வராக்கடன் தள்ளுபடி செய்யப்படாது. கடன் வாங்கிய நபரிடமிருந்து தொகையைப் பெறும் முயற்சியே ரிசர்வ் வங்கித் தகவல்
சமூக ஊடகங்களில் புரிந்து கொள்ளாத ஒரு செய்தி உலா வங்கிகளில் கடன் தள்ளுபடி செய்யப்பட வில்லை. Writing Off Loan என்பதும் Waiving Off Loan என்பதும் வெவ்வேறாகும். Writing Off Loan என்பது வங்கியின் பேலன்ஸ் சீட்லிருந்து பல வருடங்களாக வசூலிக்க முடியாத கடன்களை ரிசர்வ் வங்கி "Write Off" செய்வார்கள். இது காலம்காலமாக நடைபெறும் நடைமுறைகளில்ஒன்று. கடன்கள் (Write Off) தள்ளிவைப்பு செய்யப்பட்டாலும் வசூலிக்கப்படும். இது போன்று பல முறை கடன்கள் Write Off செய்யப்பட்டு வசூலிக்கப் பட்டுள்ளது. ஆனால் தள்ளுபடிக் கடன் என்பது கடன்களை தள்ளுபடி செய்வதாகும். கணக்கியல் ரீதியாக ரூ.68 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி. மெகுல் சோக்ஸி உள்பட கடனைத் திருப்பிச் செலுத்தாத முதல் 50 பேரும் அடக்கம் எனஆர்டிஐயில் தகவல். பெற்றதாக
வைர நகை வர்த்தகர் மெகுல் சோக்ஸி கடன் உள்பட வங்கியில் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் இருக்கும் முதல் 50 பேரின் கடன் என மொத்தம் ரூ.68 ஆயிரம் கோடி கடனை “கணக்கியல் ரீதியாக” வங்கிகள் தள்ளுபடி செய்துள்ளன என்று தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் ரிசர்வ் வங்கி அளித்த தகவலில் தெரியவந்துள்ளது என பலரும் தற்போது விவாதங்கள் நடத்தி வரும் நிலையில்.
“டெக்னிக்கலி ரைட் ஆப்” அல்லது “கணக்கியல் ரீதியாக தள்ளுபடி” என்பது வங்கியின் வரவு-செலவுக் கணக்கில் மேற்கொள்ளப்டும் செயலாகும். அதாவது ரிசர்வ் வங்கிக்கு அளிக்கும் கணக்கில் ஒரு வங்கி தனது வாராக்கடனை, செயல்படா சொத்துகளைத் தள்ளுபடி செய்ததாக கணக்கீடு ரீதியாகக் காண்பிக்கும். ஆனால், கடன் கொடுத்த வங்கிக் கிளையைப் பொறுத்தவரை இந்தக் கடன் தள்ளுபடி செய்யப்படாது. கடன் வாங்கிய நபரிடம் இருந்து கடன் தொகையைப் பெறும் முயற்சி தொடர்ந்து நடக்கும்.
தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர் சாகேத் கோகலே தாக்கல் செய்த மனுவில், பிப்ரவரி 16-ம் தேதி வரை கடன் வாங்கி வேண்டுமென்றே திருப்பிச் செலுத்தாமல் இருக்கும் முதல் 50 நபர்கள் பட்டியலை ரிசர்வ் வங்கியிடம் கேட்டிருந்தார். அதில் ரூ.68 ஆயிரம் கோடி தள்ளுபடி செய்யப்பட்டது தெரியவந்துள்ளது
இதுகுறித்து ஆர்டிஐ ஆர்வலர் சாகேத் கோகலே நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
''கடந்த பிப்ரவரி 16-ம் தேதி காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் ஒரு கேள்வி எழு்பினார். அதில் கடன் வாங்கி வேண்டுமென்றே திருப்பிச் செலுத்தாமல் இருக்கும் முதல் 5 0நபர்கள் பட்டியலைக் கேட்டிருந்தார். அந்தக் கேள்விக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இணையமைச்சர் அனுராக் தாக்கூர் இருவரும் பதில் அளிக்க மறுத்துவிட்டனர்.
இதையடுத்து, வங்கிகளில் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் இருக்கும் முதல் 50 பேரின் பட்டியலைத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ரிசர்வ் வங்கியில் கேட்டிருந்தேன்.
ரிசர்வ் வங்கியின் தகவல் அதிகாரி அபய் குமார் கடந்த 24-ம் தேதி எனக்குப் பட்டியலை அளித்திருந்தார். அதில் 2019-ம் ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி வரை வங்கிகள் சார்பில் ரூ.68 ஆயிரம் கோடி கடன் கணக்கியல் ரீதியாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதில் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாதவர்களின் முதல் 50 பேரின் பட்டியலில் மெகுல் சோக்ஸியின் கடனும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
இதில் மெகுல் சோக்ஸிக்குச் சொந்தமான கீதாஞ்சலி ஜெம்ஸ் சார்பில் ரூ.5,492 கோடி கடன் , கில்லி இந்தியா சார்பில் ரூ.1447 கோடி கடன், நட்சத்திர பிராண்ட் சார்பில் ரூ.1,109 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது மெகுல் சோக்ஸி, ஆன்டிகுவா பர்படாஸ் தீவில் குடியுரிமை பெற்று வாழ்ந்து வருகிறார். அவரின் உறவினர் நிரவ் மோடி லண்டனில் இருக்கிறார்.
2-வது பெரிய கடன்காரராக ஆஇஐ அக்ரோ நிறுவனம் ரூ.4,314 கோடி கடன் பெற்றுள்ளது. மேலும், சந்தீப் ஜூஜன்வாலா, சஞ்சய் ஜூஜூன்வாலா ஆகியோரும் இந்தக் கடன் பட்டியலில் அடக்கம். அடுத்ததாக, வைர வியாபாரி ஜதின் மேத்தா ரூ.4,076 கோடி கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் இருக்கிறார். இவர்களின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டாலும் சிபிஐ அமைப்பு தேடி வருகிறது.
2 ஆயிரம் கோடி வரை கடன் பெற்ற வகையில் ரோட்டாமாக் குளோபல் நிறுவனம், கோத்தாராரி குழுமம் (ரூ.2,850 கோடி), குடோஸ் கெமி (ரூ.2,326 கோடி), பாபா ராம்தேவ் பாலகிருஷ்ணா குழு நிறுவனத்தின் ருச்சி சோயா நிறுவனம் (ரூ.2,212 கோடி), ஜூம் டெவலப்பர்ஸ் பிரைவேட் (ரூ.2,012 கோடி) ஆகியவை உள்ளன.
ஆயிரம் கோடிக்கு மேல் கடன் பெற்ற வகையில் 18 நிறுவனங்கள் இருக்கின்றன. இதில் விஜய் மல்லையாவன் கிங் பிஷர் நிறுவனமும் அடங்கும். ஆயிரம் கோடிக்குள்ளாக 25 நிறுவனங்கள் இருக்கின்றன. இதில் தனிநபர்கள் முதல் நிறுவனங்கள் வரை இருக்கின்றன.
50 பேர் பட்டியலில் அதிகமான கடன் பெற்றது தங்கம், வைர நகை வர்த்தகர்கள்தான். முக்கியமான தேசிய வங்கிகளில் இவர்கள் கடன் பெற்று வெளிநாடுகளுக்குத் தப்பிச்சென்று மறைந்து வாழ்ந்து வருகிறார்கள். இவர்களைப் பிடிக்கும் முயற்சியும், கடன் மீட்கும் முயற்சியும் தொடர்ந்து நடந்து வருகிறது''.
இவ்வாறு சாகேத் கோகலே தெரிவித்தார்.தகவலறியும் உரிமை சட்டத்தின் மூலம் 68, 607 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். வழக்கம் போல் எதிர்க்கட்சிகள் கூற்று இது.மோடி அரசின் பெருநிறுவனங்களுக்கு ஆதரவான நிலையை பாரீர் என்று ராகுல் கூறியுள்ளது அரசியல் தான். வங்கி பயன்பாட்டு மொழியில் 'write off' என்றால் தள்ளுபடி என்று அர்த்தமல்ல. 'தள்ளி வைப்பு' என்று அர்த்தம். ஆனால், வேண்டுமென்றே மக்கள் மத்தியில் தவறான கருத்தை கொண்டு சேர்ப்பது அரசியல் அநாகரீகம். 'தள்ளிவைப்பு' என்பது கடன் வழங்கப்பட்ட வங்கிகளின் இருப்பு நிலையில் இருந்து அகற்றப்படுகிறது. வாராக்கடன்களாக அவை இருக்கையில் சொத்துக்களாக பிரதிபலிப்பதால் வங்கிகளின் இருப்பு நிலை பலமாக இருப்பது போன்ற மாயையை உருவாக்குகின்றன. அதிலிருந்து நீக்குவதன் மூலம் வரி சலுகைகள் மற்றும் முதலீடுகளை அதிகரிக்க செய்ய வழி செய்கிறது. சொத்துக் கள் அதிகம் இருப்பதாக இருப்பு நிலை தெரிவிப்பதால், ஆவணப் படி பணம் இருந்தும் மக்களுக்கு மேலும் கடன் வழங்க முடியாத நிலையை உருவாக்குகிற காரணத்தினால் இருப்பு நிலையில் இருந்து அகற்றப்படு கின்றன. சட்டரீதியாக வாராக் கடன்களை வசூலிக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடரப்படும். மேலும், தள்ளிவைப்பு நடவடிக்கையின் மூலம் கடனாளி யின் கடன் அடைக்கப்பட்டுவிட்ட தாக அர்த்தமாகாது. கடனாளிகளுக்கு எதிரான சட்ட ரீதியான நடவடிக்கைகள் வேகமாக தொடரும். வசூலிக்கப் பட்டவுடன், அவை வங்கிகளின் கணக்கில் செலுத்தப்பட்டு இருப்பு நிலையில் லாபமாக கருதப்படும்.அதாவது ஒரு வங்கியின் இருப்புநிலைக்கு ஏற்ப குறிப்பிட்ட விகிதத்தில் கடன் கொடுக்கவேண்டும். ஆனால் பலவங்கிகள் அவ்வாறு செயல்படுவதில்லை. ஏனெனில் பல கோடிகள் வாராக்கடன்களாக இருந்து வந்தன என்பதே காரணம். ஆகையால், நான்கு வருடங்களுக்கு மேலும் அவை வராக்கடன்களாக இருந்தால் அதை இருப்பு நிலையிலிருந்து 'தள்ளி வைத்து' சொத்துக்களை குறைத்துக்கொள்வதன் மூலம் வரி சேமிக்கப்படுவதோடு, மேலும் மூலதனத்தை கொண்டு வந்து மக்களுக்கு கடன் வழங்க முடிகிறது. இதற்கிடையில் தள்ளிவைக்கப்பட்ட கடன்களை சட்டரீதியாக வசூலிக்கும் நடவடிக்கை தொடரும். வசூலிக்கப்பட்டவுடன் வங்கியின் கணக்கில் லாபமாக சேர்க்கப்படும். டிசம்பர் 3,2019 அன்றே, காங்கிரஸ் கட்சியின் கேள்விக்கு மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாகூர் அவர்கள் மாநிலங்களவையில் இது குறித்து விளக்கமளித்துள்ளார்.ரூபாய் 80,893 கோடி ரூபாய் பொது மற்றும் தனியார் வங்கிகளால் 'தள்ளி வைக்கப்பட்டுள்ளது' (Writeoff) என்றும் அந்த பட்டியலை வெளியிடுவதில் எந்த தயக்கமும் இல்லை என்றும், அவை ரிசர்வ் வங்கியின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதையும் குறிப்பிட்டுளார். அது கடனாளிகளுக்கு பயனளிக்காது என்பதையும் திட்டவட்டமாக கூறியுள்ளார். தள்ளுபடிக்கும்' 'தள்ளிவைப்புக்கும்' வித்தியாசம் தெரியாதவர்கள் இதை பெரிதுபடுத்தி அரசியல் ஆதாயம் பெறும் நிலை நிலவுகிறது.அதுவே தற்போது விவாதமாகிறது.
கருத்துகள்