முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம்-2020

பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் 2020 மத்திய கண்காணிப்பு ஆணையம் அக்டோபர் 27ஆம் தேதி முதல் நவம்பர் 2ஆம் தேதி வரை கண்காணிப்பு விழிப்புணர்வு வாரத்தைக் கடைப்பிடிக்கிறது. ஒவ்வொரு வருடமும் சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாளை (அக்டோபர் 31) முன்னிட்டு இந்த வாரம் கடைபிடிக்கப்படுகிறது.  குடிமக்களின் பங்களிப்புடன் நேர்மை மற்றும் நாணயத் தன்மையை இந்த மாநாடு உறுதி செய்கிறது. 'விழிப்பான இந்தியா, வளமான இந்தியா' என்னும் கருப்பொருளில், இந்த வருடம் அக்டோபர் 27ஆம் தேதி முதல் நவம்பர் 2ஆம் தேதி வரை  கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. மத்திய புலனாய்வுப் பிரிவு நடத்தும் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு குறித்த தேசிய மாநாட்டை வரும் 27ம் தேதி மாலை 5 மணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சி மத்திய அரசு நிறுவனங்களில் கணினி மூலமாக நேரலையாக ஒளிபரப்பப்படும். அனைத்து நிறுவனங்களும் கொவிட்-19 முன்னெச்சரிக்கை வழிமுறைகளைக் கடைப்பிடித்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றன. மேலும்  மத்திய கண்காணிப்பு ஆணையம் வெளியிட்டுள்ள ஒருமைப்பாட்டு உறுதிமொழியை அனைத்து ஊழியர்களும் ஏற்கவேண்டும் என்றும், அந்த நிறுவனங்களுடன் தொடர்பில் உள்ள விற்பனையாளர்கள், ஒப்பந்ததாரர்கள் ஆகியோரும் இந்த உறுதிமொழியை ஏற்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மத்திய அரசு அமைச்சகங்கள் மற்றும் நிறுவனங்களும் 'விழிப்பான இந்தியா, வளமான இந்தியா' இன்னும் கருப்பொருள் தொடர்பான நிகழ்ச்சிகளுக்கு நிறுவனங்களிலேயே ஏற்பாடு செய்யவும் கேட்டுக் கொள்ளப்படுகின்றன.பிரதமர் அலுவலகம் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு குறித்த தேசிய மாநாட்டை பிரதமர் துவக்கி வைக்கிறார். 'விழிப்பான இந்தியா, வளமான இந்தியா' என்னும் கருப்பொருளில், லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு குறித்த தேசிய மாநாட்டை பிரதமர் திரு நரேந்திர மோடி, வரும் 27ம் தேதி மாலை 4:45 மணிக்கு காணொலி வாயிலாகத் தொடங்கி வைக்கிறார். இந்த மாநாட்டின் தொடக்க விழாவைக் கீழே குறிப்பிட்டுள்ள இணையதள முகவரியில் நேரலையாகக் காணலாம் https://pmindiawebcast.nic.in/ பின்னணி: ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 27ம் தேதி முதல் நவம்பர் 2ம் தேதி வரை  கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, மத்திய புலனாய்வுப் பிரிவு இந்த தேசிய மாநாட்டிற்கு ஏற்பாடு செய்துள்ளது. கண்காணிப்புக் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், குடிமக்களின் பங்களிப்புடன் நேர்மை மற்றும் நாணயத் தன்மையை உறுதி செய்வதிலும் இந்தியாவின் பங்களிப்பு தொடர்பாக இந்த மாநாட்டின் செயல்பாடுகள் அமைந்திருக்கும். வெளிநாட்டின் அதிகார வரம்பிற்குள் புலனாய்வு மேற்கொள்வதில் உள்ள சவால்கள், ஊழலுக்கு எதிராக முன்னெச்சரிக்கைக் கண்காணிப்பு நடவடிக்கைகள், வங்கிக் குற்றங்களை முன்கூட்டியே தடுக்கும் வழிமுறைகள், நிலையான வளர்ச்சிக்கு உறுதுணையான தரமான தணிக்கை, ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் ஊழல் தடுப்புச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்கள், மேம்பாடு மற்றும் பயிற்சி, பலதரப்பட்ட அமைப்புகளும் ஒன்றிணைந்து துரிதமான மற்றும் திறமையான புலனாய்வுக்கு வழிவகை காண்பது, வளர்ந்து வரும் பொருளாதார குற்றங்களின் போக்கு, கணினி சார்ந்த குற்றங்கள், பன்னாட்டு குற்றங்களைத் தடுப்பதற்காகக் குற்றப் புலனாய்வு முகமைகள் மேற்கொள்ளும் தடுப்பு நடைமுறைகள் குறித்த தகவல் பரிமாற்றம் உள்ளிட்ட தலைப்புகள் இந்த மூன்று நாள் மாநாட்டில் விவாதிக்கப்படும். இந்த மாநாடு ஊழலை எதிர்க்கும் பொருட்டு எடுக்கப்படும் பல்வேறு நடவடிக்கைகளை மேலும் செரிவூட்ட உதவும்.  இது இந்தியாவில் எளிதாக வர்த்தகம் செய்வதற்கு ஏதுவாக இருக்கும். தொடக்க விழாவில், மத்திய வட கிழக்கு மாகாணங்களுக்கான மேம்பாட்டுத்துறை (தனிப் பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் துறை, அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் துவக்க உரை ஆற்றுவார். ஊழல் தடுப்புப் பிரிவுகள், கண்காணிப்புப் பிரிவுகள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பொருளாதார குற்றப் பிரிவுகளின் தலைவர்கள், மத்திய தலைமை கண்காணிப்பு அதிகாரிகள், மத்திய புலனாய்வு பிரிவு உள்ளிட்ட மத்திய முகமைகளின் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்து கொள்வார்கள். மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்கள்,  காவல்துறை தலைவர்கள் ஆகியோர் நஜதுவக்க விழாவில் கலந்து கொள்வார்கள்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...