கோவிட்19 குறித்த 700 இந்திய விஞ்ஞானிகளின் தன்னார்வத் தகவல் தளம்

கோவிட்19 குறித்த 700 இந்திய விஞ்ஞானிகளின் தன்னார்வத் தகவல் தளம்
“பொதுமக்களுக்கு நம்பகத்தன்மையான மற்றும் சரியான தகவல்களை கொண்டு சேர்க்கும் வகையில் உலகெங்கிலும் உள்ள 700 இந்திய விஞ்ஞானிகள் தாங்களாகவே முன்வந்து கொவிட்-19-க்கு இந்திய விஞ்ஞானிகளின் பதில் (ஐஎஸ்ஆர்சி) என்ற தளத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.www.indscicov.in என்ற இணையதளம் வாயிலாக பொதுமக்கள் பல்வேறு மாநில மொழிகளில் தகவல்களை அறிந்து கொள்ளலாம்” என்று விஞ்ஞான் பிரசார் அமைப்பின் அறிவியல் தொடர்பாளரும், விஞ்ஞானியுமான டாக்டர் டி வி வெங்கடேஸ்வரன் கூறியுள்ளார். மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம், ‘பெருந்தொற்று காலத்தில் சமூக ஊடகங்களின் வாயிலாக அறிவியல் விழிப்புணர்வு பிரச்சாரம்' என்ற தலைப்பில் இன்று ஏற்பாடு செய்திருந்த இணையக் கருத்தரங்கில் முக்கிய விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.

உண்மையான மற்றும் அறிவியல் சார்ந்த செய்திகளும், மனநலப் பாதுகாப்பு நோய் தொற்று தொடர்பான சமூகப் பிரச்சினைகள், அறிவியல் ஆராய்ச்சிகள் மற்றும் மருத்துவத் தகவல்கள் இதில் இடம் பெற்றுள்ளதாக அவர் மேலும் கூறினார். இதே போல் டாடா அடிப்படை ஆராய்ச்சி மையமும், இந்திய அறிவியல் கழகமும் இணைந்து செயல்படுத்தும் கொவிட்கியான் என்ற இணையதளமும் நோய்தொற்று குறித்த பல்வேறு ஆராய்ச்சித் தகவல்களை வழங்குவதாக டாக்டர் வெங்கடேஸ்வரன் தெரிவித்தார்.

இரட்டை முனைகள் கொண்ட வாளான சமூக ஊடகத்தில் உண்மையான செய்திகளுடன் போலியான செய்திகளும் அதிக அளவில் பரவுகின்றன. பெருந்தொற்றுக் காலத்தில் இதனைக் கருத்தில் கொண்டு பத்திரிகை தகவல் அலுவலகம் (பிஐபி), இந்திய அறிவியல் தொலைக்காட்சி,கொவிட்-19 பற்றிய இந்திய விஞ்ஞானிகளின்பார்வை (ஐஎஸ்ஆர்சி), கொவிட்கியான் போன்ற அரசு மற்றும் தனியார் அமைப்புகள் மக்களிடையே சரியான தகவல்களை கொண்டு சேர்ப்பதில் முக்கிய பங்கு வகிப்பதாகவும் அவர் கூறினார்.

கொரோனா நோய்த் தொற்றின் துவக்கக் காலகட்டத்தில் இந்தத் தொற்று குறித்து பொது மக்களிடையே நிலவி வந்த அச்சத்திற்கும், தவறான கருத்துக்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், நாடு முழுவதும் பல்வேறு மாநில மொழிகளில் நோய்த் தொற்றின் அறிகுறிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தடுப்பு மருந்தின் தயாரிப்பு முயற்சி, ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சிகளின் முடிவுகள் போன்ற விஷயங்கள் தொடர்பாக ஏராளமான கருத்தரங்குகள் நடைபெற்றதாக அவர் கூறினார்.

 

இந்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறையின் கீழ் இயங்கும் இந்திய அறிவியல் தொலைக்காட்சி எனும் அறிவியல் சார்ந்த ஓடிடி தளத்தில் கொவிட்-19 நோய் தொற்று குறித்த ஆவணப்படங்களும், வழக்கமான அறிக்கைகளும் இடம்பெறுவதாக அவர் தெரிவித்தார். செல்போன் போன்ற நவீன சாதனங்களின் மூலம் இந்திய அறிவியல் என்னும் செயலியை தரவிறக்கம் செய்து கொண்டு  பொதுமக்கள் தங்களது ஓய்வு நேரங்களில் இந்த ஆவணப்படங்களைக் காணலாம் என்றார் அவர்.

 

பொதுமக்கள் பொய்யான தகவல்களுக்கு இரையாவதைத் தடுக்கும் வகையில் பத்திரிககை தகவல் அலுவலகத்தின் (பிஐபி) உண்மை சரிபார்ப்பு (Fact check) முயற்சியை டாக்டர் டி வி வெங்கடேஸ்வரன் வெகுவாகப் பாராட்டினார். “பெருந்தொற்றுக் காலத்தில் சமூக ஊடகங்கள், குறிப்பாக வாட்ஸ்அப் போன்ற வளர்ந்து வரும் ஊடகங்கள் பெருவாரியான மக்களைச் சென்றடையும் நிலையில் பிஐபி உண்மை சரிபார்ப்பு முயற்சி, சரியான தகவல்கள் அவர்களுக்குக் கிடைப்பதில் பெரும் உதவியாக உள்ளது” என்று அவர் தெரிவித்தார்.

“பொதுமக்களுக்கு நம்பகத்தன்மையான மற்றும் சரியான தகவல்களை கொண்டு சேர்க்கும் வகையில் உலகெங்கிலும் உள்ள 700 இந்திய விஞ்ஞானிகள் தாங்களாகவே முன்வந்து கொவிட்-19-க்கு இந்திய விஞ்ஞானிகளின் பதில் (ஐஎஸ்ஆர்சி) என்ற தளத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.www.indscicov.in என்ற இணையதளம் வாயிலாக பொதுமக்கள் பல்வேறு மாநில மொழிகளில் தகவல்களை அறிந்து கொள்ளலாம்”, என்று அவர் குறிப்பிட்டார். உண்மையான மற்றும் அறிவியல் சார்ந்த செய்திகளும், மனநலப் பாதுகாப்பு நோய் தொற்று தொடர்பான சமூகப் பிரச்சினைகள், அறிவியல் ஆராய்ச்சிகள் மற்றும் மருத்துவத் தகவல்கள் இதில் இடம் பெற்றுள்ளதாக அவர் மேலும் கூறினார். இதே போல் டாடா அடிப்படை ஆராய்ச்சி மையமும், இந்திய அறிவியல் கழகமும் இணைந்து செயல்படுத்தும் கொவிட்கியான் என்ற இணையதளமும் நோய்தொற்று குறித்த பல்வேறு ஆராய்ச்சித் தகவல்களை வழங்குவதாக டாக்டர் வெங்கடேஸ்வரன் தெரிவித்தார்.

 

பெருந்தொற்று குறித்து அறிவிப்பதற்கு முன்பாகவே கடந்த பிப்ரவரி மாதத்தில் அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி மன்றத்தின் கீழ் இயங்கும் ஹைதராபாத்தில் உள்ள இந்திய இரசாயன தொழில்நுட்பக் கழகத்தை முன்னிறுத்தி இந்திய நிறுவனங்கள் ஏற்கனவே உள்ள மருந்துகளை அடிப்படையாகக் கொண்டு புதிய மருந்துகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக அவர் தெரிவித்தார். செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி இந்த நிறுவனங்கள் 25 மருந்துகளை பரிசோதித்ததாக அவர் மேலும் கூறினார்.

 

கொவிட்-19 நோய்க்கு எதிரான தடுப்பு மருந்துகளைக் கண்டறியும் முயற்சி குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், உலக அளவில் 150 தடுப்பு மருந்துகள் வெவ்வேறு கட்ட சோதனையில் இருப்பதாகவும் பொதுமக்களுக்கு அவற்றை செலுத்தும் முன் தடுப்பு மருந்தின் கொள்முதல் திறனை மேம்படுத்த வேண்டும் என்றும் கூறினார். பொதுவாக ஒரு தடுப்பு மருந்தை உருவாக்க 5 முதல் 8 ஆண்டுகள் வரை தேவைப்படும் என்று கூறிய அவர், நோயின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு மூன்றாவது கட்ட சோதனைக்குப் பின்னர் நடைபெறும் அவசரகால பயன்பாட்டை நான்காம் கட்ட சோதனையாக மேற்கொள்ளும் சாத்தியக் கூறுகள் இருப்பதாகத் தெரிவித்தார்.

முன்னதாக இந்தக் கருத்தரங்கில் அறிமுக உரை நிகழ்த்திய சென்னை பத்திரிகை தகவல் அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குநர் திரு மா அண்ணாதுரை, இந்திய அளவிலும், உலக அளவிலும் அறிவியலின் முக்கியத்துவத்தைக் கருத்தில்கொண்டு ‘இந்திய மற்றும் சர்வதேச நலனுக்கு அறிவியல்' என்பது 2020 சர்வதேச அறிவியல் திருவிழாவின் கருப்பொருளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாகக் கூறினார்.

கருத்தரங்கின் நிறைவில், சென்னை பத்திரிகை தகவல் அலுவலகத்தின் இயக்குநர் திரு குருபாபு பலராமன் நன்றியுரை வழங்கினார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா