முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பாரதப் பிரதமர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை

பிரதமர் அலுவலகம் நாட்டு மக்களுக்கு பாரதப் பிரதமர் ஆற்றிய விசேஷ உரை கொரோனாவுக்கு எதிரான செயல்பாடுகளில் தீவிர முனைப்பை கைவிட்டுவிட வேண்டாம் என குடிமக்களுக்குப் பிரதமர் வேண்டுகோள் முடக்கநிலைகள் நீங்கியிருக்கலாம் - ஆனால் வைரஸ் போகவில்லை என்று கருத்து அலட்சியமாக இருப்பதற்கான காலம் இதுவல்ல என்று எச்சரிக்கை கொரோனாவுக்கு எதிரான செயல்பாடுகளில் தன்னலமற்ற சேவை செய்யும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் கொரோனா முன் கள போராளிகளுக்குப் பாராட்டு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சிகளில் முன்னேற்றம் உள்ளது – குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் தடுப்பூசி போடுவதற்கான திட்டத்தை அரசு உருவாக்கி வருகிறது குணம் அடைவோரின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது - மரணம் அடைவோர் விகிதம் குறைந்துள்ளது : பாரதப்பிரதமர் தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் திரு. நரேந்திர மோடி, கோவிட் நோய்த் தொற்றுக்கு எதிரான செயல்பாடுகளில் மக்கள் தங்கள் தீவிர முனைப்பை கைவிட்டுவிடக் கூடாது என்றும் அலட்சியமாக இருந்துவிடக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டார். முடக்கநிலை நீக்கப்பட்டு விட்டாலும், கொரோனா வைரஸ் அழிக்கப்பட்டு விட்டதாக அர்த்தம் கிடையாது என்று திரு. நரேந்திர மோடி குறிப்பிட்டார். நாடு முழுக்க கொரோனா சிகிச்சை நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பது குறித்து பாராட்டு தெரிவித்த அவர், பொருளாதார செயல்பாடுகள் இயல்பு நிலைக்குத் திரும்பி வருவதாகவும், தங்கள் கடமைகளை ஆற்ற மக்கள் வீடுகளில் இருந்து வெளியில் செல்லத் தொடங்கிவிட்டார்கள் என்றும் கூறினார். திருவிழாக்கள் வருவதால், சந்தைகளும் கூட இயல்புநிலைக்குத் திரும்பத் தொடங்கியுள்ளன என்று  அவர் குறிப்பிட்டார். கடந்த 7 - 8 மாதங்களில் ஒவ்வொரு இந்தியரும் மேற்கொண்ட முயற்சிகள் காரணமாக, இந்தியா இப்போது நல்ல நிலையில் உள்ளது என்று கூறிய அவர், இந்த சூழ்நிலை கெட்டுப் போக அனுமதித்துவிடக் கூடாது என்று கேட்டுக் கொண்டார். கொவிட் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குணம் பெறும் விகிதம் அதிகரித்துள்ளது, மரணம் அடைவோரின் விகிதம் குறைந்துள்ளது என்று பிரதமர் தெரிவித்தார். 10 லட்சம் பேரில் 5500 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதாக அவர் கூறினார். அமெரிக்கா, பிரேசில் போன்ற நாடுகளில் இந்த எண்ணிக்கை 25 ஆயிரமாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டார். இந்தியாவில் 10 லட்சம் குடிமக்களுக்கு 83 என்ற எண்ணிக்கையில் மரண விகிதம் உள்ளதாகவும், அமெரிக்கா, பிரேசில், ஸ்பெயின், பிரிட்டன் போன்ற வளர்ச்சி அடைந்த நாடுகளிலும், மற்ற நாடுகளிலும் இந்த எண்ணிக்கை சுமார் 600 என உள்ளதாகவும் தெரிவித்தார். வளர்ச்சி அடைந்த பல நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்தியாவில் ஏராளமான உயிர்கள் காப்பாற்றப்பட்டிருப்பதாக வெளியான ஒப்பீடுகளை அவர் பாராட்டினார். நாட்டில் கொவிட் பாதிப்புக்கு எதிரான சிகிச்சைக்குத் தேவையான கட்டமைப்புகள் உருவாக்கப் பட்டிருப்பதை பிரதமர் பட்டியலிட்டார். கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 90 லட்சத்துக்கும் மேற்பட்ட படுக்கை வசதிகள் உள்ளன என்றும், 12 ஆயிரம் தனிமைப்படுத்தல் சிகிச்சை மையங்கள் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். நாடு முழுக்க கொரோனா பரிசோதனை செய்த 2000-க்கும் மேற்பட்ட ஆய்வகங்கள் செயல்பட்டு வருவதாகவும், விரைவில் 10 கோடி பரிசோதனைகளைக் கடந்துவிடுவோம் என்றும் பிரதமர் கூறினார். வசதி படைத்த நாடுகளுடன் ஒப்பிடும்போது, அதிக எண்ணிக்கையிலான குடிமக்களின் உயிரை இந்தியா வெற்றிகரமாகக் காப்பாற்றி வருகிறது என்றும் அவர் தெரிவித்தார். பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், கொவிட் பெருந்தொற்று நோய்க்கு எதிரான செயல்பாட்டுக்கு பலம் அதிகரித்துள்ளது என்றும் குறிப்பிட்டார். ``சேவா பர்மோ தர்மா'' என்ற மந்திரத்தைப் பின்பற்றி தன்னலமற்ற சேவைகள் செய்து வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், மற்றும் அலுவலர்களின் பணிகளை பிரதமர் பாராட்டினார். இவ்வளவு முயற்சிகள் எடுத்துள்ள நிலையில், மக்கள் அலட்சியமாக இருந்துவிடக் கூடாது என்று அவர் எச்சரித்தார். கொரோனா வைரஸ் போய்விட்டது என்றோ, இனிமேலும் கொரோனாவால் அபாயம் நேராது என்றோ நினைத்துவிட வேண்டாம் என்றும் அவர் கூறினார். சமீப காலமாக மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கைவிட்டுவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், ``நீங்கள் அலட்சியமாக இருந்து, முகக்கவச உறை  இல்லாமல் வெளியில் சென்றால், நீங்களே உங்களை, உங்கள் குடும்பத்தை, குழந்தைகளை, முதியவர்களை நோய்த் தாக்குதலுக்கு ஆட்படுத்திக் கொள்கிறீர்கள் என்பதாக அர்த்தம்'' என்றார் அவர். அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கைகள் குறையத் தொடங்கி, பிறகு திடீரென அதிகரிக்கத் தொடங்கி இருப்பதை சுட்டிக்காட்டி பிரதமர் எச்சரிக்கை விடுத்தார். இந்த நோய்க்கு எதிரான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு, கொவிட் தடுப்பு நடவடிக்கைகள் குறையும் வரையில் மக்கள் அலட்சியமாக இருந்துவிடக் கூடாது என்று பிரதமர் வலியுறுத்தினார். மனிதகுலத்தைக் காப்பாற்றுவதற்குப் போர்க்கால அடிப்படையில் முயற்சிகள் எடுக்கப் படுகின்றன என்றும், தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் நமது விஞ்ஞானிகளும், பல நாடுகளைச் சேர்ந்தவர்களும் முயற்சி செய்து வருவதாகவும் தெரிவித்தார். கொரோனாவுக்கு எதிராக பல்வேறு தடுப்பு மருந்துகள் குறித்த ஆய்வுகள் நடந்து வருகின்றன, சில ஆய்வுகள் முன்னேறிய கட்டத்தில் உள்ளன என்று பிரதமர் கூறினார். தடுப்பு மருந்து கிடைத்தவுடன், குடிமக்கள் ஒவ்வொருவருக்ரும் அதை அளிப்பதற்கான, விரிவான திட்டங்களை அரசு உருவாக்கி வருகிறது என்றும் அவர் தெரிவித்தார். தடுப்பூசி போடும் வரையில் யாரும் அலட்சியமாக இருந்துவிடக் கூடாது என்று பிரதமர் வலியுறுத்தினார். நாம் சிரமமான காலக்கட்டத்தில் இருக்கிறோம், சிறிது கவனக்குறைவாக இருந்தாலும் பெரிய நெருக்கடி ஏற்பட்டு, நமது மகிழ்ச்சியைக் கெடுத்துவிடும் என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி கூறினார். தங்கள் கடமைகளைச் செய்யும்போது குடிமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். ஆறு அடி இடைவெளி பராமரித்தல், அவ்வப்போது சோப்பு போட்டு கைகளைக் கழுவுதல், முகக்கவச உறை அணிதல் ஆகிய செயல்பாடுகளை தொடர்ந்து செய்யுமாறு பிரதமர் வலியுறுத்தினார்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...