நடிகர் ரஜினிகாந்த்தின் மக்கள் சேவை கட்சிக்கு ஆட்டோ சின்னம்


நடிகர் ரஜினிகாந்த் தேர்தல் ஆணையத்தில் "மக்கள் சேவை கட்சி" என்ற கட்சி பதிவு.ரஜினி பெயரில் பதிவு செய்த கட்சிக்கு தேர்தலில் போட்டியிட "ஆட்டோ ரிக்‌ஷா" சின்னத்தை ஒதுக்கியது தேர்தல் ஆணையம்.ரஜினி மக்கள் மன்றம் சார்பில்  அறிவிப்பு வெளியானதில்'இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையை மேற்கோள் காட்டி, அதில் இடம் பெற்றிருந்த ஒரு கட்சியின் பெயரும், சின்னமும் ரஜினி மக்கள் மன்றத்தினுடையது என சில ஊடகங்களில்  செய்தி வெளியான நிலையில் அதன்  தலைமையிலிருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்படும் வரை ரஜினி மக்கள் மன்றக் காவலர்கள் காத்திருக்கும் படி கேட்டுக்கொள்கிறோமென குறிப்பிடப்பட்டுள்ளது தொடர்பாக ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் சிலர் தெரிவித்த. தகவலில் தேர்தல் ஆணையம் கட்சிகளின் பட்டியலை பிப்ரவரி மாதத்தில்  வெளியிடுவார்கள். அதற்கு முன்பாக ரஜினிகாந்த்  கட்சியின் பெயரை அறிவிப்பார் என்பதால் பிரச்னையுருக்காதென நினைத்தார்கள். தேர்தல் ஆணையம்  பட்டியலை டிசம்பர் மாதமே வெளியிட்டதால், தற்போது பெயர் வெளியாகி விட்டது. கட்சியின் பெயரை தலைவரான ரஜினிகாந்த் தான் அறிவிப்பார் என்பதால், தற்போது தலைமை அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்படும் வரை நம் ரஜினி மக்கள் மன்றக் காவலர்கள் காத்திருக்கும்படி’ அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள்” என்றார்.ரஜினி காந்த் நடித்த பாட்ஷா படத்தின் பாடலுடன் சுற்றுப்பயணம் துவங்கலாம் "நான் ஆட்டோகாரன் ஆட்டோகாரன் நாலும் தெரிஞ்ச ரூட்டுக்காரன்    நியாயம் உள்ள ரேட்டுக்காரன் நல்லவங்க கூட்டுக்காரன்        நல்லா பாடும் பாட்டுக்காரன்  காந்தி பிறந்த நாட்டுக்காரன் கம்பெடுத்தா வேட்டைக்காரன் எளியவங்க உறவுக்காரன்   இரக்கம் உள்ள மனசுக்காரன்டா ....நான் ஏழைக்கெல்லாம் சொந்தக்காரன்டா... "

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா