குலுக்கல் முறை மூலமாக சிவகங்கை மாவட்ட ஊராட்சித் தலைவர் தேர்வுசெய்யப்பட்டார்

சிவகங்கை மாவட்ட ஊராட்சி தலைவர் தேர்தல் நான்கு முறை ஒத்திவைக்கப்பட்டு தற்போது நடந்தது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நடந்த தேர்தல் இறுதியில் குலுக்கல் முறை மூலமாக மாவட்ட ஊராட்சித் தலைவர் தேர்வுசெய்யப்பட்டார்


. சிவகங்கை  மாவட்டத்தில் மொத்தம் உள்ள  16 மாவட்ட ஊராட்சி வார்டுகளில் அதிமுக கூட்டணி 8  வார்டுகளிலும் திமுக கூட்டனி 8 வார்டுகளிலும் வெற்றி பெற்றன. இரு தரப்பும் சமநிலையில் இருந்ததால் குலுக்கல் முறையில் நடைபெற்ற இந்தத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட பொன்மணி பாஸ்கர் வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து திமுக சார்பில் செந்தில் என்பவர் போட்டியிட்டார். தொடர்ந்து இன்று பிற்பகல் 3 மணிக்கு ஊராட்சிக்குழு துணைத் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா