2021 ஜனவரி 1 முதல் ஃபாஸ்டேக் கட்டாயம்: அமைச்சர் நிதின் கட்கரி

சாலைப் போக்குவரத்து


மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் 2021 ஜனவரி 1 முதல் ஃபாஸ்டேக் கட்டாயம்: அமைச்சர் நிதின் கட்கரி

நாட்டில் உள்ள அனைத்து வாகனங்களுக்கும் 2021


ஜனவரி 1 முதல் ஃபாஸ்டேக் கட்டாயம் என்று மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி இன்று கூறினார்.

காணொலி மூலம் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், பணம் செலுத்துவதற்காக சுங்கச்சாவடிகளில் நிற்க வேண்டியதில்லை என்ற காரணத்திற்காகவும், நேரம் மற்றும் எரிபொருள் சேமிப்புக்கு உதவுவதன் மூலமும் சாலைப் பணியாளர்களுக்கு இது பலனளிக்கும் என்றார்.

2017-ஆம் ஆண்டு டிசம்பர் 1-ஆம் தேதிக்கு முன்பு விற்பனை செய்யப்பட்ட வாகனங்களுக்கு 2021ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் ஃபாஸ்டேக் கட்டாயம் என மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் நவம்பரில் அறிவிப்பு வெளியிட்டது.

மத்திய மோட்டார் வாகன விதிகளில் இதற்காக திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மத்திய மத்திய மோட்டார் வாகன விதிகள் 1989-இன் படி 2017-ஆம் ஆண்டு டிசம்பர் 1-ஆம் தேதி முதல், வாகன உற்பத்தியாளர்கள் அல்லது முகவர்களால் விநியோகிக்கப்பட்ட பதிவு செய்யப்படும் அனைத்து புதிய நான்கு சக்கர வாகனங்களுக்கும் ஃபாஸ்டேக் கட்டாயம் என அறிவிக்கப்பட்டது.

இதில் மேலும், போக்குவரத்து வாகனங்கள் ஃபாஸ்டேக் பொருத்தப்பட்ட பின்னரே பிட்னஸ் சான்றிதழைப் புதுப்பிக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் தேசிய அனுமதி வாகனங்கள் ஃபாஸ்டேக் பொருத்துவது 2019-ஆம் ஆண்டு அக்டோபர் 1-ஆம் தேதி முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.தேசிய நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் வாகனங்களிடம் சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதற்காக மின்னணு முறையில் கட்டணம் வசூலிக்கும் பாஸ்டேக் முறை கடந்த 2019 டிசம்பரில் அறிமுகப்படுத்தப்பட்டது.

பாஸ்டேக்' மின்னணு முறையில் அட்டைகளை, வங்கிகள், தொலை தொடர்பு நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. இதை வாங்கி, வாகனத்தின் முகப்பு கண்ணாடியில் ஒட்டினால் போதும்; சுங்கச் சாவடியை, அந்த வாகனம் கடக்கும் போது, அங்குள்ள கையடக்க கருவி வாயிலாக, சுங்கக் கட்டணம் தானாகவே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.அந்த வாகன உரிமையாளரின், வங்கி கணக்கில் இருந்து பணம் கழித்துக் கொள்ளப்படும். தமிழகத்தில் 80 சதவீத வாகனங்கள், 'பாஸ்டேக்' இல்லாமல், ரொக்க கட்டணம் செலுத்தி பயணிக்கின்றன. முன்னதாக பாஸ்டேக் கட்டணம் முறை குறித்து தமிழகத்தில் உள்ள, 48 சுங்கச் சாவடிகளிலும் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா