ஜனவரி மாதம் 27 ஆம் தேதியன்று இரவு 9.30 மணிக்கு விடுதலையாகிறார் வி.கே.சசிகலா நடராஜன்

 கர்நாடக சிறையிலிருந்து 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27 ஆம் தேதியன்றுஇரவு 9.30 மணிக்கு விடுதலையாகிறார் வி.கே.சசிகலா நடராஜன்  விடுதலை செய்யப்படும் நாளில் கர்நாடக உள்துறை மேற்கொள்ளவிருக்கும் நடவடிக்கைகள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன,தமிழகத்தின் முன்னால் முதல்வர் ஜெ.ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்ற அவரது  தோழி சசிகலா நடராஜன் 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27ஆம் தேதியன்று இரவு 9.30 மணிக்கு  விடுதலையாவார் என்றும், அபராதத் தொகையை செலுத்தவில்லை என்றால் சிறை தண்டனை நீட்டிக்கப்படும் என்பதால்  அபராதத் தொகையான ரூபாய்.10 கோடியே 10 லட்சத்தை முறைப்படி  நீதிமன்றத்தில் செலுத்தியுள்ளதால், விடுதலை உறுதியாகியுள்ள நிலையில்,  சசிகலா நடராஜன்  விடுதலை செய்யப்படவுள்ள நாளில் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கர்நாடக உள்துறைக்கு உளவுத்துறை அளித்துள்ள அறிக்கை தொடர்பான தகவல் வெளியாகியது. விடுதலை செய்யப்படவுள்ள நாளில் அவரை அழைத்துச் செல்ல ஏராளமான தொண்டர்கள் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்தில் கூட வாய்ப்பிருப்பதைக் கருத்தில் கொண்டு சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படாத வண்ணம் சசிகலாவின் தொண்டர்கள், அவர்களது வாகனங்களை சிறை வளாகம் அமைந்துள்ள பகுதிக்கு வர முடியாத வகையில் எல்லையிலேயே தடுத்து நிறுத்த முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா