காவல் ஆய்வாளர் புகழேந்தி 13 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் வழக்கில் போக்சோவில் கைது


பணி செய்த பல இடங்களில் ஊழலும் முறைகேடும் செய்துவந்த காவல் ஆய்வாளர் புகழேந்தி என்னூரில் 13 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கில்  போக்சோ சட்டத்தின் கீழ்  கைது செய்யப்பட்டார்.

முன்பே இவரைப் பற்றிய செய்தியை வெளியிட்டு இருந்தால் இவனை காப்பாற்றும் முயற்சியாக மேலும்   பொய் வழக்குகள் எனப் பலர் மீது பதிவு     செய்து இருப்பார் இவரது கூட்டாளிக் குற்றவாளிகளுடன்  சேர்ந்து கைது செய்யப்பட்டுள்ள காவல் ஆய்வாளர் புகழேந்தியை பணியிடை நீக்கம் செய்து சென்னை காவல்துறை ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார். 

சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த சபீனா என்பவர்  சென்னை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில், தனது 13 வயது மகள் தொடர்பாக ஒரு புகார் அளித்தார். அவரது புகார் மனுவில், மதன்குமார், ஷாகிதா பானு, செல்வி, சந்தியா, மகேஷ்வரி (எ) மகா, வனிதா, விஜயா, கார்த்திக் ஆகியோர் சேர்ந்து எனது 13 வயதான மகளை  கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வருவதாகவும், அவர்கள்மீது நடவடிக்கை எடுத்து, தனது மகளை மீட்டுக் காப்பாற்ற வேண்டும் என தெரிவித்திருந்தார்.

இந்தப் புகாரின் பேரில் விசாரணை நடத்திய காவல்துறை ஆய்வாளர்  பிரியதர்ஷினி, விசாரணை நடத்தி பின் 8 பேரைக்  கைது செய்தார். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியதில், சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலுக்கு ஈடுபட வைத்ததும்,  இதில்,  மகேஷ்வரி (எ) மகா, வனிதா, விஜயா, கார்த்திக் ஆகிய 4 பேர் புரோக்கர்களாகச் செயல்பட்டு, வாடிக்கையாளர்களை அறிமுகம் செய்து வந்ததும் தெரிய வந்ததையடுத்து, புரோக்கர்களான    மதன்குமார், ஷாகிதா பானு, சந்தியா, மகேஷ்வரி, வனிதா, விஜயா ஆகியோர் கைது செய்யப்பட்டு, நடத்தப்பட்ட விசாரணையில் பல அதிர்ச்சியான திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.  இவர்களுக்கு உடந்தையாக முத்துப்பாண்டி, அன்சாரி பாஷா, அனிதா, மீனா, கார்த்திக், முஸ்தபா ஆகியோரும் புரோக்கர்களாகச் செயல்பட்டது தெரியவந்தது அவர்களையும் மொத்தமாகக் கைது செய்த காவல்துறை மேலும் விசாரணையை தீவிரப்படுத்தவே,  வடசென்னை வடக்கு மாவட்டத்தில் ஒரு கட்சியின் செயற்குழு உறுப்பினரும், தொழிலதிபருமான  ராஜேந்திரன் (வயது 44) என்பவர், தனது தொழில்முறை காரியத்திற்காக, பலமுறை இந்த 13 வயது சிறுமி மற்றும் பல இளம்பெண்களை போலீஸ் அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்துள்ள அடுத்த  அதிர்ச்சிச் தகவலும் வெளியானதையடுத்து,  தொழிலதிபர் ராஜேந்திரனை போலீசார் கைது செய்த காவல்துறை  அவரிடம்  நடத்திய விசாரணையில் எண்ணூர் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டராக உள்ள சி.புகழேந்தி என்பவருக்காக பலமுறை சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுத்தியதாகக் கூறினார். இதனால் இன்ஸ்பெக்டர் புகழேந்தியும் உடனே கைது செய்யப்பட்டார். அவர்களை காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.

இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதன் காரணமாக, இன்ஸ்பெக்டர் புகழேந்தியை தற்காலிக பணியிடைநீக்கம் செய்து காவல் ஆணையர் அகர்வால்  நடவடிக்கை எடுத்துள்ளார்.

இன்ஸ்பெக்டர் புகழேந்தி மீது ஏற்கெனவே பணிசெய்த இடங்களிலும் இங்கும் ஏராளமான புகார்கள் உள்ளதாகவும், புகார் கொடுக்க பெண்கள் வந்தால் அவர்களது தொலைபேசி  நம்பரை வாங்கிப் போன் செய்து தொல்லை கொடுப்பாராம். பெண்கள் விஷயத்தில் மோசமான நபர். குறிப்பாக, சிறுமிகளுக்கு அதிக அளவில் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாராம். சென்னை வண்ணாரப்பேட்டை மற்றும்  எண்ணூர் பகுதியில் பாலியல் கொடுமைக்கு ஆளான சிறுமி விவகாரத்தில் வழக்கின் தொடக்கத்திலேயே, குற்றவாளிகள் பட்டியலில் இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் பெயரும்; புகைப்படமும்; வெளியானதோடு சிறுமியை பாலியல் கொடுமைக்கு ஆளாக்கியவர்கள் 15 பேரின்  பெயர்களும்; படங்களும்  வெளியாகி இருக்கிறது.  'அரசியல் கட்சி பிரமுகர் ஒருவரும் கைது' என இன்னொரு பெயர் வந்தாலும், அவர் படம் மட்டும் இல்லை  இதே வழக்கில் உள்ளூர் நிருபர் ஒருவரும் கைதாகியிருக்கிறார். பொதுவாகவே இது போன்ற மிக முக்கிய வழக்குகளில் தொடர்புள்ளதாக கருதப்படும் நபர்களின் பெயர், ஊர்; புகைப்படங்கள் வெளியாவது;  வழக்கின் இறுதி (க்ளைமாக்ஸ்) யை நீர்த்துப் போக வைக்கும் என்பது; கடந்த காலங்களில் உள்ள  நீதிமன்றத் தீர்ப்புகளும் அதைத்தான் சுட்டிக் காட்டுகிறது. 'சிறார்' களை காக்க வேண்டிய இதுபோன்ற வழக்குகளில், 'அடையாள அணி வகுப்பு' போன்ற அம்சங்கள் இடம் பெறும்  என்பதை எப்படி மறந்து போனார்கள்?  எண்ணூர் பகுதியில் பாலியல் கொடுமைக்கு ஆளான சிறுமி விவகாரம்  நிருபர் ஒருவரும் கைதாகி இருக்கிறார். 30.11.2020 ல்  பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவின் துணை கமிஷனர் ஜெயலட்சுமி, வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல்  ஆய்வாளர்  பிரியதர்ஷிணி மற்றும் காவல்துறையினர்  பாதிக்கப்பட்ட சிறுமியிடம் விசாரித்தனர். அவர் அளித்த தகவலின்படி சிறுமியின் சகோதரி உறவினர்கள் தண்டையார்பேட்டையைச் சேர்ந்த மதன்குமார், அவரின் மனைவி பானு, மதன்குமாரின் அம்மா செல்வி, மதன்குமாரின் தங்கை சந்தியா, திருவொற்றியூரைச் சேர்ந்த மகேஷ்வரி (வயது29), வனிதா (வயது35), பூந்தமல்லியைச் சேர்ந்த விஜயா (வயது45), புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த கார்த்திக்கேயன் (வயது25), ஆகிய 8 பேரை 11.11.2020-ல் காவல்துறை  கைது செய்தனர். அவர்களை  காவலில் எடுத்து விசாரித்த போது பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த அரசியல்  பிரமுகர் ராசேந்திரன் (வயது 46) என்பவர் கைது செய்யப்பட்டார்.ராசேந்திரன் அளித்த தகவலின்படி காவல்துறை  இன்ஸ்பெக்டர் புகழேந்தி (வயது 45) கைதானார். சிறுமி பாலியல் வழக்கில் எண்ணூர் காவல் நிலைய சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் புகழேந்தி கைதானதால் காவல்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியதையடுத்து ராயபுரத்தைச் சேர்ந்த காதேஸ்வரராவ் (வயது 33) கைதானார். தொடர்ந்து நடந்த விசாரணையில் சிறுமியை பாலியல் தொழில் மற்றும் பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் மண்ணடியைச் சேர்ந்த பசுலுதீன் (வயது 32), ராயப்பேட்டையைச் சேர்ந்த முகமது அசாருதீன் (வயது 35) ஆகியோர் 24 ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.கோவளத்தைச் சேர்ந்த பெயர் வெளியிடாத  பெண்ணின் மகளுக்கு வயது 15. வடசென்னையிலுள்ள உறவினர் வீட்டில் சில மாதங்களுக்கு முன் அந்தச் சிறுமி தங்கியிருந்தார். சிறுமியின் உறவினர்கள் பாலியல் தொழில் புரோக்கர்களாக இருந்ததனர். அதனால் சிறுமியைக் கட்டாயப்படுத்தி ஒரு வார விற்பனை  பேக்கேஜ் என்ற முறையில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியிருக்கின்றனர். இந்தத் தகவல் தெரிந்ததும் சிறுமியின் அம்மா, வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.தனியார் தொலைக்காட்சி நிருபர் வினோபா ஜி இந்த வழக்கில் சிக்கியது எப்படி என பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறை  உயரதிகாரி ஒருவரிடம் விசாரிக்க  ``சிறுமியின் உறவினரான பெண் ஒருவருக்கும் நிருபருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக பழக்கம் இருந்து வந்திருக்கிறது. இந்தச் சமயத்தில்தான் சிறுமி குறித்த தகவல் நிருபருக்கு கிடைத்திருக்கிறது. அதன்பிறகே சிறுமியை நிருபர் சந்தித்திருக்கிறார். பாதிக்கப்பட்ட சிறுமியும், நிருபர் வினோபா ஜியை அடையாளம் காட்டியதை யடுத்து அவரைக் கைது செய்திருக்கிறோம். நிருபர் வினோபா ஜியும் சிறுமியின் உறவுக்கார பெண்ணும் செல்போனில் பேசியதற்கான ஆதாரங்களும் கிடைத்திருக்கிறது.சிறுமி வழக்கில் தோண்ட தோண்டப்  பல தகவல்கள் வெளியானதால் துணை கமிஷனர் ஜெயலட்சுமி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் டீம் விசாரணையை தீவிரப்படுத்திய நிலையில் வடசென்னையில் தனியார் தொலைகாட்சி ஒன்றின் நிருபராக வேலைப்பார்த்த வினோபா ஜி (வயது 39) என்பவரையும் போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் அரசியல்  பிரமுகர், போலீஸ் இன்ஸ்பெக்டர், சிறுமியின் உறவினர்கள், பத்திரிகையாளர் ஒருவரும் கைதான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிக்குத் தேவையான கவுன்சலிங் மற்றும் மருத்துவ உதவிகளைச் செய்து கொடுத்திருக்கிறோம். இந்த வழக்கில் சிறுமி மற்றும் அவரின் அம்மா ஆகியோருக்கு கொலை மிரட்டல்கள் வரத் தொடங்கியுள்ளதால் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளித்திருக்கிறோம். சிறுமி கூறிய தகவல்களின் படி கடந்த 2 மாதங்களில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் குறித்த பட்டியலைச் சேகரித்தன் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்துள்ளோம். தொடர்ந்து விசாரணை நடந்துவருகிறது" என்றார்.சிறுமியின் பாலியல் வழக்கு சென்னை அயனாவரம் சிறுமி வழக்கைவிட விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியிருக்கிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா