இரயில்வே வாரியத் தலைவர் வி.கே.யாதவுக்கு ‘2020-ஆம் ஆண்டின் சிறந்த பொறியாளர் விருது’

இரயில்வே அமைச்சகம் இரயில்வே வாரியத் தலைவர்  வி.கே.யாதவுக்கு ‘2020-ஆம் ஆண்டின் சிறந்த பொறியாளர் விருது’

ரயில்வே வாரியத் தலைவர் வி.கே.யாதவுக்கு  ‘2020-ஆம் ஆண்டின் சிறந்த பொறியாளர் விருது’ வழங்கப்பட்டுள்ளது. இந்திய ரயில்வே துறையில் நவீனமயமாக்கம் மற்றும் சீர்திருத்தங்கள் ஆகியவற்றில் மிகச் சிறந்த பங்களிப்பை அளித்ததற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.  இந்த விருதை பொறியியல் மற்றும் தொழில்நுட்ப மையம் (ஐஇடி) வழங்கியுள்ளது.

பாரத ரத்னா சர். எம். விஸ்வேஸ்வரையாவின் பிறந்த தினத்தை நினைவு கூரும் வகையில் பொறியாளர்கள் தினத்தை ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15ஆம் தேதி தில்லியில் உள்ள ஐஇடி கொண்டாடுகிறது. இந்த நிகழ்ச்சியில், பொறியியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் சிறந்த பங்களிப்பை ஆற்றியவர்களுக்கு சிறந்த பொறியாளர் விருதும் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான சிறந்த பொறியாளர் விருது ரயில்வே வாரியத் தலைவர்வி.கே.யாதவுக்கு  வழங்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா