முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நீட் தேர்வில் அரசுபள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு முதல்வர் அஸ்திரம் ஒரே கல் மூன்று மாங்காய்

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க அரசு முடிவெடுத்தது. உண்மையில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குமாறு தான் உருவாக்கப்பட்ட கமிஷன் பரிந்துரைத்திருந்தது. ஆனால் தமிழக அரசு தான் இதை 7.5 சதவீதமாகக் குறைத்து விட்டது. இங்கேயே அரசுக்கு முதல் சறுக்கல் அதனால்தான் இந்த சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் பெற வேண்டிய நிலைமை ஏற்பட்டது.. ஏற்கனவே காலதாமதமாகி விட்ட நிலையில் மேலும் அவகாசம் கேட்டார்.. பொதுவாக, ஆளுநரை யாரும் உத்தரவிட்டு வலியுறுத்த முடியாது என்றாலும் கூட ஏன் இந்தத் தாமதம் என்று எல்லோரும் கேட்க ஆரம்பித்தும் விட்டனர்.மக்களுக்கு அதிருப்தி ஏற்படும் அளவுக்கு இந்த விவகாரம் பெரிதாகியது.. இதில் அரசியலும் பின்னிப் பிணைந்திருப்பது தான் பலரையும் அதிர வைக்க முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி இந்தச் சட்ட மசோதாவின் மூலமாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுத்து மக்களின் மனதில் இடம் பிடிக்க நினைத்தார். ஏற்கனவே பல்வேறு அறிவிப்புகள் மூலம் மாணவர்கள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் எடப்பாடியாருக்கு நல்ல பெயருள்ளது. அதில் இவ் உள் ஒதுக்கீடும் அமைய வேண்டும் என விரும்பினார். உள் ஒதுக்கீடு வந்தால் எடப்பாடியாருக்கு நல்ல பெயர் கிடைத்து விடுமே என்று உள்ளுக்குள் பதை பதைப்பு திமுக தரப்பில். ஒதுக்கீடு வர வேண்டும் என்று வெளியில் குரல் கொடுத்தாலும் கூட அப்படி வந்தால் அதன் முழுப் பெயரும் முதல்வருக்குத்தான் போகும் என அச்சமும் நிறையவே இருந்தது.. எனவேதான் முன்கூட்டியே ஆளுநர் மாளிகை முன்பு பெரும் கூட்டத்தைக் கூட்டி தனது பலத்தைக் காட்டிப் போராட்டமும் நடத்தி விட்டது. ஆளுநர் ஒப்புதல் அளித்தாலும் கூட, எங்களது போராட்டத்தால்தான் ஆளுநர் பணிந்து வந்தார் என பேசிக் கொள்ள இது உதவும் என அன்றைய தினமே கணிக்கப்பட்டது..ஆனால் இந்த கணிப்பு நேற்று முழுவதுமாக நிரூபணமாகிவிட்டது..முதல்வர் நேற்று ஆளுநரின் ஒப்புதலின்றி இது தொடர்பான அரசாணை வெளியிட்டார்.. மாணவர் நலன் கருதி அரசாணை வெளியிட்டதற்கான விளக்கமும் தந்தார். ஆனால் ஸ்டாலின் விடவில்லை.. "அரசாணையில், ஆளுநரின் ஆணைப்படி" என்று வெளியிட்டிருப்பது - வழக்கமான நிர்வாக நடைமுறையா அல்லது ஆளுநரிடம் அந்தக் கோப்பில் கையெழுத்து வாங்கப்பட்டுள்ளதா? எனக் கேட்டார்.. தங்கள் போராட்டத்தால்தான் அரசாணை வெளியிட்டதாகவும், அதற்கு நன்றி என்றார். இப்போது ஆளுநரே ஒப்புதல் அளித்து விட்டார்.. ஆக, ஒரே கல்லில் முதல்வர் தரப்பு மூன்று மாங்காய்களை அடித்துள்ளது.. ஒன்று, அதிமுகவுக்கு பெயர் மற்றொன்று, போராட்டம் நடத்தியும் திமுகவுக்கு பயன் இல்லை அடுத்ததாக, ஆளுநரின் ஒப்புதலே இல்லாமல் அரசாணை வெளியிட்டு, பாஜகவையும் திக்குமுக்காட வைத்த சரியான தைரியமான முதல்வர் என, ஜெயலலிதா 69 சத இட ஒதுக்கீட்டை நிலை நிறுத்தி, சமூகநீதி காத்த வீராங்கனை என்ற பெயரை பெற்றார்.. இப்போது அதே ரூட்டில் எடப்பாடி கே பழனிச்சாமியும் சேர்கிறார்.. என்னதான் நெருக்கடி கிளம்பி வந்தாலும், யாருக்கும் அடிபணிய மாட்டோம் என்பதைதான் அதிமுக அரசு செய்து காட்டி உள்ளது என்பதே மக்களின் பேச்சில்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

எட்டு லட்சம் மரங்களை நட்டவர், எண்ணற்ற மனிதர்களை வளர்க்கிறார்!

 --- *புண்ணியவாசலில் புண்ணியம் செய்யும் வாசல் - அன்பாலயம்!* *பப்ளிக் ஜஸ்டிஸ் ஆசிரியர் கவிஞர் சீ.க. புலித்தேவன் பாண்டியன் பிறந்தநாள் - பசுமை நாயகன் மரம் ராஜா பங்கேற்ற நெகிழ்ச்சி விழா!* *புதுக்கோட்டை, ஆவுடையார்கோவில் புண்ணியவாசல்:* தமிழ்நாட்டில் ஆயிரம் முதியோர் இல்லங்கள் உண்டு. ஆனால் புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோயில் அருகே புண்ணியவாசலில் இயங்கும் *"மரம் அறக்கட்டளையின் அன்பாலயம் - ஆதரவற்ற முதியோர் இல்லம் (Regd No: 26/2019)"* போல ஒரு இல்லத்தை எங்கும் காண முடியாது! * காரணம் என்ன தெரியுமா? * > இங்கே சுத்தம் உண்டு, சுகாதாரம் உண்டு, > அதையும் தாண்டி அன்பு உண்டு, கருணை உண்டு, > கண்ணீரைத் துடைக்கும் பாசம் உண்டு! *இதன் ஆணிவேர் யார் தெரியுமா?* நாம் பார்த்த புகைப்படங்களின் பின்னணியில் இருக்கும் உண்மையான ஹீரோ *திரு. S.R.M. ராஜா - அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் "மரம் ராஜா"* தான்! - புதுக்கோட்டை மண்ணில் மட்டும் *8 லட்சம் மரங்களை* நட்டு, தண்ணீர் ஊற்றி தன் பிள்ளைகள் போல வளர்த்த பசுமை நாயகன்! - அந்த பசுமை நாயகன் தான் *"மரம் அறக்கட்டளை"* நிறுவனர்! - மரம் வளர்த...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...