முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்திய வேளாண்மைத் துறை சார்ந்த சீர்திருத்தக் கொள்கை மாற்றங்கள்.குறித்த இணையவழிக் கருத்தரங்கு

மத்திய வேளாண்மை கூட்டுறவு விவசாயிகள் நலன் துறை ‘இந்திய வேளாண் துறையில் சீர்திருத்தங்கள், கொள்கை மாற்றங்கள், முதலீட்டு வாய்ப்புகள்’ ஆகியவை குறித்த இரண்டு இணைய வழி கருத்தரங்குகளை நடத்தியது மத்திய வேளாண்மை, கூட்டுறவு, விவசாயிகள் நலன் துறை 25, 26 ஜூன் 2020 தேதிகளில் இரண்டு இணையவழிக் கருத்தரங்குகளை நடத்தியது. முதலாவது கருத்தரங்கு, ‘இந்திய விவசாயத்தில் நிலச்சீர்திருத்தங்கள், விவசாயத் தொழில்களில் உருவாகும் முதலீட்டு வாய்ப்புகள்’, என்ற தலைப்பிலும், இரண்டாவது கருத்தரங்கு, ‘விவசாய சீர்திருத்தங்களில் புதிய விடியல் - மாற்றங்கள் கொள்கை வகுப்பாளர்களின் கண்ணோட்டம்’ என்ற தலைப்பிலும் நடைபெற்றன. வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் துறைச் செயலர் திரு.சஞ்சய் அகர்வால்; கால்நடை, பால்பண்ணை துறைச் செயலர் திரு. அப்துல் சதுர்வேதி; மீன் வளத்துறைச் செயலர் டாக்டர் ராஜீவ் ரஞ்சன்; உணவுத்துறை செயலர் திருமதி புஷ்பா சுப்பிரமணியன் ஆகியோர் இந்த கருத்தரங்குகளில் உரையாற்றினர்.   கோவிட் 19 பெருந்தொற்று காரணமாக ஏற்பட்ட நெருக்கடி நிலைமையின் போது வேளாண் துறை மற்றும் விவசாயிகள் நலனுக்காக பிரதமர் திரு. நரேந்திரமோடி தலைமையிலான அரசு, புதிய பாதைகளை உருவாக்குவதற்காக எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவித்தார். இந்த நெருக்கடி காலத்தின் போதும், இந்திய விவசாயிகள், வேளாண் துறையினர் பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்கள். இந்த ஆண்டு கரீஃப் பருவத்தின் போது 316 லட்சம் ஹெக்டேர் நிலம் பயிரிடப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு இதே காலத்தில் 154 லட்சம் ஹெக்டர் நிலம் பெயரிடப்பட்டிருந்தது. கடந்த ஐந்து ஆண்டுகளில் சராசரியாக 187 லட்சம் எக்டர் பயிரிடப்பட்டது என்று அவர் கூறினார்.   மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15 சதவிகிதம் வேளாண் துறையில் இருந்து கிடைக்கிறது. நாட்டின் மக்கள்தொகையில் 50 சதவீதத்தினருக்கு மேற்பட்டவர்களுக்கு வேளாண் துறை வாழ்வாதாரம் அளித்து வருகிறது. வேளாண்துறையில் இந்தியா வலுவான நிலையில் உள்ளது என்று திரு சஞ்சய் அகர்வால் வலியுறுத்தினார். அறுவடைக்குப் பிந்தைய கட்டமைப்புக்காக ஒரு லட்சம் கோடி ரூபாயிலான வேளாண் கட்டமைப்பு நிதியம்; பத்தாயிரம் FPO களுக்கான திட்டம்; இதுவரை கேசிசி பெறாத 25 மில்லியன் விவசாயிகளுக்கு கே சி சி வழங்குவதற்கான சிறப்பு திட்டம்; டிஜிட்டல் மயமான வேளாண் சந்தை உருவாகும் வகையிலான, திறமையான வேளாண்மைக்காக, வேளாண் அடுக்கு ஒன்றை ஏற்படுத்துவது; போன்ற பல திட்டங்கள் மூலமாக இந்தியாவில் உள்ள வேளாண் சூழல் மேலும் வலுப்படுத்தப்படும் என்று அவர் கூறினார். வேளாண்மையில் சுயசார்பு என்ற தொலைநோக்கு திட்டத்தையும் அவர் முன்வைத்தார். விவசாயிகள் அதிக வருமானம் ஈட்டி, நல்ல வாழ்க்கைத் தரத்துடன் வாழும் வகையில், அவர்களைத் தொழில் முனைவோர்களாக உருவாக்குவது; முதலீட்டு வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள ‘வேளாண்மைக்கு செல்லுங்கள்’ என்று வேளாண் துறையை மாற்றுவது; உலகிற்கான உணவுக் கூடையாக இந்தியாவை உருவாக்குவது; போன்றவை குறித்தும் செயலர் கூறினார்.   கால்நடை வளர்ப்பு என்பதை ஏடிஎம் இயந்திரத்துடன் ஒப்பிட்டுப் பேசிய கால்நடை பால்பண்ணைத் துறைச் செயலர் திரு.அதுல் சதுர்வேதி சில்லரை வியாபாரிகளிடம் பால் விற்பனையாவதைப் போல, வேறு எந்தப் பொருளும் விரைவில் விற்பனையாவது இல்லை என்று கூறினார். தற்போது 158 மில்லியன் எம்டி டன்னாக உள்ள பால் துறை அடுத்த 5 ஆண்டுகளில் 290 மில்லியன் எம்டி டன்னாக அதிகரிக்கச் செய்வதே நோக்கமாகும் என்று கூறினார். பால் பதப்படுத்தும் துறையில் ஒழுங்கமைக்கப்பட்ட பிரிவின் பங்கு தற்போது 30 முதல் 35 சதவீதமாக உள்ளது என்றும், இதை 50 சதவீதமாக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் செயலர் கூறினார்.   மீன்வளத் துறைச் செயலர் டாக்டர் ராஜீவ் ரஞ்சன் பேசுகையில், மீன்வளத்துறை புதிதாக உதயமாகும் துறைகளுள் ஒன்று என்று கூறினார். 2014- 15 முதல் 2018- 19 வரை மீன்வளத்துறை 10.8 7 சதவிகிதம் வளர்ச்சியடைந்துள்ளது என்றார். மீன் உற்பத்தி 7.53 சதவிகிதமும், மீன் ஏற்றுமதி 9.71 சதவிகிதமும் அதிகரித்துள்ளது என்றும், உலக அளவிலான மீன் உற்பத்தியில் இந்தியாவின் பங்கு 7.7 3 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்றும் கூறினார் உலகிலேயே மீன்வளர்ப்பு உற்பத்தியில் இரண்டாவது மிகப்பெரிய நாடாகவும், கடல் உணவுப் பொருட்களின் ஏற்றுமதியில் நான்காவது பெரிய நாடாகவும் இந்தியா உள்ளது என்றும் அவர் கூறினார்.   அடுத்த 5 ஆண்டுகளில் இந்தத் துறைக்கான மத்திய அரசின் முக்கிய இலக்குகளையும் டாக்டர் ராஜீவ் ரஞ்சன் எடுத்துக் கூறினார். மீன் உற்பத்தி 2018 -19 இல் 137.58 லட்சம் டன்னாக இருந்தது. 2024- 25 காலத்தில் 220 லட்சம் டன்னாக உயர்த்தி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சராசரி மீன்வளர்ப்பு உற்பத்தி ஹெக்டேருக்கு 3.3 டன்னாக இருந்தது. 2024- 25ல் இது ஹெக்டேருக்கு 5.0 டன்னாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மீன் ஏற்றுமதி 2024- 25 ஆண்டுக்குள் மேலும் ஒரு லட்சம் கோடி அதிகமான அளவிற்கு இருக்கும். 2028 ஆம் ஆண்டுக்குள் 2 லட்சம் கோடி அதிகரிக்கும். 2018- 19 இல் 15 லட்சம் என்றிருந்த வேலை வாய்ப்பு 2024- 25 ல் 55 லட்சம் என்று அதிகரிக்கும்.  


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

சோழப் பேரரசி வானதி எழுப்பிய மூவர் கோவில்

முதலாம் இராஜேந்திர சோழரின் தாய்  வானவன் மாதேவி எனும் அரசி வானதி, சோழர்களின் வரலாற்றில் பெரும் புகழ் மாமன்னர் அருள்மொழித் தேவன் எனும் இராஜராஜசோழச் சக்கரவர்த்தி மீது இணையில்லாத காதல் மங்கை கொடும்பாளூர் இளவரசி வானதியை "பொன்னியின் செல்வன்" கதை படித்த யாரும் மறக்க முடியாது. சோழர் கடற்படையின் பரப்பை இலங்கை வரை  சென்று வென்று வந்த வரலாற்று நிகழ்வுகளின் மூலம் குறுநில மன்னர்கள் அல்லது வேளிர்  துணை நின்றார்கள் அதில் ஈழத்துப் பட்டம்  வென்ற கொடும்பாளூர் வேளிர் மகளான வானதி இளம் வயதிலேயே தாய் தந்தையை இழந்தவர். கொடும்பாளூர் சிற்றரசன் அதாவது வேளிர் சோழ சாம்ராஜ்யத்தின் சேனாதிபதி யாகவும் இருந்த சிறிய தந்தை குறுநில மன்னர் பூதி விக்ரமகேசரியால் வளர்க்கப்பட்டவர் தான் வானவன் மாதேவி எனும் அரசி வானதி. கொடும்பாளூர் பிறந்து திருக்கோவிலூரை பின்னர் ஆண்ட மலையமானின் மகள்  “மேலும் வானவன்மாதேவி மன்னர் ராஜராஜ சோழர் மறைந்த உடன் பிரிவாற்றாமல் உடன்கட்டை ஏறி தன் உயிரை மாய்த்துக் கொண்டாள். இதை திருவாலங்காட்டுச் செப்பேடுகள் மூலம் அறியலாம் ஈழத்தில் நடைபெற்ற யுத்தத்திற்காக கொடும்பாளூர்  வேளிர் கடல...