தன்னார்வலர்கள் 24 மணி நேரத்திற்கு முன்னதாக சென்னை மாநகராட்சியிடம் அனுமதி பெற்று அதிகாரிகள் முன்னிலையில் விநியோகிக்க வேண்டும் வாகன ஓட்டுனர், விநியோகம் செய்பவர், உதவியாளர் 3 பேருக்கு மட்டுமே அனுமதி அமைப்பு, அரசியல் கட்சி உள்ளிட்ட எந்த விதமான விளம்பரங்களையும் பயன்படுத்தக் கூடாதுசுனாமி, பெரு வெள்ளம், புயல், போன்ற பேரிடர் காலங்களில் பொது மக்களின் வீடுகள், தினசரி உபயோகப் பொருட்கள்,
வாழ்வாதாரம் போன்றவை இழந்து நின்ற சோதனைக் காலகட்டத்தில் தன்னார்வலர்கள் மற்றும் அமைப்புகளின் பணிகள் மகத்தானது. தமிழ்நாடு அரசு மனமுவந்து பாராட்டியதே தவிர, நிவாரணம் வழங்க எந்த ஒரு கட்டுப்பாடும் விதிக்கவில்லை. அப்போதைய சூழ்நிலையில், பொது மக்கள் கூடுவதற்கு தடை உத்தரவுகள் கிடையாது. ஆனால் இந்த பேரிடர், கொடிய வைரஸ் தொற்றினால் ஏற்பட்டுள்ளது.
இதன் விளைவுகளை எல்லோரும் அறிவோம். இந்தத் தொற்று யாரிடம் உள்ளது, அது எப்போது, யாருக்கு யார் மூலம் பரவும் என தெரியாது இந்தச் சூழ்நிலையில், தன்னார்வலர்களும், தொண்டு நிறுவனங்களும், தனிப்பட்ட முறையில் உதவி செய்பவர்களும், நோய்த் தொற்றிலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ளவும், பரவுவதை தவிர்க்கவும், முறையான அணுகுமுறையை கடைபிடிக்க வேண்டும். எனவே, புயல், வெள்ளம், வறட்சி போன்ற பேரிடர் காலங்களில் உதவுவது போல தற்போது உதவி செய்ய ஆரம்பித்து விட்டால், நோய்த் தொற்று தான் அதிகமாகும் அதனால் எந்த ஒரு அமைப்பும் நிவாரணம் வழங்கினாலும், அதை முறையாக வழங்க அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவரிடமோ, மாநகராட்சிகளில் மாநகராட்சி ஆணையரிடமோ, மண்டல அலுவலர்களிடமோ, நகராட்சி யானால் ஆணையரிடமோ, பேரூராட்சியானால் செயல் அலுவலரிடமோ, ஊராட்சி ஒன்றியமானால் வட்டார வளர்ச்சி அலுவலரிடமோ வழங்கலாம்.
மேலும், இத்தகைய உதவிகளை செய்ய சம்பந்தப்பட்ட வருவாய்த் துறை அதிகாரிகளையும் அணுகலாம். இதை விநியோகப்பதற்கென அரசால் நியமிக்கப்பட்ட அலுவலர்கள் மூலம் தேவையான அனைவருக்கும் சென்றடையும் வகையிலும், தன்னார்வ அமைப்புகள் வழங்கும் மளிகைப் பொருட்கள், காய்கறிகள், சமைத்த உணவு மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை அவர்கள் குறிப்பிடும் பகுதிகளுக்கோ நபர்களுக்கோ வழங்க ஏற்பாடு செய்யப்படும்.
இப்பணியில் தன்னார்வலர்களும் மாவட்ட ஆட்சியர்களின் அனுமதியோடு மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து ஈடுபடலாம். அதற்கென சம்பந்தப்பட்ட அலுவலரின் தொலைபேசி மற்றும் கைபேசி எண்களும் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.
இதற்குப் பொது மக்களும், தொண்டு நிறுவனங்களும், தன்னார்வலர்களும் அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, மாநில அளவில் கொரோனா நிவாரணத்தை ஒருங்கிணைத்து செயல்படுத்த ஏற்படுத்தப்பட்ட 12 குழுக்களில், ஒரு குழு தன்னார்வலர்களின் தனித்திறன் மற்றும் ஆர்வத்தை பயனுள்ள முறையில் பயன்படுத்துவதற்கு, மூத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் தலைமையில் ஏற்படுத்தப்பட்டு, இப்பணிகள் சீரிய முறையில் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே முதியோர், மாற்றுத் திறனாளிகள், நம் மாநில மற்றும் இதர மாநில தொழிலாளர்கள், ஆதரவற்றோர் போன்றோருக்கு நிவாரணம் மற்றும் உதவிகள் வழங்கிட, 2,500க்கு மேற்பட்ட நிறுவனங்களும், 58 ஆயிரம் தன்னார்வலர்களும் தமிழ்நாடு அரசிடம் பதிவு செய்து கொண்டு, மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து, சமூக இடைவெளி மற்றும் பொது சுகாதார பாதுகாப்பு நெறிமுறைகளை கடைபிடித்து நிவாரண உதவிகளை வழங்கிக் கொண்டு தான் இருக்கின்றனர்.
இணையத்தளத்தில் பதிவு செய்து கொண்டு, ஒவ்வொரு மாவட்டத்திலும் நிவாரணம் மற்றும் தன்னாவலர்களை ஒருங்கிணைப்பதற்காக அரசால் நியமனம் செய்யப்பட்டுள்ள அலுவலர்கள் மூலம் நிவாரணங்கள் ஒருங்கிணைந்து வழங்கப்பட்டு வருகின்றன.
எனவே, அரசின் நோக்கம் உதவி செய்வதைத் தடுப்பது அல்ல. தற்போதைய நோய்த் தொற்று சூழ்நிலையை கருத்தில் கொண்டு, நிவாரண உதவிகள் முறையாகவும், பாதுகாப்பாகவும் வழங்கப்பட வேண்டும் என்பது தான் அரசின் நிலைப்பாடு.
இதற்கு ஓரிரு நியாய விலைக் கடைகளில் கூடும் கூட்டத்தை காரணம் காட்டி, நியாயப்படுத்தி பேசுவதும் சரியல்ல. நியாய விலைக் கடைகள், பிற அன்றாட வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் இதர கடைகளில் கூடும் கூட்டத்திலும், சமூக இடைவெளியைக் கடைபிடிக்க அறிவுறுத்தியுள்ள இந்த அரசு, அதை தீவிரமாக கண்காணித்தும் வருகிறது. ஏற்கனவே, அரசு 12.ஏப்ரல் 2020 ல் வெளியிட்டுள்ள செய்தி வெளியீட்டில் குறிப்பிடப்பட்ட அம்சங்கள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு உள்ளன.
சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் உரிய வழிமுறைகளைப் பின்பற்றி செயல்படத் தான் அரசு கேட்டுக் கொண்டுள்ளதே தவிர,
யாருக்கும் தடை விதிக்கவில்லை. மாறாக விருப்பத்தோடு வரும் தன்னார்வலர்கள் மற்றும் இதர தொண்டு நிறுவனங்களின் நிவாரண உதவிகள், மாவட்ட நிர்வாகத்தோடு இணைந்து செயல்பட்டு, தேவைப்படும் பொது மக்களுக்கு பாதுகாப்பான முறையில் சென்றடைவதை உறுதி செய்யத்தான் அரசு அறிவுறுத்தியதே தவிர, தடை விதிக்கவில்லை என தெளிவு படுத்தப்படுகிறது.இந்நிலையில், மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவரும்,திரு. வைகோ மற்றும் திரு. கே.எஸ்.அழகிரி போன்ற தலைவர்களும், பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு தன்னார்வலர்கள் உதவி செய்வதற்கு அரசு தடை விதித்து விட்டது போல் உண்மைக்குப் புறம்பாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். இதில் அரசு, எந்தவிதமான அரசியலும் செய்யவில்லை. கொடிய கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுக்கும் தமிழ்நாடு அரசின் இந்த உண்மையான நோக்கத்தை புரிந்து கொண்டு, அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது. இது திருச்சியில் இரண்டு மாங்காய் வழங்கிய அமைச்சருக்கும், இரண்டு வாழைப்பழம் வழங்கியவர்கள் அரசியல் செய்யும் களம் இதுவல்ல என இந்த நடைமுறை நல்லது தானே.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர். போகிற வழியில் ஆடு மேய்க்கும் பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்
கருத்துகள்