சட்டமன்ற உறுப்பினருக்கு ஒரு நீதி. சாமானியனுக்கு ஒரு நீதியா. ஏற்காடு எம்.எல்.ஏ. மகளின் திருமணம். முழு ஊரடங்கு நேரத்தில் மகளுக்குத் திருமணம்.
சேலம் மாவட்டம் ஏற்காடு சட்டமன்ற உறுப்பினர் சித்ரா தனது மகள் திருமணத்தை கொரானா முழு ஊரடங்கு நேரத்தில் நடத்தியது சேலம் அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு தரப்பினர் மத்தியில் பேச்சாக உள்ளன.ஏற்காடு அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் சித்ரா. இவரின் மகள் சிந்துவுக்கும் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியை சேர்ந்த பிரசாந்த்துக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு சேலம் மாவட்டம் வாழப்பாடி பேளூர் அருள்மிகு தான்தோன்றீஸ்வரர் கோவிலில் நடப்பதாக இருந்த திருமணம் சேலம் ஏற்காடு முருகன் கோவிலில் ஏப்ரல் 26ம் தேதி காலை நடத்தப்பட்டது.இத்திருமண நிகழ்ச்சியில் சேலம் அ.தி.மு.க. புறநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஆர். இளங்கோவன் உள்ளிட்ட அ.தி.மு.க.வினர் திரளாகக் கலந்து கொண்டனர்.
திருமண நிகழ்வை ஒட்டி ஏற்காட்டில் ஐநூறுக்கும் மேற்பட்டோர் ஒரே இடத்தில் குவிந்ததால் முழு ஊரடங்கு விதி மீறப்பட்டதாக அந்தப் பகுதி பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர். இது குறித்து சமூக ஆர்வலர் சேலம் கண்ணன் “சமூக இடைவெளியைக் கடைபிடிக்காமல் ஏற்காடு சட்டமன்ற உறுப்பினர் கருத்து ''சித்திராவின் இல்லத் திருமணம் நடைபெற்றதாக தற்போது புகார் எழுந்துள்ளது. கொரானா வைரஸ் நோய் தொற்றை ஒழிப்பதற்கு மத்திய மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ள நிலையில் நூற்றுக்கணக்கானோர் ஒரே இடத்தில் கூடி திருமண நிகழ்வை நடத்தியுள்ளது எப்படி? மக்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டிய ஒரு ஆளுங்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் அதுவும் முதல்வரின் மாவட்டத்திலேயே சட்டத்தை மீறி இருக்கிறார். தங்களது அத்தியாவசிய தேவைகளுக்காக வீட்டை விட்டு வெளியே வரும் பொதுமக்கள் காவல் துறையினரால் அபராதம் செலுத்தும் நிலை ஊருக்கு ஊர், தெருவுக்கு தெரு அரங்கேறி வருகிறது.
ஊரடங்கு சட்டத்தில் சாமானிய மக்களுக்கு ஒரு நீதி.சட்டமன்ற உறுப்பினர் போன்ற
அரசியல்வாதிகளுக்கு ஒரு நீதியா'' என கொந்தளித்தார். எனக்குத் தெரிந்த குடும்ப நண்பர்கள் திருமணம் இரண்டு நாள் முன்பு திருப்பூர் மாவட்டக் கலெக்டர் அனுமதிபெற்று மணமக்கள் சார்பில் இருதரப்பில் இருபது நபர்கள் மட்டுமே கலந்து கொள்ளவும் ஏழுநபர்கள் மட்டுமே புதுக்கோட்டை மாவட்டம் வரை ரவுண்ட் ட்ரிப் பயணம் செய்யவும் அனுமதி ஆனால் ஆலயங்கள் மூடியுள்ள இந்த நேரம் இதுபோன்ற மக்கள் கூடி திருமணம் ஏற்காட்டில் ஊரடங்கு மீறிய செயலாகாதா என மக்கள் பேசும் நிலை.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர். போகிற வழியில் ஆடு மேய்க்கும் பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்
கருத்துகள்