மதுரை மீனாட்சி அம்மனை இழிவுபடுத்தி சமூக வலைதளத்தில் பதிவிட்டதாக புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியை சேர்ந்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
மதுரை மீனாட்சி அம்மனை இழிவுபடுத்தும் விதத்தில் பொன்னமராவதியை சேர்ந்த மனோகரன் என்பவர் சமூக வலைதளங்களில் பதிவிட்டதாக தெரிகிறது. இதற்கு இந்து அமைப்பினர் கடும் கண்டனங்களை தெரிவித்தனர். மேலும் திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் முற்றுகையிட்ட இந்து முன்னணி நிர்வாகிகள் தனிமனித இடைவெளியை கடைப்பிடித்து தரையில் இடைவெளிவிட்டு உட்கார்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மனோகரனை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். இதனையடுத்து பொன்னமராவதியை சேர்ந்த அந்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்