ஶ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் கோதை நாச்சியார் சூடிக் கொடுத்த மாலை திருமாலிஞ் சோலை கள்ளழகருக்காகப் புறப்பட்டது.ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை, கிளி, பட்டு மங்கல பொருட்கள் கள்ளழகருக்கு அணிவிக்கப் புறப்பட்டது. ஆகாம விதிப்படி கள்ளழகருக்கு பூஜை வழிபாடு நடப்பதால் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து மதுரைக்கு மாலை கொண்டு செல்லப்பட்டது. ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையை அணிந்து கள்ளழகர் ஆற்றில் இறங்குவது ஸ்ரீ ராமானுஜர் காலத்தில் இருந்து என கூறப்படும் உண்மை உண்டா என்பது தெரியாது ஆனால் மதுரை நாயக்கர் மன்னர் காலத்தில் தான் அழகர் ஆற்றில் இறங்கும் விழா துவங்கியது, மதுரை மீனாட்சி சொக்கநாதர் திருமண விழாவுடன் இணைந்தது வரலாறு ஆகவே இதில் உண்மை ராமானுஜர் காலம் என்பது யாம் அறியாத வரலாறு. ஆகவே நாயக்க மன்னர்கள் காலம் தொட்டு அனுப்பிவைப்பார்கள் அது தற்போதும் நடைபெற்று வருகிறது. முதன்முறையாக பக்தர்கள் யாருமில்லாமல் நடைபெற்ற மதுரை மீனாட்சி திருக்கல்யாணம். கொரானோ ஊரடங்கு காலத்தில் கோவில் களில் பக்தர்கள் அனுமதிக்கப்பட வில்லை, கடவுளுக்கு அது பொருந்தாது ஆகவே ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை அழகருக்கு அணிவிக்க கொண்டு செல்லப்பட்டுள்ளது. சித்ரா பௌர்ணமிக்கு அழகர் மதுரைக்கு திருமணம் காண வரவில்லை. வைகை ஆற்றிலும் இறங்காத சோகத்தில் பக்தர்கள் இருக்க
திருப்பதியில் புரட்டாசி பிரம்மோத்சவத்தின் போது, ஆண்டாள் மாலை திருப்பதி வெங்கடஜலபதிப் பெருமாளுக்கு அணிவிக்கப்படுகிறது. இங்கே, ஆண்டாள் திருக்கல்யாணத்துக்கு திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலிலிருந்து திருமணத்துக் கான பட்டுப் புடவை வருகிறது. ஆண்டாள் கோதை நாச்சியாருக் கும் பெருமாளுக்கும் அப்படி ஒரு பந்தம் நிலவியது ஆகவே ஆண்டாள் கோதை நாச்சியாருக்கு 'சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள்' என்ற நாமமும் உண்டு.மதுரையில் சித்திரைத் திருவிழாவின் போது தல்லாக்குளம் பெருமாள் கோவிலில் தங்கும் கள்ளழகர் நள்ளிரவு திருமஞ்சனம் முடிந்து ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்து கொண்டு தான் தங்கக் குதிரை வாகனத்தில் அமர்ந்து வைகையில் இறங்குவார். இது நாயக்கர் கால ஆட்சியிலிருந்து நடந்து வரும் மரபு . இந்தாண்டு கள்ளழகர் மதுரைக்கு வராவிட்டாலும் கோவிலிலேயே கருட வாகனத்தில் வந்து மண்டூக மஹரிஷிக்குச் சாப விமோசனம் கொடுக்கிறார். அழகருக்கு அணிவிக்க ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இருந்து மாலை அழகர் கோவிலுக்குச் சென்றுள்ளது.
மகாவிஷ்ணுவின் 108 திவ்விய தேசங்களில் ஆண்டாள் நாச்சியார் பெரியாழ்வார் மகளாக அவதரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்தலமும் ஒன்று. ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கோபுரம் தான் தமிழக அரசின் அடையாளச் சின்னம் முத்திரை. ஆழ்வார்களில் இரண்டு பேர் வாழ்ந்த ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர் திகழ்கிறது. ஆண்டாள் பூமாதேவியின் அம்சம். துளசி வனத்தில் அவதரித்தவர்.
கோதை பிறந்த ஊர், கோவிந்தன் வாழும் ஊர் என்று சொல்வார்கள். நந்தவனத்தில் பறித்த பூக்களை இறைவனுக்கு மாலையாகக் கட்டி முதலில் அதை தாம் சூடிப்பார்த்து இறைவனுக்கு தாம் ஏற்ற பொருத்தம் உடையவளா என்பதைக் கண்ணாடியிலே கண்டு களிப்பது ஆண்டாள். பிறகு மாலையைக் கழட்டி, பூஜைக்கு கொடுத்து விடுவாள். தந்தை பெரியாழ்வாரும் தினமும் இதையே இறைவனுக்கு அணிவிப்பார். ஒருநாள் இறைவனுக்கு கட்டிய மாலையில் ஒரு நீளமான தலைமுடி இருப்பது கண்டு அஞ்சி அதைத் தவிர்த்து விட்டு வேறு மலர்களை மாலையாகக் கட்டி பெருமாளுக்கு சூட்ட உடனே இறைவன், கோதை சூட்டிய மாலையையே நான் விரும்புகிறேன். அதையே எனக்கு சூட்டு என்று கேட்டு வாங்கி அணித்ததாகவும். இறைவனையே விரும்பி மணந்து அவரோடு ஐக்கியமானார் ஆண்டாள் நாச்சியார். கோவில் இரு பகுதியாக அமைந்துள்ளது. முதல்பகுதி வடபத்ரசயனர் கோவில் . வடபத்ர சயனருக்குத் தான் ஆண்டாள் தன் மாலையை சூடிக் கொடுத்த நிகழ்வு. இன்றைக்கும் ஆண்டாளுக்குச் சாத்தப்படும் மாலை, மறுநாள் காலையில் வடபெருங்கோவில் மூலவருக்குச் சாத்தப்படும்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள், தான் அணிந்திருக்கும் மாலையில் 108 திவ்யதேசங்களில் அருளும் பெருமாள்களை மாலையாக அணிந்திருப்பதாக ஐதீகம்.
ஆண்டாளுக்கு திருமாலிருஞ் சோலை அழகரிடம் பிரார்த்தனை, இருந்தது. அதை தன் நாச்சியார் திருமொழியிலேயே சொல்லி யிருக்கிறார். ஆண்டாளுக்கு சில நூறு ஆண்டுகள் பின்னால் திருவரங்கத்தில் அவதரித்தவர் ராமானுஜர். அவர் திருமாலிருஞ் சோலை பெருமாளை பார்த்த போது ஆண்டாளின் வேண்டுதல் நினைவுக்கு வரவே.100 அண்டாக் களில் நெய் வழிய வழிய அக்கார வடிசல் செய்து பெருமாளுக்கு படைத்தார். இப்போதும் ஆண்டாள் சார்பாக மார்கழி மாதம் கூடார வல்லி தினத்தில் அக்கார அடிசல் படைத்து வழிபடுவது தொடர்கிறது.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர். போகிற வழியில் ஆடு மேய்க்கும் பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்
கருத்துகள்