முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நடிகர்கள் வெளிப்படுத்தும் கருத்து மட்டும் விமர்சனமாகிறதா விளம்பரமாகும் பேச்சில் உள்நோக்கமுண்டா

நடிகர் விஜய்சேதுபதி ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கோவில்களில் கடவுள்களுக்கு நடைபெறும் அபிஷேகம் மற்றும் அலங்கார முறைகளை கொச்சைப்படுத்தும் வகையில் பேசி அது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. இந்துக்களின் மனதை புண்படுத்தியிருக்கும் அவர் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்.தொடர்ந்து இந்து மதம் குறித்து சர்ச்சையாக பேசும் நடிகர் விஜயசேதுபதி மீது இந்து மகாசபா புகார். எதற்காக இப்படி பேசு கிறார். தமிழகத்தில் தொடர்ந்து
மத ரீதியிலான கருத்துகள் தொடர்பாக தமிழ் திரையுலகினர் தொடர்ந்து சர்ச்சையில் பேசி சிக்கி வருகின்றனர். ஏற்கனவே நடிகை ஜோதிகா தஞ்சை பெருவுடையார் கோவிலுக்கு நிதி உதவி அளிப்பது போல் பள்ளிகளுக்கும் மருத்துவ மனைகளுக்கும் நிதி உதவி அளியுங்கள் எனக் கூறியது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி மதம் மாறிவிட்டார் என சில மாதங்களுக்கு முன்பு செய்தி பரவிய நிலையில் அதற்கு ட்விட்டரில் பதிலடி கொடுத்தார். விஜய் சேதுபதி. அதன் பிறகு மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய விஜய் சேதுபதி, ‘மனிதனை காப்பாற்ற மனிதன் தான் வர வேண்டும், மேல இருந்து யாரும் வரமாட்டாங்க’ என குறிப்பிட்டு இருந்தார். அப்போது இருந்து விஜய் சேதுபதி பற்றி தொடர்ந்து பல சர்ச்சைகள் வந்து கொண்டி ருக்கின்றன. சமீபத்தில் ஜோதிகா ஹிந்து கோவில்கள் பற்றி பேசியது சர்ச்சையான நிலையில் அதற்கு விஜய் சேதுபதி ஓப்பனாக ஆதரவு கொடுப்பது போல ஒரு ட்விட் வைரலானது. ஆனால் அது போலியானது என பின்னர் விளக்கம் கொடுத்தார் விஜய் சேதுபதி. அதன் பின்னர் சூர்யா ஜோதிகாவுக்கு ஆதரவாக வெளியிட்ட அறிக்கையை விஜய் சேதுபதி ‘சிறப்பு’ என கூறி பாராட்டினார். இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி  தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கடவுள்கள் பற்றி பேசியிருப்பது சர்ச்சையில் சிக்கியுள்ளது. அதில் விஜய் சேதுபதி பேசியிருப்பதாவது. ”சாமிக்கு அபிசேகம் செய்யும் போது பக்தர்களுக்கு காட்டுவார்கள். முடித்தபிறகு துணி போட்டு மூடிவிடுவார்கள். என்ன தாத்தா துணி போட்டு மூடிவிட்டார்கள் என குழந்தை கேட்டதற்கு, ‘சாமி இவ்ளோ நேரம் குளித்துக் கொண்டிருந்தது. இப்போ டிரஸ் மாத்த போவுது அதான் மூடிட்டாங்க’ என தாத்தா கூறுகிறார். ‘என்ன தாத்தா குளிக்கிறதையே காமிச்சாங்க. ஆனா டிரெஸ் மாத்துரதை மட்டும் ஏன் மூடிட்டாங்க’ என குழந்தை கேட்கிறது..” என விஜய் சேதுபதி பேசியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக இந்து ஆகமவிதிகளை அவமதிக்கும் வகையில் பேசியதாக அவர் மீது இந்து மகா சபாவினர் புகார் அளித்துள்ளனர்.
அந்தப் புகாரில் “தற்போது சமூக வலைதளங்களில் ஒரு தனியார் தொலைக்காட்சியில் 17.3.2019 அன்று ஒளிபரப்பப்பட்ட நம்ம ஊரு ஹீரோ என்ற நிகழ்ச்சியில் திரைப்பட நடிகர் விஜய் சேதுபதி, இந்து கோயில்களில் தெய்வங்களுக்கு ஆகம விதிகளின்படி நடைபெறும் அபிஷேகம் மற்றும் அலங்கார முறைகளை கொச்சைப்படுத்தும் விதமாக தெய்வங்கள் குளிப்பதை எல்லோருக்கும் காட்டத் தெரிந்தவர்களுக்கு ஏன் தெய்வங்களுக்கு உடைமாற்றும் நிகழ்வை காட்டக் கூடாது என்று ஒரு சிறுமி தனது தாத்தாவிடம் கேட்டதைப் போல கற்பனையாக சொல்லுவது இந்து மதத்தினையும், அதன் வழிபாட்டு முறைகளையும் மற்றும் இந்து கோயில்களில் நடக்கும் ஆகம விதி நடைமுறைகளையும் கேவலப்படுத்தி இந்துக்களின் மனதையும், நம்பிக்கையையும் இழிவுபடுத்தும் நோக்கத்துடன் பேசியுள்ளார். அந்நிகழ்ச்சியின் நோக்கமே குறைந்த தண்ணீரில் குளிப்பது எப்படி என்று காட்டுவதற்கான நிகழ்ச்சியாக அமையப் பெற்றுள்ளது. அதில் இந்து மதக் கோயில்க்ளின் அபிஷேக, அலங்கார முறைகளைப் பற்றிக் கூற காரணம் என்ன? இவர்கள் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ள இந்து மதம் தான் கிடைத்ததா, ஆகையால் விஜய் சேதுபதி மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இந்துக்களின் உணர்வை மதித்து விரைவான நடவடிக்கை எடுக்குமாறு அகில இந்திய இந்து  மகா சபை கேட்டுக் கொள்கிறது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
சமீப காலமாக, நடிகர் நடிகைகள் கலந்து கொண்ட பழைய நிகழ்ச்சிகளில் மதம் தொடர்பாக ஏதாவது பேசிவருகிறார்களா என்பதை கண்டுபிடித்து அவர்கள் மீது டிஜிட்டல் தாக்குதல் நடைபெறுவது தொடந்து வாடிக்கையாகிவிட்டது. இதில் விஜய் சேதுபதியும் இந்து தானே.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...