சிவகங்கை கொரானா இல்லாத மாவட்டமானது
கோவிட்-19 கொரானா வைரஸால் பாதிக்கப்பட்ட அனைத்து நபர்களும் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில்  தொற்றில்லாத மாவட்டமாக சிவகங்கை மாறியது. மாவட்டத்தில் 12 நபர்கள்  கொரானாவால் பாதிக்கப்பட்டனர் . அந்த எண்ணிக்கை அதிகரிக்காமல் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி  மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 11 பேரும் குணம் அடைந்து வீடு திரும்பி னர். சிகிச்சையில் இருந்த கடைசி நபரும் குணமடைந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப் பட்டார். அவருக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர்  ஜெயகாந்தன் சால்வை அணிவித்து வழியனுப்பி வைத்தார். சிகிச்சையில் இருந்த கடைசி நபரும் டிஸ்சார்ஜ் ஆனதால் கொரானா இல்லாத மாவட்டமாக சிவகங்கை உள்ளது. 
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்