முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒரே நாடு - ஒரேகார்டு

              திட்டத்தால் பொது விநியோக முறைக்கு சாதகமா,பாதகமா.                இந்தத் திட்டத்தின் முக்கியமான அம்சம், portability. இப்போது உணவு தானியங்களை வழங்குவது என்பது மாநில அரசிடம் இருக்கிறது. ஒவ்வொரு மாநில அரசும் தனது கொள்கைக்கு ஏற்றபடி இந்த உணவு தானியங்களை நியாய விலைக்கடைகளில் வழங்குகின்றன.
தென்மாநிலங்களில் அதிகரிக்கும் வடமாநிலத்தவர் எண்ணிக்கை
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அனைவருக்குமான பொது விநியோகத் திட்டம் நடைமுறையில் இருக்கிறது. யாருக்கெல்லாம் குடும்ப அட்டை இருக்கிறதோ, அவர்கள் வாங்கிக் கொள்ளலாம். இந்தியாவில் உள்ள வேறு பல மாநிலங்கள் இலக்கு சார்ந்த பொது விநியோகத் திட்டத்தைச் செயல்படுத்தி வந்தார்கள். யாருக்குக் கொடுக்க வேண்டுமென்பதை முடிவுசெய்து, அவர்களுக்கு மட்டும் பொருட்களைக் கொடுப்பார்கள். இதுதான் தமிழகத்திற்கும் மற்ற மாநிலங்களுக்கும் இடையில் உள்ள வேறுபாடு.
ஆனால், இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், பல மாநிலங்களில் பொது விநியோகத் திட்டமே செயல்படவில்லை என்பதுதான். இந்த ஏற்றத் தாழ்வுகளைக் களையத்தான் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால்  2013 ம் ஆண்டு உணவுப் பாதுகாப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது. கிராமப்புறங்களில் உள்ள 50 சதவீதம் பேருக்கும் நகர்ப்புறங்களில் உள்ள 75 சதவீதம் பேருக்கும் ஒரு நபருக்கு ஐந்து கிலோ உணவு தானியம், மானிய விலையில் வழங்கப்படும். ஒரு கிலோ அரிசி 3 ரூபாய்க்கும் ஒரு கிலோ கோதுமை இரண்டு ரூபாய்க்கும் வழங்கப்படும். அரசியும் கோதுமையும் மத்திய அரசு தன் உணவுத் தொகுப்பிலிருந்து கொடுத்துவிடும்.
யார் யார் பயனாளிகள் எனக் கண்டறிந்து இதனை மக்களுக்கு விநியோகிக்க வேண்டியது மாநில அரசின் பொறுப்பு. ஆனால், தமிழ்நாட்டில் ஏற்கனவே எல்லோருக்கும் ரேஷன் பொருட்களை வழங்கிவந்த நிலையில், 50 லிருந்து 75 சதவீதம் பேருக்கே உணவு தானியத்தை வழங்கும் இந்தத் திட்டம் முரண்பாடாக அமைகிறது.
இந்த நிலையில், தமிழக அரசு தன் பாணியில் எல்லோருக்கும் உணவு தானியங்களை விநியோகிக்க விரும்பியது. அதையே தொடர விரும்பியது. ஆனால், மத்திய அரசு தங்கள் திட்டப்படிதான் உணவு தானியங்களை வழங்குவோம் எனக் கூறியது. அதாவது கிராமப்புறங்களில் உள்ள ரேஷன் கார்டுகளில் பாதி அளவுக்கும் நகர்ப் புறங்களில் 75 சதவீதம் பேருக்கும்தான் உணவு தானியங்களை வழங்குவோம். நீங்கள் விநியோகித்துக் கொள்ளுங்கள் என்றது மத்திய அரசு.
இந்த தானியங்களைப் பெற்றுக்கொள்ளும் தமிழக அரசு இரண்டு பிரிவுகளாக இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துகிறது:
தானியங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன. மத்திய அரசு சொல்வதைப் போல ஒரு நபருக்கு ஐந்து கிலோ என்று பார்த்து வழங்காமல் ஒரு குடும்பத்திற்கு இருபது கிலோ கொடுத்துவிடுகிறார்கள்.
அடுத்ததாக மத்திய அரசு அந்த்யோதயா அன்னயோஜனா என்ற திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. அவர்களுக்கு 35 கிலோ தானியம் மத்திய அரசு வழங்குகிறது. அதனை அப்படியே கொடுத்துவிடுகிறது.
மாநில அரசு எல்லோருக்கும் உணவு தானியங்களைக் கொடுப்பதால், மத்தியத் தொகுப்பிலிருந்து வரும் அரிசி போதுமானதாக இருப்பதில்லை. ஆகவே வெளிச் சந்தையிலிருந்து வாங்கி, அதனை மக்களுக்கு விநியோகிக்கிறார்கள். இதில் ஒவ்வொரு ஆண்டும் மாநில அரசுக்கு ஐயாயிரம் முதல் ஆறாயிரம் கோடி ரூபாய் அளவுக்குச் செலவாகிறது.
ஆனால், இப்போது எங்கு வேண்டுமானாலும் ரேஷன் பொருட்களை வாங்கிக்கொள்ளலாம் என்ற திட்டத்தில் இணையும்போது பல சிக்கல்கள் வரும். அதை எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்பது தெரியவில்லை.
. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு துவக்கத்தில் உணவுப் பாதுகாப்பு குறித்து மட்டும்தான் பேசினார்கள். பிறகு ஆதார் அறிமுகமான பிறகு, அதையும் ரேஷன் கார்டுகளையும் இணைக்க வேண்டுமெனக் கூறினார்கள். அப்படி இணைக்கப்பட்ட பிறகு சில வசதிகள் கிடைத்தன.
அதாவது, ஆதார் எண்ணை வைத்து யாருடைய கார்டையும் அடையாளம் காண முடியும். அவர்கள் என்ன பொருட்களைப் பெற்றிருக்கிறார்கள் என்பதையும் பார்க்க முடியும். இந்த வசதியை வைத்துக்கொண்டு, நாட்டின் எந்த ஒரு கடையிலும் பொருட்கள் வாங்கலாம் என்பதை ஒரு திட்டமாக  முன்வைத்தார்கள்.
இந்தத் திட்டம் இப்போது நான்கு மாநிலங்களில் செயலில் இருக்கிறது. இன்னும் சில மாநிலங்களில் வரவிருக்கிறது. ஏப்ரல் 2020 க்குள் எல்லா மாநிலங்களையும் இந்தத் திட்டத்தில் இணைக்க முடியும் 
 நாடு வளர்ச்சிபெறும்போது புலம்பெயர்தல் பெரிய அளவில் நடக்கிறது. தமிழ்நாட்டிலேயே பெரிய அளவில் வட இந்தியத் தொழிலாளர்களும் கிழக்கிந்தியத் தொழிலாளர்களும் வந்து வேலை பார்க்கிறார்கள். அவர்களால் அவர்கள் மாநிலத்தில் உள்ள ரேஷன் அட்டைகளை வேலை பார்க்கும் மாநிலத்தில் பயன்படுத்த முடியாது.
அதனால், பொது விநியோகத்திலிருந்து விடுபடுவார்கள். குறிப்பாக தற்காலிகமாக பணியாற்றும் தொழிலாளர்கள். இம்மாதிரி, ஓரே நாடு - ஒரே ரேஷன் கார்டு திட்டத்தைக் கொண்டுவந்தால், அவர்களும் பயன்பெறுவார்கள் என்பதுதான் நோக்கம் அது ஒரு சிக்கல்தான். வேறு பெரிய பிரச்சனைகளும் இருக்கின்றன. அவையெல்லாம் யோசிக்கப்பட்டனவா இல்லையா எனத் தெரியவில்லை. முதலாவதாக, இந்த உணவு அட்டை என்பது குடும்பத்திற்கு வழங்கப்படுகிறது. தனி நபர்களுக்கு வழங்கப்படுகிறது. ஆனால், அவர்கள் புலம் பெயர்ந்து வரும்போது தனி நபர்களாகத்தான் புலம் பெயர்கிறார்கள்.
குடும்பத்தை சொந்த ஊரில் விட்டுவிட்டு, வேறு ஊருக்கு சென்று வேலை பார்த்து பணம் அனுப்புகிறார்கள். அம்மாதிரியான சூழலில் அந்த அட்டை யார் வசம் இருக்கும்? அந்த அட்டையை புலம்பெயர்பவர் எடுத்துவந்தால், குடும்பம் என்ன செய்யும்? குடும்பத்தின் வசம் அட்டை இருந்தால், வேறு மாநிலத்திற்குச் சென்று வேலை பார்ப்பவர் எப்படி இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெறுவார்?
இரண்டாவதாக, ஆதார் அட்டையோடு ரேஷன் அட்டை இணைக்கப்படும்போது, குடும்பத் தலைவரின் எண் இணைக்கப்படுகிறது. அவர் இல்லாதபோது, அந்தக் குடும்பம் எப்படி ரேஷன் பொருட்களைப் பெறுமெனத் தெரியவில்லை.
மூன்றாவதாக, ரேஷன் கடைகள் ஒவ்வொன்றிலும் எத்தனை பேர் பலன் பெறுகிறார்கள் என்பதைக் கணக்கிட்டு பொருட்கள் வருகின்றன. திடீரென ஒரு ஐநூறு புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் ஒரு கடையில் சென்று பொருள் கேட்டால் எப்படிக் கொடுக்க முடியும்? அரசிடம் எழுதிக் கேட்டு, அடுத்த மாதம் வாங்கித் தரலாம்.
ஆனால், அடுத்த மாதம் அந்தத் தொழிலாளர்கள் வேறு இடத்திற்கு பலம்பெயர்ந்திருப்பார்கள். இவர்கள் தொடர்ந்து புலம் பெயர்ந்துகொண்டேயிருப்பார்கள். இதை எப்படி கணக்கில் வைப்பது? எப்படி கிடங்கில் அதற்கேற்றபடி உணவுதானியங்களைச் சேமித்துவைப்பது? இதற்கு எப்படி திட்டமிட்டிருக்கிறார்கள் எனத் தெரியவில்லை. மிக dynamicஆக செயல்பட வேண்டும் என்கிறார்கள்
'வட இந்தியர்கள் தமிழ்நாட்டைத் தேடி வருவது வேலைவாய்ப்புக்கு மட்டுமல்ல'
இன்றைக்கு தொழிலாளர்கள் வந்து கேட்டால், நாளை இந்திய உணவுக் கழக கிடங்கிலிருந்து உணவு தானியத்தை அனுப்பிவிட முடியுமா? இதற்கான தொழில்நுட்பம் நம்மிடம் இருக்கிறதா?
இதைவிட முக்கியமான விஷயம், இந்தத் திட்டத்தை செயல்படுத்த இணைய இணைப்பு வேண்டும். பல இடங்களில் இப்போதே ஆதார் குறியீட்டை இயந்திரங்களால் படிக்க முடியவில்லை. இப்போதும்கூட பல கிராமங்களில் போன் பேசவே உயரமான இடம் செல்ல வேண்டியிருக்கிறது. அங்கே இணைய இணைப்பைப் பற்றி எப்படி யோசிப்பது?
இது தவிர, வேறொரு முக்கியமான பிரச்சனை இருக்கிறது. அதாவது, உணவு தானிய ஒதுக்கீட்டில் உள்ள பிரச்சனை. உதாரணமாக, பிஹாரைச் சேர்ந்த ஒருவர் இங்கே உணவு தானியம் வாங்குகிறார் என வைத்துக்கொள்வோம். ஆகவே பிஹாருக்கு உணவு தானியம் ஒதுக்கீடு செய்யும்போது, அவருக்கான அளவைக் குறைத்துவிட்டு, தமிழகத்திற்கு அதனை அதிகரித்துத் தரவேண்டும். இதை எப்படிச் செய்யப் போகிறார்கள்?
பெரிதாக பிரச்சனை வராது. ஏற்கனவே உள்ள நடைமுறை தொடரும். ஆனால், ஒரே நாடு - ஒரு கார்டு திட்டத்தில் இணைந்து சில நாட்களுக்குப் பிறகு, எல்லோருக்கும் ஒரே மாதிரிதான் விநியோகிக்க வேண்டுமெனக் கூறினால், தமிழ்நாடுபோல கூடுதலாக உணவு தானியங்களை இலவசமாக வழங்கி வரும் மாநிலங்கள் என்ன செய்ய முடியுமெனத் தெரியவில்லை.
இந்தத் திட்டத்திற்காக மத்திய அரசு பெரும் அளவில் நிதி வழங்குகிறது. நாங்கள் சொல்வதுபடி செய்தால்தான் நிதியளிக்க முடியும். இல்லாவிட்டால் நீங்கள்தான் பார்த்துக்கொள்ள வேண்டுமெனக் கூறினால், ஏற்கனவே நிதிச் சுமையில் உள்ள தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் என்ன செய்ய முடியும்? மானியங்களைக் கொடுக்க ஏற்படும் சிக்கல்தான் பெரிய சிக்கல். ஏனென்றால், கடந்த சில மாதங்களாகவே எதிர்பார்த்த அளவுக்கு வரி வசூலாகவில்லை. இது மத்திய அரசை மட்டும் பாதிக்காது. மாநில அரசுகளையும் பாதிக்கும். மாநில அரசுகள் வசூலிக்கும் வரியும் குறையும். மத்தியத் தொகுப்பிலிருந்து வரும் வருவாயும் குறையும்.
மேலும், மத்திய அரசு பல வரிகளை, Cess எனப்படும் சிறப்பு நிதியாக வசூலிக்கிறது. அவற்றை மாநிலங்களோடு பிரித்துக்கொள்ளத் தேவையில்லை. இப்போது ரிசர்வ் வங்கியிலிருந்து 1.76 லட்சம் கோடி ரூபாயைப் பெற்றார்கள். அதையும் மாநிலங்களோடு பகிரத் தேவையில்லை. இப்படி தொடர்ச்சியாக மாநில அரசுகளின் வரி வருவாய் குறைந்துகொண்டே போகிறது. ஆகவே மாநில அரசுகளால் புதிதாக எதையும் செய்வதற்கான இடமே இருக்காது.
கே. ஒரே நாடு - ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை அறிமுகப்படுத்தினால், எதிர்காலத்தில் எல்லோருக்குமான ரேஷன் திட்டம் நிறுத்தப்படலாம் என்ற அச்சம் இருக்கிறது. ஆனால், வசதியானவர்களுக்கு எதிர்காக ரேஷன் பொருட்களைக் கொடுக்க வேண்டும் என்ற கேள்வி இருக்கிறது.
 உணவுப் பொருட்களைக் கொடுக்கும்போது யாருக்கு அவற்றைக் கொடுப்பது என அடையாளம் காண்பது சிக்கலான வேலை. வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ளவர்களுக்குக் கொடுக்கலாம் என்கிறார்கள். இவர்கள் யாருக்குமே வறுமைக் கோட்டை எப்படி கணக்கிடுவது என்பதே தெரியாது. காரணம் வருவாயைப் பற்றி விவரங்கள் நம்மிடம் துல்லியமாக இல்லை. இந்தியாவில் இப்போதுவரை வருவாயைப் பற்றிய புள்ளிவிவரங்கள் கிடையாது. செலவைப் பற்றிய விவரங்கள் மட்டுமே உண்டு. காரணம், பெரும்பாலானவர்கள் அமைப்புசாராத் தொழில்களில் இருக்கிறார்கள்.
இதனால், வறுமைக் கோட்டை செலவுசெய்வதை வைத்து தீர்மானிக்கிறார்கள். அப்படி இருக்கும்போது அதனை வைத்து உணவு தானியம் பெறுவதற்கு ஒருவர் தகுதியா, இல்லையா என்பதைத் தீர்மானிக்க முடியாது. அதையும் மீறி, ஒரு கோட்டை வைத்து, அதற்குக் கீழ் இருப்பவர்களுக்குத்தான் உணவு தானியம் என்று சொன்னால், தேவையான பலர் விடுபடும் வாய்ப்பு இருக்கிறது. இது பல ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
தேவையில்லாத சிலர் இதனால் பயன்பெறுவார்களே என சமுதாய அக்கறை உள்ளவர்களும் ஆட்சியில் உள்ளவர்களும் மேலே சொன்ன இரண்டில் எது மோசமானது என்பதைத் தீர்மானிக்க வேண்டும். அதாவது, தேவையில்லாத சிலர் பயன்பெறுவது மோசமானதா, அல்லது தேவையுள்ள சிலருக்கு பொருட்கள் கிடைக்காமல் அவர்கள் ஏங்கிக் கிடப்பதா என்பதைத் தீர்மானிக்க வேண்டும். ஒரு மக்கள் நல அரசு பட்டினியில் இருப்பவர் வாடக்கூடாது என்றுதான் நினைக்கும். இந்தப் பொது விநியோகத் திட்டம் இல்லாவிட்டாலும் வருவார்கள். இந்தியப் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க உற்பத்தியை தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா ஆகிய நான்கு மாநிலங்கள்தான் தருகின்றன. அந்த அளவுக்கு பணிகள் இங்கே நடக்கின்றன. அப்படி நடக்கும்போது ஆட் பற்றாக்குறை ஏற்படுகிறது.
அதனால், வேலை இல்லாத வட மாநிலங்களில் இருந்து, வேலை வாய்ப்பு உள்ள பகுதியை நோக்கி வருகிறார்கள். அவர்களால்தான் இந்த வேலைகள் நடக்கின்றன. வட மாநிலத் தொழிலாளர்கள் இருக்கக்கூடாது என்றால் கட்டுமானத் தொழில் வீழ்ந்துவிடும். ஹோட்டல் தொழிலுக்கு ஆட்கள் இல்லை. அவர்களாக வரவில்லை. நீங்கள்தான் அழைத்துவருகிறீர்கள். அவர்கள் வெறும் ரேஷன் பொருட்களைப் பெறுவதற்காக வரவில்லை.
 கண்டிப்பாக சரி. தொழிலாளர்கள் புலம்பெயர்ந்து வேலை செய்யும் நிலையில் அவர்களுக்கு உணவுப் பாதுகாப்பு அளிப்பது என்பது மிக முக்கியமான விஷயம். நாம் கேட்க வேண்டியது என்னவென்றால், தமிழ்நாட்டில் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வரும் சிறப்பான பொது விநியோகத் திட்டத்தை பாதுகாக்க என்ன செய்யப்போகிறோம் என்பதைத்தான்.
கூடுதல் செலவு ஏற்பட்டால், அதனை மத்திய அரசு கொடுக்குமா என்பதையும் பார்க்க வேண்டும். மூன்றாவதாக, பொருட்களைக் கொண்டுசெல்வதில் உள்ள பிரச்சனை. இதைக் கவனித்தால் போதும்..ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம் நடைமுறைப்படுத்த அரசாணை வெளியிட்டது தமிழக அரசு. 


தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்கள், மாநிலத்தில் உள்ள எந்த ரேசன் கடைகளிலும் பொருட்களை பெற்றுக்கொள்ளும் வசதி, முதற்கட்டமாக துாத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் தமிழக அரசு நடைமுறைப்படுத்த உள்ளது. . அதனை தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட உள்ளது. தமிழகஅரசின் பொங்கல்பரிசு 
வாங்க வரிசையில் நிற்கும் இந்திக்காரன்
இடம்:அவதானப்பட்டி
ரேசன் கடை
கிருட்டினகிரி மாவட்டம்
ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம் தமிழகத்தில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த