சாத்தான்குளம் காவல்நிலையம் வட்டாட்சியர் அலுவலகத்தின் கட்டுப்பாட்டுக்கு மாற்றம் ஜூன் 30, 2020 சாத்தான்குளம் சம்பவம் - அடுத்த நடவடிக்கை: தூத்துக்குடி மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர் D.குமார் மற்றும் சாத்தான்குளம் காவல் துணை கண்காணிப்பாளர் C.பிரதாபன் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம். மாஜிஸ்திரேட்டை அவமரியாதையாக பேசியதாக எழுந்த புகார், சாத்தான்குளத்தில் பணியாற்றிய காவலர் சஸ்பெண்ட்- தென்மண்டல போலீஸ் ஐ.ஜி நடவடிக்கை. வருவாய்த்துறை கட்டுப்பாட்டுக்குள் சாத்தான்குளம் காவல்நிலையம்: சாத்தான்குளம் காவல்நிலையத்தை வருவாய்த்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கையாக வட்டாட்சியர் செந்தூர்ராஜன் நியமனம். மாஜிஸ்திரேட் விசாரணைக்கு போலீஸ் ஒத்துழைப்பு தரவில்லை என்ற புகாரில் உயர்நீதிமன்ற மதுரை கிளையின் வழிகாட்டுதலின்படி நடவடிக்கை தமிழக வரலாற்றில் முதன்முறையாக ஒரு காவல்நிலையம் வருவாய்த்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. பகிர் இணைப்பைப் பெறுக Facebook X Pinterest மின்னஞ்சல் பிற ஆப்ஸ் லேபிள்கள் சமூகம் பகிர் இணைப்பைப் பெறுக Facebook X Pinterest மின்னஞ்சல் பிற ஆப்ஸ் கருத்துகள்
கருத்துகள்