திருச்சிராப்பள்ளி மாவட்டம் அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் திருக்கோவில் வசந்த உற்சவ விழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்துசமய அறநிலையத்துறை சார்பில் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மே மாதம் 14 ஆம் தேதி நடக்கும் மஹா அபிஷேகம் மதியம் 1 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்கும் அதை இணையத்தில் ஒளிபரப்பப்படும் எனத் தகவல். சிறப்பு வாய்ந்த அருள்மிகு சமயபுரம் வரலாற்றுப் பார்வையில்:- சோழ மன்னர் தங்கையைக் கங்க நாட்டு மன்னருக்கு மணம் முடித்து, அவர்களின் சீதனமாக ஒரு கோட்டையும் ஒரு நகரமும் தானமளித்தான். அது தான் கண்ணனூர். பிற்காலத்தில் பாண்டியர்கள் படையெடுப்பால் கோட்டையும் நகரமும் அழிந்து காடாயின அதில் வேம்புகள் அதிகம். சமயபுரம் குடிகொண்ட மாரியம்மன் ‘வைஷ்ணவி’ நாமத்தில் ஸ்ரீரங்கத்தில் குடி கொண்டிருந்ததாகவும், அம்பாள் கோரைப் பற்கள், சிவந்த கண்களுடன் விளங்கியதால், அப்போதய ஜீயர் சுவாமிகள், அம்மனை வேறு இடம் பிரதிஷ்டை செய்ய ஏற்பாடு செய்தார். திருவுருவை எடுத்து வடக்கு நோக்கி கிளம்பி வழியில் இளைப்பாறி பின் கண்ணனூர் அரண்மனை மேடடைந்து, அம்பாள் திருவுருவை ஓலைக் கொட் டகை ஒன்றில் வைத்து விட்டுச் சென்றதால் ‘கண்ணனூர் மாரியம்மன்’ என வழிபாடு நடந்தது. தென்னாட்டில் படையெடுத்த விஜயநகர மன்னர் கண்ணனூர் காட்டில் முகாமிட அங்கிருந்த மாரியம்மனை வழிபட்ட மன்னர், போரில் வெற்றி பெற்றால், அம்மனுக்குக் கோயில் கட்டுவதாக வேண்டுதல் அதன்படி அம்மனுக்குத் திருக்கோயில் கட்டிய விஜயநகர மன்னர், பரிவாரத் தெய்வங்களாக விநாயகரையும், கருப்பண்ணசாமி யையும் பிரதிஷ்டை செய்து, குடமுழுக்கும் நடத்தி, நித்திய பூஜைக்கான ஏற்பாடுகளையும் செய்தார். தற்போதைய ஆலயம் பொது ஆண்டு 1804 ல் விஜயரங்க சொக்கநாத நாயக்கர் மன்னரால் கட்டப்பட்டு கோவில் கொடிமரத் தையடுத்துள்ள மண்டபத் தூண்களின் கீழ்ப் பகுதியில் நாயக்க மன்னர்களின் உருவங்கள் வடிவமைக்கப்பட்டுள்ள ஸ்தலம் சமயபுரமாகும்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்