முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்தியாவிற்கான வெளிநாட்டு நன்கொடை திருத்தச்சட்டம் குடியரசுத் தலைவர் ஒப்புதல்

இந்தியாவில் என்.ஜி.ஓக்கள் வெளிநாடுகளிலிருந்து நன்கொடை பெறுவதற்கான சட்டத் திருத்தங்களுக்கு (FCRA Amendment Act 2020) க்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தார் எப்போது அமலாகுமென்ற விவரமில்லை. இந்தியாவின் முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டை போடவும், ஹிந்து மதத்தை அழிக்கும் விதத்தில் பாரம்பரியத்தை தடுக்கும் வழக்குகள் போடவும், இந்தியாவை உடைக்கவும் வெளிநாடுகளிலிருந்து மதமாற்றம் செய்யவும் என்.ஜி.ஓ வில் சில கைக்கூலிகளும், எதிர்க்கட்சிகளும் எடுத்த முயற்சிகளணைத்தும் தோல்வி. என்.ஜி.ஓக்களின் நிர்வாகிகள் ஆதார் எண்களைப் பகிர வேண்டும், 20 சதத்திற்கும் அதிகமாக நிர்வாகச் செலவுகள் செய்யக்கூடாது, நன்கொடை பெற்ற காரணத்துக்காக மட்டுமே செலவிட வேண்டும், பிற என்.ஜி.ஓக்களுக்கு பணம் வழங்க முடியாது இனி - எனப் பல கட்டுப்பாடுகள். அரசிதழ். The Gazette of India CG-DL-E-28092020-222069 MINISTRY OF LAW AND JUSTICE (Legislative Department) New Delhi, the 28th September, 2020 வெளிவந்தது. சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தால் என்.ஜி.ஓக்கள் கதறுவது இப்போது காதில் விழுகிறது.. விவரம் கீழே. 2010 ல் வந்த வெளிநாட்டுப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டத்தில் (Foreign Contribution (Regulation) Act, FCRA 2010) லோக் சபாவில் திருத்தம் கொண்டு வரப்பட்டது FCRA 2020. அதிலிருந்து சில அம்சங்கள். "அரசு ஊழியர்" என அரசியலமைப்பால் வரையறுக்கப்பட்ட எவரும் இந்த வெளிநாட்டுப் பணம் பெற முடியாது இனிமேல் வெளிநாட்டிலிருந்து நன்கொடைப் பணம் பெறுபவர் (தனி மனிதர், குழு, நிறுவனம்) இனி வேறெவருக்கும் அந்தப் பணத்தைப் பகிர அல்லது மாற்ற (Transfer) முடியாது. முன்பெல்லாம் ஒரு என்.ஜி.ஓ தொண்டு நிறுவனம் பணம் வாங்கி, மற்ற உபரி சில்லரை என்.ஜி.ஓக்களுக்கு பணத்தை Transfer செய்ய, அந்த சில்லரைகள் சில கலவர வேலைகள் செய்து வந்தன. அது இனி நடக்காது. அப்படிஒ் பணத்தை டிரான்ஸ்ஃபர் செய்தால், உரிமம் ரத்து. இனி வெளிநாட்டிலிருந்து பணம் பெறும் என்.ஜி.ஓக்கள் (உரிமத்துக்காக விண்ணப்பிக்கும் போதோ அல்லது புதுப்பிக்கும் போதோ) அந்த என்.ஜி.ஓவின் நிர்வாகிகள் உள்ளிட்டோரின் ஆதார் எண்ணைச் சமர்ப்பிக்க வேண்டும். வெளிநாட்டவர் தங்கள் கடவுச் சீட்டு அதாவது பாஸ்போர்ட் எண்ணைப் பகிர வேண்டும். இந்தக் கட்டுப்பாட்டுக்கு எதிர்க்கட்சிகளும், என்.ஜி.ஓக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததிலிருந்தே இதன் முக்கியத்துவம் தெளிவாகிறது. இனி வெளிநாட்டிலிருந்து பணம் பெறும் என்.ஜி.ஓக்கள் டில்லியில் இருக்கும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இண்டியாவின் குறிப்பிட்ட கிளை ஒன்றில் FCRA கணக்குத் துவங்க வேண்டும். அதன் மூலம் மட்டுமே பணத்தைப் பெறலாம். இந்தக் கணக்கில் வெளிநாட்டுப் பணம் மட்டுமே செலுத்தலாம். வேறெந்தப் பணமும் செலுத்த முடியாது. உரிமம் முடிந்து 6 மாதங்கள் வரை அதைப் புதுப்பிக்க விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பவர்களுக்கு உரிமைச் சான்றிதழ் வழங்குமுன், அவர்களது பினாமி (சொத்து) விவரங்கள், அவர்கள் மதமாற்றம் மற்றும் இனவாதக் கலவரங்கள் உள்ளிட்ட வழக்குகளில் தண்டிக்கப்பட்டார்களா என்ற விவரம், பெற்ற நன்கொடையை வேறு காரணங்களுக்காக செலவிட்டார்களா போன்றவற்றை விசாரிக்கும் உரிமையை அரசு கண்காணித்து பின் வழங்கும். நன்கொடைப் பயன்பாட்டில் (utilization) விதிகள்: எந்தக் காரணத்தை காட்டி மத்திய அரசிடம் அனுமதி பெறப்பட்டதோ, அந்த காரணத்துக்காக மட்டுமே இந்த வெளிநாட்டு நன்கொடை செலவிடப்பட வேண்டும். பணம் தவறாக உபயோகிக்கப்பட்டதாக அரசு நம்பினால், மேலும் பணம் எடுக்க இயலாத வகையில் அந்தக் கணக்கை அரசு முடக்கலாம். (கணக்கில் மீதமிருக்கும் பணம் அரசு எடுத்துக் கொள்ளுமா என்பது தெரியவில்லை. ஆனால், பெற்ற பணத்தை வெளிநாட்டுக்கு திரும்ப அனுப்ப முடியாது. இது வரை பெற்ற பணத்தில் பல ஆயிரம் கோடி வங்கிகளில் உள்ளது என்பது சிறப்பு! அநேகமாக அரசு எடுத்துக் கொள்ளும் என்கிறார்கள். மேலும் விவரங்கள் பின்னர். இந்த 5 & 6 கண்டிஷனுக்கு என்.ஜி.ஓ நிறுவனம் கவலைப்பட அதுவே காரணம் வெளிநாட்டுப் பணத்தில் இது வரை 50 சதம் நிர்வாகக் காரணங்களுக்காக (administrative purposes) செலவிட அனுமதி இருந்தது. அதை 20 சதம் என குறைத்து விட்டது (இதன் காரணமாக இனி பெரிய ஹோட்டல்களில் உணவு, கேளிக்கை, பயண செலவு எல்லாவற்றையும் குறைக்க வேண்டிய நிலையில் தவறிழைக்கும் என்.ஜி.ஓக்கள் பதிவை 180 நாட்களுக்கு இடை நீக்கம் செய்யுமாம் அரசு. அதை மேலும் 180 நாட்களுக்கு நீட்டிக்கவும் முடியுமாம். 2014 முதல் பல என்.ஜி.ஓ உரிமம் ரத்து செய்யப்பட்டிருந்தாலும், மீதமிருக்கும் என்.ஜி.ஓக்கள் வெளிநாடுகளிலிருந்து பணம் பெறுவதில் எந்த குறைபாடும் இருப்பதாக தெரியவில்லை. 2018-19 காலக் கட்டத்தில் ரூ 20,011.21 கோடி பணம் வந்துள்ளது 'இந்தியாவை உடைக்கும்' நோக்கத்துடன் செயல்படும் ஆக்ஸ்ஃபாம் என்.ஜி.ஓ தலைவன், "இது என்.ஜி.ஓக்களுக்கு பேரழிவு தரும் அடி" எனும் கதறல் காதுகளுக்கு இனிமை. இதில் முக்கியமான விஷயம்: என்.ஜி.ஓ எதுவும் மதமாற்றத்தில் ஈடுபடக்கூடாது என்பது. யாராவது அவர்கள் மீது மதமாற்றத்தில் ஈடுபட்டார்கள் என்று புகாரளித்தாலும் போதும், அவர்கள் என்.ஜி.ஓ கணக்கு முடக்கப்படும்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...