முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மத்திய மாநில அரசுகளின் கோவிட்-19 பரவல் தடுக்க ஊரடங்கு நீட்டிப்பு

அன்லாக்-2.0 அறிவிப்பு: நாடு முழுவதும் பொது முடக்கம் ஜூலை 31 வரை நீட்டிப்பு -மத்திய அரசு. ஜூலை 31 வரை பள்ளி கல்லூரிகள் மூடப்படும் -மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு.தமிழகத்தில் முழு ஊரடங்கு: ஜூலை மாதம் 31ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல் படுத்தப்படுவதாக தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், தளர்வுகளுடனும் ஜுன் மாதம் 30 ஆம் தேதி முடிவடைய உள்ள ஊரடங்கை வருகிற ஜூலை மாதம் 31ஆம் தேதி வரை மாநிலம் முழுவதும் மேலும் நீட்டித்து முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே நடைமுறையில் உள்ள கீழ்காணும் செயல்பாடுகளுக்கான தடைகள், மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து அமலில் இருக்கும் நகர்ப்புர வழிபாட்டுத்தலங்களிலும், பெரிய வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் வழிபாடு. அனைத்து மதம் சார்ந்த கூட்டங்கள். நீலகிரி மாவட்டத்திற்கும், கொடைக்கானல், ஏற்காடு போன்ற சுற்றுலாத் தலங்களுக்கும், வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்படுகிறது. தங்கும் வசதியுடன் கூடிய ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள், பிற விருந்தோம்பல் சேவைகள். எனினும், மருத்துவத் துறை, காவல் துறை, அரசு அலுவலர்கள், உள்ளிட்ட வெளி மாநிலத்தவர் மற்றும் தனிமைப்படுத்தப்படும் பணிகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுகிறது. வணிக வளாகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்துக் கல்வி நிறுவனங்கள். எனினும், இந்நிறுவனங்கள் இணைய வழிக் கல்வி கற்றல் தொடர்வதுடன், அதனை ஊக்கப்படுத்தலாம். தமிழகத்தில் ஜூலை 31ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு மத்திய உள் துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட பணிகளைத் தவிர சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை நீடிக்கும். மெட்ரோ ரயில் / மின்சார ரயில். திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், நீச்சல் குளங்கள், கேளிக்கைக் கூடங்கள், மதுக்கூடங்கள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள், கடற்கரை, சுற்றுலாத் தலங்கள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் போன்ற பொது மக்கள் அதிகம் கூடும் இடங்கள். அனைத்து வகையான சமுதாய, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாச்சார நிகழ்வுகள், சமய, கல்வி, விழாக்கள், கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள். மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்து திருமண நிகழ்ச்சிகள் மற்றும் இறுதி ஊர்வலங்களுக்கான கட்டுப்பாடுகள் திருமண நிகழ்ச்சிகளில் 50 நபர்களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது. இறுதி ஊர்வலங்கள் மற்றும் அதைச் சார்ந்த சடங்குகளில் 50 நபர்களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது. பொது பேருந்து போக்குவரத்து மாநிலத்தில் மாவட்டங்களுக்குள் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள தனியார் மற்றும் அரசு பொது பேருந்து போக்குவரத்து 1.7.2020 முதல் 15.7.2020 வரை தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. இ-பாஸ் முறை அந்தந்த மாவட்டத்திற்குள் இ-பாஸ் இல்லாமல் செல்ல அனுமதி அளிக்கப்படும். வெளி மாநிலங்களுக்கு சென்று வரவும், வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டுக்குள் வரவும், மாவட்டங்களுக்கிடையே சென்று வரவும், இ-பாஸ் முறை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும். முழு ஊரடங்கு நீட்டிக்கப்படும் இடங்களில் 30.6.2020 வரை வழங்கப்பட்ட இ-பாஸ் 5.7.2020 வரை செல்லும். இதற்கு மீண்டும் புதிய இ-பாஸ் பெறத் தேவை இல்லை. ஒரு மாவட்டத்திலிருந்து வேறொரு மாவட்டத்திற்கு அரசுப் பணிகளுக்கான ஒப்பந்தங்களில் பங்கேற்க விரும்பும் ஒப்பந்ததாரர்களுக்கும், அப்பணியை மேற்பார்வை செய்யும் ஒப்பந்ததாரர்களுக்கும் மற்றும் இப்பணிகள் சம்பந்தமாக அரசு அதிகாரிகளை சந்திக்க விரும்பும் ஒப்பந்ததாரர்களுக்கும் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித்தலைவர்களால் இ-பாஸ் வழங்கப்படும். பெருநகர சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதி தவிர, தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் (நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர மற்ற பகுதிகள் தவிர) 1.7.2020 முதலும், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ள பகுதிகள் மற்றும் மதுரை மாவட்டத்தில் மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகள், பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம் வட்டாரங்களுக்கு உட்பட்ட அனைத்து கிராம ஊராட்சிகளிலும் 6.7.2020 முதலும் கீழ்கண்ட பணிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது: கிராமப்புரங்களில் உள்ள சிறிய திருக்கோயில்கள், அதாவது 10,000 ரூபாய்க்கும் குறைவாக ஆண்டு வருமானம் உள்ள திருக்கோயில்களிலும், சிறிய மசூதிகளிலும், தர்காக்களிலும், தேவாலயங்களிலும் மட்டும் பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்படும். இத்தகு வழிபாட்டுத்தலங்களில் சமூக இடைவெளி மற்றும் பிற நோய் தடுப்பு நடவடிக்கைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும். மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து வழிபாட்டுத் தலங்களுக்கும், கிராமப்பகுதிகளில் உள்ள பெரிய வழிபாட்டுத் தலங்களுக்கும் தற்போதுள்ள நடைமுறைப்படி பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்பட மாட்டாது. தொழில் நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் 100 விழுக்காடு பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்கள் 100 விழுக்காடு பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது. எனினும், 20 விழுக்காடு பணியாளர்கள் வீட்டிலிருந்து பணிபுரிவதை ஊக்குவிக்க வேண்டும். அனைத்து தனியார் நிறுவனங்களும் 100 விழுக்காடு பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. எனினும், இயன்ற வரை பணியாளர்கள் வீட்டிலிருந்து பணிபுரிவதை தனியார் நிறுவனங்கள் ஊக்குவிக்க வேண்டும். வணிக வளாகங்கள் தவிர்த்து, அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள் (நகை, ஜவுளி போன்றவை) 50 விழுக்காடு பணியாளர்களுடன் செயல்படலாம். மேலும், ஒரே நேரத்தில் அதிகபட்சம் 5 வாடிக்கையாளர்கள் மட்டும் கடைக்குள் வருவதை உறுதி செய்து, தகுந்த சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில், அனுமதிக்கப்பட வேண்டும். கடைகளில், குளிர் சாதன வசதி இருப்பினும் அவை இயக்கப்படக் கூடாது. உணவகங்களில் அமர்ந்து உணவு அருந்த அனுமதி அளிக்கப்படுவதோடு, உணவகங்களில், சமூக இடைவெளியை கடைபிடிக்கும் நோக்கத்துடன், உணவகங்களில் உள்ள மொத்த இருக்கைகளில், 50 விழுக்காடு இருக்கைகளில் மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படுகிறது. எனினும், உணவகங்களில் குளிர் சாதன வசதி இருப்பினும் அவை இயக்கப்படக் கூடாது. தேநீர் கடைகள், உணவு விடுதிகள் மற்றும் காய்கறி கடைகள், மளிகைக் கடைகள் ஆகியவை காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை அனுமதிக்கப்படுகிறது. டாஸ்மாக் உள்ளிட்ட இதர கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்கலாம். தேநீர் கடைகளில் உள்ள மொத்த இருக்கையில் 50 விழுக்காடு அளவு மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உண்பதற்கு அனுமதிக்கப்படுகிறது. அத்தியாவசியமற்ற பொருட்கள் உட்பட அனைத்து பொருட்களையும், மின் வணிக நிறுவனங்கள் (நு-ஊடிஅஅநசஉந) வழங்க அனுமதிக்கப்படுகிறது. வாடகை மற்றும் டாக்ஸி வாகனங்கள் ஓட்டுநர் தவிர்த்து மூன்று பயணிகளுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது. ஆட்டோக்கள் இரண்டு பயணிகளுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது. சைக்கிள் ரிக்ஷாவும் அனுமதிக்கப்படுகிறது. மீன் கடைகள், கோழி இறைச்சி கடைகள், மற்ற இறைச்சி கடைகள் மற்றும் முட்டை விற்பனை கடைகள் சமூக இடைவெளி நடைமுறைகளுக்கு உட்பட்டது.சென்னை உட்பட ஐந்து மாவட்டங்களில் முழு லாக்டவுன் நீட்டிப்பு. மற்ற மாவட்டங்களில் எப்போதும் போல தளர்வுகளுடன் லாக்டவுன் நீட்டிப்பு. சென்னை உட்பட 5 மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் பழைய தளர்வுகள் நீட்டிப்பு. சென்னை காவல் எல்லை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் ஜூலை 5 ஆம் தேதி வரை முழு முடக்கம் தொடரும்- தமிழக அரசு. தமிழகம் முழுவதும் ஜுலை 5, 12, 19, 26 ஞாயிற்று கிழமைகளில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு தமிழகம் முழுவதும் அமலில் இருக்கும் - தமிழக அரசு. மதுரை மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் ஜூலை 5 வரை முழு ஊரடங்கு அமல். கிராமப்புறங்களில் ஆண்டு வருமானம் ரூ.10 ஆயிரத்திற்கு குறைவான கோயில், மசூதி, தேவாலயத்தில் பொதுமக்கள் தரிசனம் அனுமதி. பேருந்து போக்குவரத்து முற்றிலும் நிறுத்தம். மாவட்டங்களுக்குள் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள அரசு, தனியார் பொதுப் பேருந்து போக்குவரத்துக்கு ஜூலை 15 வரை தடை. அரசு, தனியார் பொதுப் பேருந்து போக்குவரத்து ஜூலை 15 வரை நிறுத்தப்படும்- தமிழக அரசு. அந்தந்த மாவட்டத்திற்குள் இ-பாஸ் இல்லாமல் செல்ல அனுமதி அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. வெளி மாநிலங்களுக்கு சென்று வரவும், வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டுக்குள் வரவும், மாவட்டங்களுக்கிடையே சென்று வரவும், இ-பாஸ் முறை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் எனவும் கூறியுள்ளது.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இளையாத்தங்குடியில் கோலப் புரட்சி, மீனா ஆச்சி -லீலா மாமி குழு தந்த வண்ண மாட்சி!

 * இளையாத்தங்குடியில் * *மீனா ஆச்சி - லீலா மாமி குழு செய்த கோலப் புரட்சி! இளையாத்தங்குடி கைலாஷநாதர் - நித்யகல்யாணி அம்மன் ஆலயத்தில் அதிசயம்! பகுதி 1: பிரத்யேகம் - தற்போது பிரபலமான நிகழ்வாக நடைபெறும் கோலச் சேவை சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் திருநகருக்கு அருகில் அமைந்துள்ள இளையாத்தங்குடி அருள்மிகு கைலாசநாதர் நித்திய கல்யாணி அம்மன் திருக்கோயிலில் தற்போது பக்தர்கள் நெஞ்சைக் கொள்ளை கொள்ளும் பிரபலமான நிகழ்வாக நகரத்தார் பெண்கள் குழுவினரின் கோலச் சேவை நடைபெற்று வருகிறது. இவர்கள் திருப்பணி ஏற்கனவே நாம் பிள்ளையார்பட்டி அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயிலில் கண்டு பப்ளிக் ஜஸ்டிஸ் சார்பில் வெளியிட்ட நிலையில், தற்போது இளையாத்தங்குடி கைலாசநாதர் நித்திய கல்யாணி அம்மன் திருக்கோயிலில் இது பிரபலமான நிகழ்வாக நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நாற்பது பெண்கள் அடங்கிய குழுவினர் செம்மை, பசுமை, மஞ்சள், நீலம், ஊதா என பல்வேறு வண்ணப் பொடிகளைக் கொண்டு, நுண்ணிய புள்ளிகள் வைத்து, சிக்குக் கோலங்கள், பூக்கோலங்கள், தாமரைக் கோலங்கள், கிளிக் கோலங்கள் இட்டு, கருங்கல் தரையை வண்ண ஓவியமாக மாற்றி வருகின்றனர். தலைம...

எட்டு லட்சம் மரங்களை நட்டவர், எண்ணற்ற மனிதர்களை வளர்க்கிறார்!

 --- *புண்ணியவாசலில் புண்ணியம் செய்யும் வாசல் - அன்பாலயம்!* *பப்ளிக் ஜஸ்டிஸ் ஆசிரியர் கவிஞர் சீ.க. புலித்தேவன் பாண்டியன் பிறந்தநாள் - பசுமை நாயகன் மரம் ராஜா பங்கேற்ற நெகிழ்ச்சி விழா!* *புதுக்கோட்டை, ஆவுடையார்கோவில் புண்ணியவாசல்:* தமிழ்நாட்டில் ஆயிரம் முதியோர் இல்லங்கள் உண்டு. ஆனால் புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோயில் அருகே புண்ணியவாசலில் இயங்கும் *"மரம் அறக்கட்டளையின் அன்பாலயம் - ஆதரவற்ற முதியோர் இல்லம் (Regd No: 26/2019)"* போல ஒரு இல்லத்தை எங்கும் காண முடியாது! * காரணம் என்ன தெரியுமா? * > இங்கே சுத்தம் உண்டு, சுகாதாரம் உண்டு, > அதையும் தாண்டி அன்பு உண்டு, கருணை உண்டு, > கண்ணீரைத் துடைக்கும் பாசம் உண்டு! *இதன் ஆணிவேர் யார் தெரியுமா?* நாம் பார்த்த புகைப்படங்களின் பின்னணியில் இருக்கும் உண்மையான ஹீரோ *திரு. S.R.M. ராஜா - அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் "மரம் ராஜா"* தான்! - புதுக்கோட்டை மண்ணில் மட்டும் *8 லட்சம் மரங்களை* நட்டு, தண்ணீர் ஊற்றி தன் பிள்ளைகள் போல வளர்த்த பசுமை நாயகன்! - அந்த பசுமை நாயகன் தான் *"மரம் அறக்கட்டளை"* நிறுவனர்! - மரம் வளர்த...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...