முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஹவாலா மோசடியில் தொழிலதிபரைக் கடத்திய திருட்டுத் தீவிரவாதிகள்

என் ஐ ஏ அதிகாரிகளைப் போல் நடித்து தொழிலதிபரைக் கடத்தி ரூபாய் 2 கோடி கொள்ளையடித்த பயங்கரவாதிக்கு காவல்துறை வலை ஹவாலா தொழில் போட்டியில் என் ஐ ஏ அதிகாரிகள் போல நடித்து தொழிலதிபரைக் கடத்தி ரூபாய். 2 கோடி பணம் பறித்த குற்றத்தில் தீவிரவாத வழக்கில் தொடர்புடைய அதிராமபட்டினம் தவ்பீக்கை காவல்துறை தேடி வருகின்றனர். சென்னை, ஏழுகிணறு பகுதியில் ஸ்கிரீன் பிரிண்டிங் தொழில் செய்து வரும் திவான் என்ற அக்பர் ஆகஸ்டு 17 ஆம் தேதி முத்தியால்பேட்டை நண்பர் வீட்டுக்குச் சென்று திரும்பிய போது நள்ளிரவு 1.30 மணியளவில் முத்தியால்பேட்டை காவல் நிலைய எல்லையில் காரில் வந்த ஐந்து மர்ம நபர்கள் அக்பரை மிரட்டி காரில் கடத்தியவர்கள் தாங்களை என் ஐ ஏ அதிகாரிகளெனக் கூறியவர்கள் சென்னை கிழக்குக் கடற்கரை சாலையிலுள்ள தனியார் ரிசார்ட்டில் இரண்டு நாட்கள் அவரை அடைத்து வைத்து அடித்துத் துன்புறுத்தி ரூபாய் 2 கோடி பணம் பறித்த பின் அவரை வெளியே விட்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக கடந்த 24 ஆம் தேதி சென்னை முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு காவல்துறை கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் படி வடசென்னை இணைக்கமிஷனர் பாலகிருஷ்ணன், பூக்கடை துணைக்கமிஷனர் கார்த்திக் மேற்பார்வையில் குற்றவாளிகளைக் கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்ட நிலையில் கடத்தலில் ஈடுபட்ட தியாகராயநகரைச் சேர்ந்த உமா மகேஸ்வரன், அரியலுார் ஆல்பர்ட் ஆகிய 2 பேர் நேற்று முன்தினம் தனிப்படை காவல்துறையினர் கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தியதில் பரபரப்பு த் தகவல்கள் வெளியானது. ‘‘முத்தியால்பேட்டை பிரண்டிங் பிரஸ் அதிபர் கடத்தலில் தஞ்சை, அதிராமப்பட்டினத்தைச் சேர்ந்த தவ்பீக் உள்பட 7 பேர் செயல்பட்டு வந்துள்ளனர். தவ்பீக் இஸ்லாமிய தற்காப்புப்படை, இறைவன் ஒருவனே போன்ற அமைப்புகள் நடத்தி பல இளைஞர்களை அடிப்படைவாத செயல்களுக்கு தவ்பீக் ஈடுபடுத்தியுள்ளார். தவ்பிக் மீது தேசிய புலனாய்வு முகமையான என் ஐ ஏ விலும் வழக்குள்ளது. இந்தியாவையே உலுக்கிய மும்பை வெடிகுண்டு விபத்து சம்பவத்தில் தௌவ்பீக் தொடர்புடையவராவர். தமிழகம் முழுவதும் தீவிரவாத அமைப்பிற்காக நிதி திரட்டும் வேலையில் ஈடுபட்டதாகவும், ஹவாலா பணப்பரிமாற்றம் மூலம் தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டும் பணியில் தௌவ்பீக் தலைவனாக இருந்து செயல்பட்டு வந்துள்ளார். அந்த வகையில் தொழிலதிபரான திவான் அக்பர் மற்றும் தவ்பீக் இருவருமே போட்டி போட்டுக்கொண்டு ஹவாலா பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் தொழில் போட்டி மோதல் காரணமாக தௌவ்பீக் தனது கூட்டாளிகள் மூலம் தொழிலதிபர் அக்பரைக் கடத்தியது அம்பலமாகியுள்ளது. மேலும் அக்பரை மீட்பதற்காக கொடுக்கப்பட்டது ஹவாலா பணம் என காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ள விவகாரத்தில் அடிப்படைவாத நடவடிக்கைகளில் தொடர்பு உள்ளதால் க்யூ பிரிவு காவல்துறையும் விசாரணைக்களத்தில் இறங்கியுள்ளனர். தௌவ்பீக்கை பிடிப்பதற்கு தமிழகம் முழுவதும் காவல்துறையினர் உஷார் படுத்தப்பட்டுள்ள நிலையில் திருச்சியில் தௌவ்பீக்கின் மனைவி சல்மாவை காவல்துறையினர் போலி பாஸ்போர்ட் வழக்கில் பிடித்துள்ளனர். தௌவ்பீக், சல்மாவைச் சந்தித்து வெளிநாடு தப்பிச்செல்ல திட்டமிட்டதாக தெரியவந்துள்ளது. இதனையடுத்து சல்மாவை திருச்சி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில் வங்கதேசத்திலிருந்து சட்டவிரோதமாகத் திருச்சி வந்ததும் தெரியவந்துள்ளது. வங்கதேசத்தைச் சேர்ந்த சல்மா, தௌவ்பீக்கை காதலித்து திருமணம் செய்துள்ளார். போலி பாஸ்போர்ட் மூலம் சட்டவிரோதமாக சென்னைக்கு வந்துள்ளனர். அங்கிருந்து கடந்த ஐந்து மாதங்களாக திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே வாடகை வீட்டில் தங்கியிருந்துள்ளார். தற்போது கைது செய்யப்பட்ட சல்மா மூன்று மாதக் கர்ப்பிணியாக இருப்பதால் அரசு மருத்துவமனையில் சிகிச்சையளித்து சென்னை கொண்டு செல்ல காவல்துறையில் திட்டமிட்டுள்ளனர். சல்மாவிடம் விசாரணை நடத்தி தௌவ்பிக் பதுங்கியிருக்குமிடம் குறித்துக் கண்டுபிடிக்க தீவிரமாக முனைந்துள்ள நிலையில் கடத்தல் நடந்த இடத்திலும், அக்பரை கடத்தி வைக்கப்பட்ட இடத்திலும் செல்போன் அழைப்புகள் மற்றும் சிக்னலை ஆய்வு செய்து தௌவ்பீக் மற்றும் கூட்டாளிகளை சைபர் க்ரைம் போலீசார் உதவியுடன் தேடி வருகின்றனர். கடத்தப்பட்ட தொழிலதிபர் அக்பரும் ஹவாலா பணப்பறிமாற்றத்தில் நீண்ட காலமாக ஈடுபட்டுள்ளதால் முத்தியால்பேட்டை காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் தேசிய புலனாய்வு முகமை அமைப்பும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...