24 மணி நேரமும் RTGS வசதி செயல்படும் - ரிசர்வ் வங்கி அறிவிப்பு


இன்று நள்ளிரவு 12.30 மணி முதல் RTGS சேவையை பயன்படுத்தி 24 மணி நேரமும் பணம் அனுப்பும் வசதி  தொடக்கம்   - இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த் தாஸ் அறிவிப்பு. திங்கட்கிழமை முதல் அனைத்து நாட்களிலும் 24 மணி நேரமும் RTGS வசதி செயல்படும் - ரிசர்வ் வங்கி அறிவிப்பு ஜனவரி முதல் காசோலைகளுக்கு Positive Pay பாதுகாப்பு முறை அமல்  ஜனவரி முதல் காசோலைகளுக்கு Positive Pay பாதுகாப்பு முறை அமல்

காசோலை மோசடிகளை தடுக்கும் விதத்தில், வரும் ஒன்றாம் தேதி முதல் Positive Pay என்ற புதிய பாதுகாப்பு நடைமுறை அமல்படுத்தப்பட உள்ளது.

இதன்படி, காசோலையை வழங்குபவர்கள், அதன் எண், தொகை, நாள், காசோலையை பெறும் நபர், காசோலையின் முன்-பின் பக்க படம் ஆகியவற்றை தாம் கணக்கு வைத்துள்ள வங்கிக்கு அனுப்ப வேண்டும்.

50 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமான தொகைக்காக வழங்கப்படும் காசோலைகளில் இந்த விவரங்களை சரிபார்த்த பிறகே, வங்கிகள் அந்த தொகையை வழங்கும்.

ஏற்கனவே காசோலை மோசடிகளை தடுக்க 2010 ல் CTS பாதுகாப்பு அம்சங்கள் கொண்டுவரப்பட்டாலும், கூடுதல் பாதுகாப்பிற்காக  இப்போது Positive Pay  என்ற நடைமுறை வருகிறது. மின்னணு முறையில் பெருந்தொகைப் பணப் பரிமாற்றம் செய்வதற்கான RTGS வசதி திங்கட்கிழமை முதல் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் செயல்பட உள்ளது.

வங்கிக் கணக்குகளில் இருந்து மற்றொரு கணக்குக்குப் பெருந்தொகையை மின்னணு முறையில் உடனடியாகப் பரிமாற்றம் செய்வதற்கு RTGS என்னும் வசதி உள்ளது.

இப்போது இந்த வசதி வங்கி வேலை நாட்களில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே பயன்பாட்டில் உள்ளது.

மின்னணுப் பணப் பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் இந்த வசதியை அனைத்து நாட்களிலும் 24 மணி நேரமும் அளிப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. அதன்படி திங்கட்கிழமை முதல் 24 மணி நேரமும் ஆண்டு முழுவதும் RTGS வசதி செயல்படும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா