கோவிட்-19 கொடுமைக்கிடையே, இணையக் கருத்தரங்கம் காண, கேட்க வருகவென புதுக்கோட்டை கவிஞர் நா.முத்து நிலவன் அழைக்கிறார்
உலகையே புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கும்
கரோனா தீநுண்மியால் கடந்த ஒரு மாதமாக மட்டுமின்றி இன்னும் ஓரிரு மாதங்களுக்கு நமது இயல்பு வாழ்க்கை பாதிப்பதை நாம் அனுபவித்துத்தான் தீரவேண்டும் போல!
கரோனா கொடுமைகள் -பேரிடர் காலத்து வழக்கம் போல- ஏழைகளையே பெரிதும் பாதிக்கின்றன..
இது பற்றித் தனியே பேசுவோம்
நான் சொல்வது ஊரடங்கு தந்த நேரம்…
வாழ்க்கையை வணிக லாபநோக்கில் மட்டுமே பார்த்தவர்களுக்கு கரோனா தந்திருப்பது
மிகப் பெரிய பாடம்தான்!
(இதில் தொடர்பில்லாத நமக்கும் தான்!)
“கெட்டதிலும் சில நல்லதுகள்”
நடக்கத்தானே செய்கின்றன!
படிக்க எழுத நினைப்போர்க்கும்
என்னைப் போல்
குடும்பத்தோடு நேரம் செலவழிக்க நினைப்போர்க்கும்
--சிலர் தவமிருந்து பெற்ற சாபம் என்று சொன்னாலும்--
இது தவமின்றிப் பெற்ற வரம்தானே?
எந்த நேரத்திலும் –
போர்க்களத்திலும் புத்தகம் வாசித்த காஸ்ட்ரோ அளவுக்கு இல்லையென்றாலும் – நாமும் ஏதாவது செய்யத்தானே வேண்டும்?
அப்படி ஒரு வாய்ப்பு இது
வாருங்கள்
இணையத் தமிழால் இணைவோம்!
முன்னிலும் புதியதோர் உலகம் செய்வோம்
என்படத்துடன் உள்ள அழைப்பிதழில் காணப்படும்
Meeting ID & Password கொடுத்தால்
நீங்களும் இணையலாம்.
ஒருமணிநேரப் பேச்சைக் கேட்பதோடு,
கேள்வி-பதிலிலும் இணையலாம்.
வருக! வருக நண்பர்களே!
இணையவெளியில் சந்திப்போம்!
அதோடு ஒரு கூடுதல்
வானொலிச் செய்தி -
நாளை 16.4.20 (வியாழன்) இரவு10மணி
செய்திகளுக்குப் பிறகு,
'ஞாபகம் வருதே!' எனும்
எனக்குப் பிடித்த திரையிசைத்தொகுப்பு
ஒருமணிநேர ஒலிபரப்பு
102.1ரெயின்போ பண்பலை மற்றும்
அலைவரிசை 936 திருச்சி வானொலி
இரண்டிலும் வருகிறது!
கேட்டுப் பாருங்களேன்
வணக்கம்.எனும் கவிஞர் தகவல் பயனாக்குவீர்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர். போகிற வழியில் ஆடு மேய்க்கும் பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்
கருத்துகள்