சுவாமி சின்மயானந்தா பிறந்த தினம் இன்று. கேரளாவின் எர்ணாகுளத்தில் 1916 ஆம் ஆண்டு பிறந்தார். இயற்பெயர் பால கிருஷ்ண மேனன் , தந்தை ஒரு புகழ்பெற்ற நீதிபதி. கொச்சி, திருச்சூரில் பள்ளிப் படிப்பை முடித்து, எர்ணாகுளம் மஹாராஜா கல்லூரியில் எஃப்.ஏ. (ஃபெலோஆஃப் ஆர்ட்ஸ்), திருச்சூர் செயின்ட் தாமஸ் கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்றார். லக்னோ பல்கலைக்கழகத்தில் இலக்கியம், சட்டத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். ஊடகவியலும் பயின்றார். அரசியல், பொருளாதாரத்தில் பல சீர்திருத்தங்களை செய்யமுடியும் என்ற நம்பிக்கையில் ஊடகத் துறையில் பணியாற்றினார்.
1942 ஆம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் பங்கேற்றார். கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.
பின் நேஷனல் ஹெரால்டு பத்திரிகையில் பணியாற்றினார்.
ஒருமுறை ரிஷிகேஷ் சென்ற போது சுவாமி சிவானந்தரைச் சந்தித்தார். அது இவரது வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது.
ஆன்மிகத்தில் நாட்டம் கொண்டார். ஆன்மிகப் புத்தகங்களைப் படிக்கத் தொடங்கினார்.இந்திய தத்துவத்துக்கான வருகைதரும் பகுதிநேர பேராசிரியராக அமெரிக்கா மற்றும் ஆசிய நாடுகளின் பல்கலைக்கழகங் களில் பணியாற்றினார்.
உலகம் முழுவதும் ஆசிரமங்கள், பள்ளிகள், மருத்துவமனைகளை பல நல்ல தனவான்கள் உதவியுடன் தொடங்கினார். கிராம மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த ‘சின்மயா’ என்ற அமைப்பை உருவாக்கினார்.
40 ஆண்டுகளுக்கு மேலாக சமூகப் பணியாற்றியவர். இந்தியாவின் குறிப்பிடத்தக்க ஆன்மிகத் தலைவர்களில் ஒருவராகப் போற்றப்படும் சுவாமி சின்மயானந்தா 77ஆவது வயதில் 1993 ஆம் ஆண்டு சித்தியானார் ஆன்மீக முக்தியானார். அவர் காட்டிய வழியில் பல கல்வி நிறுவனங்களை ஏற்று நடத்தி வருகிறது சின்மய ஆஸ்ரம நிர்வாகம்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர். போகிற வழியில் ஆடு மேய்க்கும் பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்
கருத்துகள்