதழ் வழங்கினாா்.
இந்நிலையில், வெற்றிச் சான்றிதழ் பெற்ற இரண்டு பெண்களும், வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்து ஊா் முழுவதும் சுவரொட்டிகளை ஒட்டினா்.அதில் தேவி  சென்னை  உயா் நீதிமன்றம் மதுரைக் கிளையில் பிரியதா்ஷினி பதவியேற்க தடைகோரி ரிட்மனு தாக்கல் செய்து தடை உத்தரவும் பெற்றார்.
தொடா்ந்து, தேவிக்கு வழங்கப்பட்ட வெற்றி அறிவிப்புச் சான்றிதழை ரத்து செய்து தோ்தல் அலுவலா் ரெ. மாலதி உத்தரவிட்டாா். இந்த அறிவிப்பை வழங்க, காரைக்குடி வட்டாட்சியா் பாலாஜி தலைமையிலான அதிகாரிகள் கடந்த  ஞாயிற்றுக்கிழமை தேவி வீட்டுக்குச் சென்றனா். ஆனால், அங்கு அவா் இல்லாததால், வீட்டின் சுற்றுச்சுவா் முகப்பில் உத்தரவு அறிவிப்பை ஒட்டிவிட்டுச் சென்றனா்.தேவி  வெற்றிக்கு காங்கிரஸ் சார்பாக காங்கிரஸ் தலைவர்  ப.சிதம்பரம் பிரச்சாரம் மேற்கொண்டார்.
காரைக்குடி அழகப்பா பாலிடெக்னிக் கல்லூரியில் சேகரிக்கப்பட்ட வாக்கு பெட்டிகள் பாதுகாப்புக்கு வைக்கப்பட்ட நிலையில் வாக்கு பெட்டிகள் சீல் உடைக்கப்பட்டதாக ஒருசர்சையும் எழுந்தது.
இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை துவங்கி தேவி வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரி சான்றளித்த போது அங்கு வந்த பிரியதர்ஷினி வாக்குவாதம் செய்து அதிகாரிகள் அளித்த சான்றிதழை பிடுங்க முயற்சித்ததாகவும்.தொடர்ந்து கூச்சல் போட்டு அந்த இடத்தை விட்டுச் செல்லாமல் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி இருப்பதாக புகார் தெரிவித்தார். அதிமுக மாவட்ட செயலாளர் முன்னாள் எம்பி செந்தில்நாதன், அதிமுக முன்னாள் எம்எல்ஏ பழனிச்சாமி ஆகியோர் தேர்தல் பார்வையாளர் கருணாகரணிடம் புகார் செய்தனர்.


மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் நள்ளிரவு வாக்கு எண்ணும் மையத்திற்கு வந்தார். தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை சரி பார்க்கப்பட்டது. தேவிமீனாள் வெற்றியை ஏற்றுக் கொள்ளாத பிரியதர்ஷினி மறு எண்ணிக்கை கோரினார் இதனால் யார் வெற்றி பெற்றார்கள் என்று குழப்பம் நீடித்து வந்த நிலையில், தேவி சார்பில் சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் ரிட் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதில் 
 முதலில் வாக்குகள் எண்ணப்பட்டபோது 5871 வாக்குகளை நான் பெற்று இருந்தேன். என்னை எதிர்த்துப் போட்டியிட்ட பிரியதர்ஷினி 5809 வாக்குகள் பெற்றிருந்தார். நள்ளிரவு ஒரு மணி அளவில் நான் வெற்றி பெற்றதாகச் சான்றிதழ் வழங்கப்பட்ட நிலையில் அதிகாலை 5 மணியளவில் பிரியதர்ஷினி வெற்றி பெற்றதாக அவருக்குச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. எனவே பிரியதர்ஷினி ஊராட்சி மன்றத் தலைவர் பதவியை ஏற்கத் தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார். இந்த மனுவை அவசர வழக்காக எடுத்து  நீதியரசர்கள் சுப்ரமணியன், புகழேந்தி ஆகியோர் அமர்வு விசாரித்து.  சங்கராபுரம் பஞ்சாயத்துத் தலைவராக பிரியதர்ஷினி பொறுப்பேற்க இடைக்காலத் தடை விதித்ததுடன் இவ்வழக்கு குறித்து தமிழகத் தேர்தல் ஆணையர் மற்றும் பிரியதர்ஷினி தரப்பினர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜனவரி10ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்..பத்தாம் தேதி வழக்கு நிலவரம் அறிய வாக்களித்த  சங்கராபுரம் வாக்காளர்கள் மட்டுமல்ல அரசியல் பார்வையாளர்கள் பார்வை  முழுவதும் உள்ள நிலை. காரணம் பல..சங்கராபுரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிதான் திருஉடையார்பட்டி என்ற கழனிவாசல் இதில் சேதுபதி மன்னர் ரகுநாதன் என்ற கிழவன் சேதுபதி 1720 ல் வழங்கிய பிரம்மதாய இருவார இனாம் நிலங்களில் தேவகோட்டை நீதிமன்ற அசல் வழக்கு 102/ 1946 தீர்ப்புக்கு முரண்பாடாக நடந்த முறைகேடுகள் மற்றும்  ஊழல்கள் தற்போது சென்னை உதவி நில வரித்திட்ட அலுவலரை நீதிமன்ற அவமமதிப்புக்கு உள்ளாக்கும் நிலை வரை சென்றதே காரணம். பல  கோடிகளை இந்த இடங்களில் மோசடி விற்பனையில் சம்பாதித்தவர்கள் மற்றும் நில புரோக்கர்கள் கூட்டம் தான் இந்த தேர்தலில் பணங்கள் வாரி இருக்கக் காரணமாக அமைகின்றன ஊழல் தடுக்காமல் வேடிக்கை பார்க்கும் நிர்வாகமும் மறைமுகக் காரணம் ..இந்த வேட்பாளர்களின் கடந்த 20 வருடங்களுக்கு முன் உள்ள பின்னணி மிகவும் சுமாரானதே .இருவரும் சங்கராபுரம் பகுதியில் பூர்வீகமாக வசித்து வந்த குடும்பத்தினர் இல்லை வந்து குடியேறியவர்கள் தான் அதன் பின் வந்த வளர்ச்சி பலரையும் வாய்பிளக்க வைக்கக் காரணம் பணம் பார்க்கும் தங்கச்சுரங்கம் தான் சங்கராபுரம்  பஞ்சாயத்து இந்நிலையில் இவ் வழக்கு நீதியரசர்கள்  துரைசுவாமி, ரவீந்திரன் அமர்வில் நேற்று மீண்டும்  விசாரணைக்கு வந்தது.
தேவி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,"ஒருமுறை தேர்தலில் வெற்றி பெற்றதாக சான்றிதழ் வழங்கிய பின் அதனை ரத்து செய்ய தேர்தல் அலுவலருக்கு அதிகாரம் இல்லை எனத் தெரிவித்தார்.


இதையடுத்து நீதிபதிகள், அந்த அதிகாரம் மாவட்ட நீதிமன்றத்திற்கே உள்ளது. அதனை தேர்தல் அலுவலர் எவ்வாறு பயன்படுத்தலாம்என கேள்வி எழுப்பினர்.  தொடர்ந்து, பிரியதர்சினி தரப்பு வாதத்தை கேட்பதற்காக, ஜனவரி 13ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தும், அதுவரை பிரியதர்ஷினி சங்கராபுரம் பஞ்சாயத்து தலைவியாக  பதவி ஏற்க விதிக்கப்பட்ட தடைதொடரும் எனவும் உத்தரவிட்டனர்.”சிசிடிவி பதிவுகளை தாக்கல் செய்ய மேலும் அவகாசம் தர இயலாது"
மாநில தேர்தல் ஆணையத்தின் கோரிக்கையை நிராகரித்தது உயர் நீதிமன்ற மதுரைக் கிளை.
தேர்தல் ஆணையம் சொல்லும் காரணங்கள் ஏற்கத்தக்கதாக இல்லை - உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கில் அதிரடி. அணைவரின் பார்வையும் திரும்பக் காரணமாக உள்ளன..ஊருக்கு நன்மை செய்து பலருக்கு சொந்தமாக வீடுகட்ட உதவிய கோயமுத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் வட்டம் ஓடந்துறை பஞ்சாயத்து  57 ஓட்டு வித்தியாசத்தில் திரு.R.சண்முகம் தோற்க காரணம் சாராயம்!
இந்த நாடும்,நாட்டு மக்களும் நாசமாக போகட்டும்! என்பது ஒருபடத்தில் நடிகர் மணிவண்ணன் உரையாடல் அது உண்மை தான் போல..ஓட்டுப் போட்ட ஒட்டிய வயிறுகளில்
ஒட்டிக் கொண்டிருக்கும் கனவுகள் எல்லாம்
ஒட்ட நறுக்கப்படும்...
பெட்டிகளுக்குள் அடைக்கப் படும் தன்மானம்....
கோட்டைக்குள் சிறையிடப்படும் மனிதாபிமானம்..
இந்த முறையேனும் விடியுமெனும் நம்பிக்கையில்
விரல் நீட்டிக் கொண்டிருக்கும் வாக்குச் சாவடி முன்
ஓர் வறுமைக் கூட்டம்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்