சீர்மரபினர் (Denotified Tribes), ஆங்கிலேயே அரசால் கொண்டு வரப்பட்ட குற்றப் பரம்பரைச் சட்டத்தால் அடக்கப்பட்ட மக்களாவர். இந்திய விடுதலைக்குப் பின் குற்றப் பரம்பரை சட்டத்தை நீக்கிய, இந்திய அரசும், மாநில அரசுகளும், குற்றப் பரம்பரை சமூகத்தவர் களை, சீர்மரபினர் பட்டியலில் வைத்து, அவர்களின் கல்வி மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்காக, கல்வி நிறுவனங்களிலும் மற்றும் வேலை வாய்ப்புகளிலும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருடன் சேர்த்து இட ஒதுக்கீடும் செய்துள்ளது.சீர்மரபினர், நாடோடி இன மக்களின் மேம்பாட்டிற்காக இந்திய அரசு தேசிய ஆணையம் அமைத்துள்ளது. சீர்மரபினர் சமுகத்தவர்கள் வாழும் பகுதிகளில் இலவச உண்டு உறைவிடத் தொடக்கப்பள்ளிகள் மற்றும் மேனிலைப் பள்ளிகள் செயல்படுகிறது.தமிழ்நாடு அரசு 68 சமுகத்தவர்களைஅரசு மற்றும் கல்வி நிறுவனங்களில் மற்றும் வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்குகிறது. மேலும் தமிழ்நாடு சீர்மரபினர் நல வாரியத்தின் மூலம் சீர்மரபினர்களுக்கு நலத்திட்டங்களை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தற்போது பிற்பட்டோர் நலத்துறையின் கீழ் செயல்படும் சீர்மரபினர் நல வாரியத்தின் தலைவராக சோ
அய்யர் இஆ அவர்களையும், துணைத் தலைவராக உசிலம்பட்டி பாரதீய பார்வேடு பிளாக் தலைவர் முருகன் ஜீ அவர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்