முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நண்பர்கள் பணத்தால் பிரிந்த வேதனை. இந்த மோட்சதீபம் அமைதி தருமா

மறைந்த S P பாலசுப்ரமணியம் அவர்களின் ஆத்மா சாந்தி அடைய இசைஞானி இளையராஜா அவர்கள் திருவண்ணாமலையில் ரமணாஸ்ரமத்தில சற்று முன் மோட்ச தீபம் ஏற்றினார் . . .இளையராஜா - எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மோதல் ஏதோ ராயல்டி பிரச்னை என பார்க்கப்படுகிறது. உண்மையைச் சொன்னால் இருவருக்கும் கடந்த ஆறு மாத காலமாகவே பனிப்போர் நடந்தது என்று கோலிவுட்டில் பேசும் நிலை. 2019 ஆம் வருடம் அமெரிக்காவில் நடந்த இளையராஜாவின் இசைக் கச்சேரிக்கு ஏழு லட்சம் வாங்கிக் கொண்டிருந்த எஸ்பிபி.திடீரென்று இருபது லட்சம் தந்தால் தான் வருவேனென தன் சம்பளத்தை உயர்த்தி கறாராக நடந்து கொண்டு நிகழ்ச்சியைப் புறக்கணித்து அமெரிக்கா போகாமல் இருந்துவிட்டாராம், அதன் வெளிப்பாடு தான் இந்தப் பிரச்னை எனவும், இளையராஜா- எஸ்.பி.பி பிரச்சனை அவர்களின் வாரிசுகளுக்கிடையேயானது. கார்த்திக் ராஜாவை போன்றே, எஸ்.பி.பி.சரணும் தனது தந்தையை வைத்து உலகம் முழுக்க கச்சேரி நடத்த முடிவு செய்த போட்டியின் வெளிப்பாடு தான் பிரச்னைக்கு முக்கிய காரணமாம். காப்புரிமைச் சட்டம் பற்றிய புரிதல் இல்லாமல் போய்விட்டது. சட்டப்படி, எந்த ஒரு பாடலையும் கேசட், சிடி, அல்லது நவீன கால ஐடியூன்ஸ் போன்றவை மூலமே விலைக்கு வாங்க வேண்டும். ரேடியோவில், டிவி சேனலில் கேட்கும் போது அந்தந்த நிறுவனங்கள் அதை விலை கொடுத்துத் தான் வாங்குகின்றன. சட்டப்படி இளையராஜா செய்தது சரி தான்.இருந்தும் பாடல் எழுதிய கவிஞர் இங்கு காணாமல் போவதா. ஒரு படைப்பாளி தன் படைப்பின் மீதான உரிமையை நிலை நாட்டுவதையே தவறென்றோ பேராசை என்றோ சொல்ல முடியாது. எஸ்பிபி.யின் வெளிநாட்டுப் பயணம் ஏதோ மக்களை மகிழ்விக்கும் இலவசப் பயணமட்டுமல்ல. நூறு சதவீதம் பணம் வசூலிக்கும் இசை நிகழ்ச்சிகள். நிகழ்ச்சியை ரசிக்க வரும் மக்களிடமிருந்து வசூலிக்கும் பல லட்சம், மில்லியன் டாலர்களிலிருந்து, பாடுகிறவர்களுக்கு, இசைக் கலைஞர்களுக்கென எல்லாத் தரப்புக்கும் பணம் பகிர்ந்து தருகிறார்கள். அந்தப் பாடல்களை உருவாக்கியதில் இசைப் படைப்பாளியான இளையராஜா, தனக்கான உரிமையை நிலை நாட்ட முயன்றார் அவர் அனுப்பிய இந்த நோட்டீஸ், வணிக ரீதியில், அவரது பாடல்களை பயன்படுத்துவோருக்கே அனுப்பப்பட்டுள்ளது. மேடைகச்சேரி நடத்துவோர், ராயல்டி செலுத்த வேண்டியதில்லை என்று இளையராஜா தரப்பு கூறினாலும் தனது பாடல்களைப் பாட பணம் தர வேண்டும் என இளையராஜா கேட்பது சாதாரண மக்களைப் பாதிக்காதா எனும் கருத்தும், காப்புரிமையை பற்றிப் பேசினால் இளையராஜாவின் இசையைக் கேட்பது குறைந்து விடுமென்பது ரசிகர்களுக்குள்ள அச்சம். தனக்குக் கிடைக்கும் ராயல்டி தொகையை தான் மட்டும் அனுபவிக்காமல், ஒரு பகுதியை சம்பந்தப்பட்ட பாடலாசிரியர் மற்றும் தயாரிப்பாளருக்கு தருவதாக இளையராஜா கூறியிருக்கிறார். ராயல்டி கலாச்சாரத்தை ஏதோ இளையராஜா மட்டும் தான் கேட்கிறார் என கண்ணோட்டம் உள்ளது. உண்மையை சொன்னால், ஏ.ஆர். ரஹ்மான் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்கள் தங்களுக்கான ராயல்ட்டியை பெற்றே இசை நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள். 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் இளையராஜா,  எஸ்.பி. பாலசுப்பிரமணியம் இடையே காப்புரிமைப் பிரச்னை தொடர்பாக மோதல் ஏற்பட திரையிசைப் பயணத்தில் 50 ஆண்டுகளைப் பூர்த்தி செய்துள்ளதையொட்டி எஸ்.பி. பாலசுப்பிரமணியம் உலகம் முழுவதும் பயணித்து இசைக் கச்சேரிகளை நடத்தினார். ஆனால், இளையராஜாவின் சார்பில் அவரது வழக்கறிஞர் எஸ்பிபிக்கும், பாடகர் சரண், பாடகி சித்ரா, கச்சேரியை நடத்தும் ஒருங்கிணைப்பாளர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பினார். இளையராஜா இசையமைத்த பாடல்களை அவரின் அனுமதி இல்லாமல் மேடையில் பாடவோ, இசைக்கச்சேரி நடத்தவோ கூடாது. அதையும் மீறிச் செய்தால் காப்புரிமைச் சட்டத்துக்கு எதிராகிவிடும். எனவே மிகப்பெரிய அபராதத் தொகையை சட்டப்படி தரவேண்டியிருக்கும் என்று அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டிருந்தததையடுத்து நான் இனி இளையராஜா பாடல்களை மேடையில் பாட மாட்டேன். வேறு சில இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடியிருக்கிறேன். அந்தப் பாடல்களை நான் இனி மேடைகளில் பாடுகிறேன் என்ற பின்னர், என் மீது வழக்குத் தொடர்ந்தாலும் பரவாயில்லை நான் இளையராஜா படல்களை மேடையில் பாடுவேன் என்று எஸ்பிபி கூறினார்.   இந்நிலையில், வரும் ஜூன் 2 அன்று தன்னுடைய பிறந்தநாளையொட்டி, இசை நிகழ்ச்சி ஒன்றை சென்னையில் நடத்தவுள்ளார் இசையமைப்பாளர் இளையராஜா. இந்த இசை நிகழ்ச்சியில் எஸ்.பி. பாலசுப்பிரமணியன் இனி இல்லை அந்த ராயல்டி கேட்ட பாவ மன்னிப்புக்காக. மோட்சதீபம் போடுகிறார் போல ஒரு சந்தேகம் தான் வருகிறது அதில் பாசம் தெரியவில்லை.. எஸ்.பி.பி இறக்கும் போது அவரது நிகர சொத்து மதிப்பு கிட்டத்தட்ட $114 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.எஸ்பிபியின் கடந்த கால படைப்புகளிலிருந்து பெறப்பட்ட ராயல்டி மற்றும் இசையில் அவரின் பல்வேறு பங்களிப்புகளையும் சேர்த்தே இந்த மதிப்பு கணக்கிடப்பட்டுள்ளது."தற்போது தமிழகஅரசு உதவி செய்ய மறுத்துவிட்டதாகவும். இந்தியாவின் துணை ஜனாதிபதி தனது தந்தையின் சிகிச்சையின் பில்களை செலுத்த குடும்பத்திற்கு உதவ வேண்டும் என்ற வதந்திகளை பரப்பி வரும் பலரும் கவனிக்க வேண்டியது அதை எஸ்.பி.பியின் மகன் மறுக்கிறார். மருத்துவமனை பில்கள் செலுத்துதல் மற்றும் டெல்லியின் உதவி ஆகியவை பரவலாக பரப்பப்பட்ட வதந்திகள் அதன் "தாக்குதல் மற்றும் வேதனை" உணர்வு ஏற்படும். இதை அவர்களின் பாடல் வரிகளில் கூறுவதானா ல் "பயணம் எங்கே போனால் என்ன பாதை நூறு ஆனால் என்ன தோட்டம் வெச்சவன் தண்ணீர் விடுவான் சும்மா நில்லடா டோய் போடா எல்லாம் விட்டுத் தள்ளு பழசை எல்லாம் சுட்டுத் தள்ளு புதுசா இப்போ பொறந்தோமுன்னு எண்ணிக்கொள்ளடா டோய்" பணம் இவர்களுக்கு நடபைப் பிரித்தது ...இப்போது வேதனை விளிம்பில் இசைஞானி..மோட்சதீபம் பல கதை சொல்கிறது.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...