முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பதினான்கு மாநிலங்களுக்கு ரூ .6,195.08 கோடியை அரசாங்கம் நிதிப்பகிர்வு

15-வது நிதி ஆணையம் பரிந்துரைத்தபடி, அதிகாரப் பகிர்வு வருவாய் பற்றாக்குறை மானியத்தின் இரண்டாவது சமமான மாதத் தவணையாக 14 மாநிலங்களுக்கு ரூ .6,195.08 கோடியை அரசாங்கம் வெளியிட்டது. இது கொரோனா நெருக்கடியின் போது அவர்களுக்கு கூடுதல் ஆதாரங்களை வழங்கும்.மத்திய அரசு 15 வது நிதிக்குழு பரிந்துரையின்படி மாநிலங்களுககு அளிக்க வேண்டிய நிதி பகிர்வில் 2வது மாத தவணையை அளித்துள்ளது. இதன்படி நாட்டிலேயே கேரளாவிற்கு தான் அதிகமாக 1276 கோடி வழங்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக இமாச்சல் பிரதேசத்திற்கு 952 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. பஞ்சாபிற்கு 638 கோடியும், அஸ்ஸாமிற்கு 631 கோடியும், ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலத்திற்கு 491 கோடியும், மேற்கு வங்கத்திற்கு 417 கோடியும், தமிழகத்திற்கு 335 கோடியும், மணிப்பூருக்கு 235 கோடியும் மேகாலயாவிற்கு 40 கோடியும், மிசோரமுக்கு 118 கோடியும் நாகலாந்திற்கு 326 கோடியும், திரிபுராவிற்கு 269 கோடியும், சிக்கிமிற்கு 37 கோடியும் மத்திய அரசு நிதியாக ஒதுக்கி உள்ளது.
இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் இன்று கொரோனா தொற்று அதிகம்.. ஷாக் அளிக்கும் பட்டியல்
மேற்கொண்ட தொகைகளை அந்தந்த மாநில அரசுகளின் கணக்கில் செலுத்துமாறு ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது இந்த தொகை என்பது 15 வது நிதி குழு பரிந்துரைத்த மே மாததிற்காக தவணை தொகையாகும்.
மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிதியை ஒதுக்கியது மத்திய அரசு. தமிழகத்திற்கு ரூ.335.41 கோடி ஒதுக்கீடு


கருத்துகள்