முன்னாள் பாரதப் பிரதமர் ஏ.பி.வாஜ்பாயின் 96 வது பிறந்தநாளில் பிரதமர்முன்னாள் பாரதப் பிரதமர் ஏ.பி.வாஜ்பாயின் 96 வது  பிறந்தநாளையொட்டி பிரதமர்மோடி ட்விட்டரில் அவருக்குப் புகழாரம் சூட்டியுள்ளார்

டெல்லியில்  வாஜ்பாய் நினைவிடத்துக்கு நேற்று  காலை சென்ற பிரதமர் மோடி மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார். குடியரசுத் த லைவர் ராம்நாத் கோவிந்த், மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாாரமன் ஆகியோரும் மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர். வாஜ்பாயின் வாழ்க்கை, பொதுவாழ்க்கையில் அவரின் பணிகள், நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய சிறப்பான உரைகள்,புகைப்படங்கள், ஆகியவை அடங்கிய நூலை பிரதமர் மோடி வெளியிட்டார்

மக்களவைச் செயலாளர் சார்பில் இந்த நூல் வெளியிடப்பட்டது. நாடாளுமன்றமைய மண்டபத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம்12 ஆம் தேதி வாஜ்பாய் உருவப்படம் வைக்கப்பட்டதற்கு  மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினர். வாஜ்பாயின் பிறந்தநாளை சிறந்த நிர்வாக நாளாக மத்தியஅரசு கடைபிடிக்கிறது.ஆர்வ சமாஜின் இளைஞர் பிரிவான ஆர்யா குமாரின் ஆர்யா குமார் சபாவுடன் 1944ல் பொதுச் செயலாளராகப் பணியாற்றினார். 1939ல் ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கம் (ஆர்.எஸ்.எஸ்) ஒரு ஸ்வேயெம்சேவாவில் இணைந்தார். பாபா சாஹேப் ஆப்டி அவர்கள் மீதான ஈடுபாடு காரணமாக 1940-44ல் ஆர்.எஸ்.எஸ் அதிகாரிகளின் பயிற்சி முகாமுக்குச் சென்று 1947 ஆம் ஆண்டில் ஒரு முழுநேர ஊழியர் ஆனார். பிரிவினை கலவரம் காரணமாக சட்ட படிப்பினை அவரால் தொடர இயலவில்லை. உத்தரபிரதேசத்திற்கு ஒரு விஸ்டாராக (probationary pracharak) அனுப்பப்பட்டார். விரைவில் டீன்யல் உபாடியாயா, ராஷ்டிரதர்மம் (இந்தி மாதத்தில்), பஞ்சஜானியா (ஒரு இந்தி வார இதழ்) மற்றும் நாவல்கள் ஸ்வாதேஷ் மற்றும் வீர் அர்ஜூன் ஆகியோரின் பத்திரிகைகளில் பணிபுரியத் தொடங்கினார். இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை, இவருடைய முழு வாழ்வும் இந்த இந்திய தேசத்திற்கு அர்ப்பணித்தார்.அடல் பிகாரி வாச்பாய் (டிசம்பர் 25, 1924- ஆகஸ்ட் 16, 2018) 1996ம் ஆண்டு சில காலமும், 1998ல் இருந்து 2004 வரையிலும் இந்தியாவின் பிரதமராக பதவி வகித்தவர். இவர் பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். மத்தியப் பிரதேச மாநிலத்தின் குவாலியரில் பிறந்த இவர் திருமணம் செய்து கொள்ளாதவர். 50 வருட பாராளுமன்ற உறுப்பினரான இவர் மக்களவைக்கு 9 முறையும் மாநிலங்களவைக்கு 2 முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 4 முறை வெவ்வேறு மாநிலங்களில்  இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே உறுப்பினர் ஆவார். மொரார்ஜி தேசாய் அமைச்சரவையில், வெளியுறவுத் துறை அமைச்சராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா