தமிழகத்தில் 2.06 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய்.2500 பொங்கல் பரிசுப் பை முதல்வர் அறிவிப்பு.

தமிழகத்தில் 2.06 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய்.2500 பொங்கல் பரிசு முதல்வர்  அறிவிப்பு.

முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி  இன்று தனது  தொகுதியான எடப்பாடியிலிருந்து தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார்.  அம்மா மினி கிளினிக்குகளைத் திறந்து வைத்த பின்  பல இடங்களுக்கு வேனில் சென்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பாளி எனுமிடத்தில் பேசிய முதல்வர்  இதுவரை பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கப்பட்ட நிலையில், 2021 ஆம் ஆண்டு 2 கோடியே 6 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூபாய்.2500  வழங்கப்படும் எனத் தெரிவித்தார். ஜனவரி நான்காம் தேதி முதல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி தொடங்கும் என்று அறிவித்தார். அந்த தொகுப்பில் பச்சரிசி, சர்க்கரை(சீனி) 1 கிலோ, உலர் திராட்சை, முந்திரி, ஏலக்காயுடன்  துணிப்பை, முழுக் கரும்பு வழங்கப்படுமென முதல்வர் அறிவிப்பை பொதுமக்கள் ஆரவாரம் செய்து வரவேற்றனர்.கொரோனாவால் மக்கள் கஷ்டப்படும்போது முதல்வர் பழனிசாமி நிவாரணம் வழங்கவில்லை. தேர்தல் நெருங்கும் நேரத்தில் தனது சுயநலத்துக்காக பொங்கல் பரிசு அறிவித்துள்ளாரா? என்று எதிர்கட்சித் தலைவர்  மு.க.ஸ்டாலின் வினா பின்னர் இதை நான் வரவேற்கிறேன் என கூறி, கொரோனா மற்றும் மழையால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை, எளிய மக்களுக்கு ரூ.5,000 கொடுக்க வேண்டும் என்றார்.டிசம்பர் 5ஆம் தேதி உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் காமராஜ் வெளியிட்ட அறிக்கையில், “பொது விநியோகத் திட்டத்தில் 5,80,298 குடும்ப அட்டைகள் சர்க்கரை குடும்ப அட்டைகளாக உள்ளன. இவற்றைச் அரிசி குடும்ப அட்டைகளாக மாற்ற 20.12.2020 வரை www.tnpds.gov.in என்ற இணைய முகவரியிலும், சம்மந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் மற்றும் உதவி ஆணையர்களிடமும் சமர்ப்பிக்கலாம். அவ்வாறு பெறப்படும் விண்ணப்பங்கள், உடனடியாக பரிசீலனை செய்யப்பட்டு, சர்க்கரை குடும்ப அட்டைகள், தகுதியின் அடிப்படையில் அரிசி குடும்ப அட்டைகளாக மாறுதல் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்திருந்ததும் நினைவு கூறத்தக்கது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா