தேனி மாவட்டத்தின் கடைசிக் கிராமம் பளியன்குடி .இது தமிழக - கேரளா மாநில எல்லையிலும் - கண்ணகி கோவிலின் அடிவாரத்திலும் உள்ளது. இக்குதான் கோவலன் பூந்தேரில் வந்து கண்ணகியை அழைத்துச் சென்ற வரலாறு ஊர் இன்றும் அந்தமக்கள் காப்புக்கட்டி விழா எடுப்பது வழக்கம் இங்கு சுமார் 70 பழங்குடிக் பளியர்கள் குடும்பத்தினருடன் வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் வாழ்வாதரம் முழுதும் வனம் மற்றும் காடுகளின் விளையும் மர தாவரங்களும், ஆடு, மாடு மேய்த்தலும், கூலி வேலைக்கு செல்வதன் மூலம் பொருளீட்டல் மட்டுமே.கொரானா தொற்று நோய் விளைவாக ஏற்பட்ட சூழல் இவர்களை வீட்டுக்குள் முடக்கி போட்டுவிட்டது. இதனால் அன்றாட வாழ்வாதரத்திற்கு இவர்கள் படும் துயர் துடைக்க. தேனி மாவட்ட பாரதிய மஸ்தூர் சங்கத்தின் மூலமாக. இனி வரும் 10 நாட்களுக்கு ஒரு குடும்பம் வாழத் அடிப்படைத் தேவையான அரிசி, பலசரக்கு பொருட்கள், சத்துணவுக்கு தேவையான பயறு வகைகள், சோப்புகள், என 25 பொருட்கள் அடங்கிய பை ஒன்று மதிப்பு ரூ 1000 ல் தயார் செய்து மொத்தமுள்ள 70 குடும்பத்திற்கு 70 பைகளும் தயார் செய்து பளியன் குடிக்கு சென்று கார்ய கர்த்தர்கள் மூலமாக அவர்கள் வீட்டுக்கே சென்று தந்து விட்டு வந்துள்ளது. இந்த நிகழ்வில் வன துறை அதிகாரிகள் கலந்து கொண்டு முழு ஒத்துழைப்பு வழங்கினர் இந்தச் சேவை கார்யத்திற்கு பண உதவி, உடல் உழைப்பு அளித்த நல்லுள்ளங்களுக்கு நன்றியும், மகிழ்ச்சியும் தெரிவித்தனர்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர். போகிற வழியில் ஆடு மேய்க்கும் பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்
கருத்துகள்