சென்னையில் ஊரக தொழில் துறை அமைச்சரின் வீட்டுத் திருமணம் எளிய முறையில் சமூக இடைவெளியுடன் நடந்தது. தமிழகத்தில் கொரானோ வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால் இதனால் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் அனைத்தும் கூட்டமில்லாமல் அரசு அறிவித்த படி மிக எளிமையாக நடைபெற்று வருகிறது. தமிழக ஊரக தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின் இளைய மகன் சாம்சன் பால்-ஸ்ரீசாத்திகா திருமணம் நடைபெற கடந்த 3 மாதங்களுக்கு முன் நிச்சயயிக்கப்பட்டிருந்தது. இதற்காக திருமண மண்டபம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் தற்போது கொரானோ வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு காரணமாக திருமணம் எளிய முறையில் நடைபெற்றது.
சென்னை அயனம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் மணமகன் வீட்டார் 14 பேரும் மணமகள் வீட்டார் 12 பேர் என மொத்தம் 26 நபர்கள் கலந்து கொண்டு முகக் கவசம் அணிந்தும் சமூக இடைவெளியுடன் திருமணம் நடந்தது. விழாவில் மணமக்கள் சார்பில் திருவேற்காடு நகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு வேட்டி,சேலை இனிப்பும் வழங்கினர்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்