காலமானார் அய்க்கண். தமிழ்ச் சிறுகதை எழுத்தாளர்களுள் ஒருவர்.இவர் 800 க்கும் மேற்பட்ட சிறுகதைகளும், நாவல்களும் எழுதியுள்ளார். நேற்று மாரடைப்பால் காலமானார்.
தார்போது சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டம், கோட்டையூரில் 01 செப்டம்பர் 1935 ல் பிறந்தவர் மு.அய்யாக்கண்ணு கோட்டையூரில் தொடக்கக் கல்வியும், பள்ளத்தூர் அருணாச்சலம் செட்டியார் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பையும், அழகப்பா பல்கலைக் கழகத்தில் பட்டப்படிப்பையும் முடித்தார். திருப்பத்தூர் ஆறுமுகம்பிள்ளை சீதையம்மாள் கலைக் கல்லூரியில் தமிழ்த் துறைப் பேராசிரியராக சேர்ந்து தமிழ்த் துறைத் தலைவராகிப் பணி ஓய்வு பெற்றவரவ. இவரது முதல் சிறுகதை,வள்ளியின் திருமணம் என்பது. இக்கதை ஆனந்த விகடனில் வெளிவந்துள்ளது. தமிழக அரசு பதினாறு சிறந்த சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து ஆங்கிலம் உள்ளிட்ட 22 மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளது. அதில் இவரது கதையும் இடம்பெற்றுள்ளது.அகில இந்திய வானொலி நிலையம் நடத்திய நாடகப் போட்டியில் இவர் எழுதிய நாடகம் முதல் பரிசு பெற்றது. இந்நாடகம் 19 தேசிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வானொலியில் ஒலிபரப்பப்பட்டது. இவர் எழுதிய, மண் எனும் சிறுகதை தற்போது 12 ஆம் வகுப்பிற்குப் பாடமாக உள்ளது.
மண்ணின் மலர்கள்,ஊர்மிளை,
தவம்,விடிவெள்ளி,வெள்ளைத் தாமரை,நெல்லிக்கனி,பரிமாணங்கள்,கரிகாலன் கனவு,நிழலில் நிற்கும் நிஜங்கள்,தீர்க்க சுமங்கலி,
அவனுக்காக மழை பெய்கிறது,
இரண்டாவது ஆகஸ்ட் 15,
அதியமான் காதலியும் பிற வகை நூல்களாக இளவெயினி,
நெய்தலில் பூத்த குறிஞ்சி,
நீயும் நானும் வேறல்ல,என் மகன்,
அண்ணாமலை அரசர் ஆகும்,
தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூலுக்கான முதல் பரிசை இவரது படைப்புகள் மூன்று முறை பெற்றுள்ளன. 2005 ல் மலேசியா வில் உலகத் தமிழ்மறை ஆராய்ச்சி மாநாடு நடைபெற்றது. அதில் உலகத் தமிழ் எழுத்தாளர் சிறுகதைப் போட்டியில் இவர் கதை முதல் பரிசு பெற்றது. பாரிஸ் தமிழ்ச் சங்கம் 2007 ஆம் ஆண்டு பாரதியாரின் 125 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு நடத்திய சிறுகதைப் போட்டியில் இவரது கதை முதல் பரிசு பெற்றது. தவத்திரு குன்றக்குடி அடிகளாரிடம், நற்கதை நம்பி என்ற விருதும் பதக்கமும் பெற்றார். முன்னாள் மத்திய அமைச்சரிடம் ப.சிதம்பரம் எழுத்து வேந்தர் எனும் விருதும் பெற்றுள்ளார்.இவரது மனைவி திருமதி சசிக்கலா ஆங்கில ஆசிரியராக மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றியவர் மேலும் தமிழ்நாடு வல்லம்பர் சங்கம் துவங்கிய நபர்களில் இவருடைய பங்கு முக்கியமான தாகும்.நாம் உள்ளிட்ட அணைவரி டமும் அன்புகொண்டு வாழ்ந்த நல் மனிதநேயர் அய்க்கண் நம் மனதில் என்றும்வாழ்வார்கள். அவரது ஆன்மா இறைவன் நிழலில் இளைப்பாரட்டும்.ஒரே கல்லூரியில் பணிபுரிந்த இரண்டு பேராசிரியர்கள் இந்த ஊரடங்கு நேரத்தில் மறைந்ததும் அதிக நபர்கள் கலந்து கொள்ளாதது அவரது சீடர்களுக்கு வருத்தமா யிருக்கிறது.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர். போகிற வழியில் ஆடு மேய்க்கும் பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்
கருத்துகள்