முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மஹாகவி பாரதிக்கு பாரதப் பிரதமர் புகழஞ்சலி





பிரதமர் அலுவலகம் சர்வதேச பாரதி விழா 2020-ல் பிரதமர் உரையாற்றினார்

அரசின் மகளிருக்கு அதிகாரமளிக்கும் கொள்கைகள் சுப்பிரமணிய பாரதியின் தொலை நோக்குக்கு செலுத்தும் மரியாதை- பிரதமர்

நாம் ஒற்றுமையாக இருப்பதுடன், ஒவ்வொரு மனிதரையும், குறிப்பாக ஏழைகள், ஒடுக்கப்பட்ட பிரிவினர் அதிகாரம் பெற உறுதி மேற்கொள்ள வேண்டும் என பாரதியார் நமக்கு போதித்தார்-பிரதமர்

பாரதியாரின் பிறந்த நாளையொட்டி நடைபெற்ற சர்வதேச பாரதி விழா 2020-ல் காணொளி காட்சி மூலம் உரையாற்றிய பிரதமர் திரு. நரேந்திர மோடி, அவருக்கு மரியாதை செலுத்தினார். மகாகவி சுப்பிரமணிய பாரதியின் 138-வது பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில், வானவில் கலாச்சார மையம் இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்த விழாவின் போது இந்த ஆண்டுக்கான பாரதி விருது பெற்ற அறிஞர் திரு சீனி விஸ்வநாதனுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்.

சுப்பிரமணிய பாரதி பற்றி விளக்குவது மிகவும் கடினம் என பிரதமர் கூறினார். ஒரு தொழிலுடனோ அல்லது பரிமாணத்துடனோ பாரதியை குறுக்கிவிட  முடியாது. அவர் ஒரு கவிஞர், எழுத்தாளர், ஆசிரியர், பத்திரிகையாளர், சமூக சீர்திருத்தவாதி, விடுதலைப் போராட்ட வீரர், மனிதநேயர், மேலும் பல பரிமாணங்களைக் கொண்டவர் என திரு மோடி புகழ்ந்துரைத்தார்.

இந்தப் பெருங்கவியின் கவிதைகள், தத்துவம் உள்ளிட்ட  பிரமாதமான படைப்புகள் மட்டுமல்லாமல் அவரது வாழ்க்கையும் வியப்புக்குரியது என பிரதமர் குறிப்பிட்டார்.  வாரணாசியுடன் மகாகவிக்கு இருந்த நெருங்கிய தொடர்பு பற்றி திரு மோடி நினைவுகூர்ந்தார். பாரதி பற்றி புகழ்ந்துரைத்த பிரதமர், 39 ஆண்டுகள் என்ற குறுகிய வாழ்க்கையில், அவர் ஏராளமாக எழுதினார், ஏராளமானவற்றைப் படைத்தார், பலவற்றில் சிறந்து விளங்கினார் என்று தெரிவித்தார். அவரது எழுத்துக்கள் நமக்கு பெருமை மிகு எதிர்காலத்தை நோக்கிய வழிகாட்டும் விளக்காக உள்ளது என்று அவர் கூறினார். 

நமது இளைஞர்கள் இன்று சுப்பிரமணிய பாரதியிடம் இருந்து ஏராளமானவற்றை கற்றுக் கொள்ளலாம் என பிரதமர் குறிப்பிட்டார். மிக முக்கியமாக தைரியத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். அச்சம் என்பது சுப்பிரமணிய பாரதியிடம் இருந்ததே இல்லை. ‘’ அச்சமில்லை, அச்சமில்லை, உச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை, அச்சமில்லை, அச்சமென்பதில்லையே’’ என்ற பாரதியின் பாடலைக் குறிப்பிட்ட பிரதமர், புதுமையிலும், திறமையிலும் முன்னணியில் திகழும் இன்றைய இளம் இந்தியாவின் எழுச்சியை அவர் கண்டார் எனக் குறிப்பிட்டார். இந்தியாவின் ஸ்டார்ட் அப் வெளி மனித குலத்துக்கு புதியவற்றை அளித்து வரும் அச்சமற்ற இளைஞர்களால் நிரம்பியுள்ளது என அவர் தெரிவித்தார். நம்மால் முடியும் என்ற எழுச்சி நமது நாட்டுக்காகவும், நமது புவிக் கோளத்துக்காகவும் அதிசயங்களை கொண்டு வரும் என்று அவர் மேலும் கூறினார்.

பழமையும், புதுமையும் இணைந்த ஆரோக்கியமான கலவையில் பாரதியார் நம்பிக்கை கொண்டிருந்தார் என பிரதமர் தெரிவித்தார். ஞானம் நமது வேர்களுடன் இணைந்துள்ளதை பாரதி கண்டதாகத் தெரிவித்த அவர், எதிர்காலத்தை நோக்கிய பார்வையும் அவருக்கு இருந்தது என்றார். தமிழ் மொழியையும், தாய்நாடான இந்தியாவையும் அவர் தமது இரு கண்களாக கருதினார் என்று பிரதமர் குறிப்பிட்டார். பழமையான இந்தியாவின் பெருமை, வேதங்கள் மற்றும் உபநிடதங்களின் மகிமை, நமது கலாச்சாரம், பாரம்பரியம், நமது கீர்த்தி மிக்க கடந்த காலம் ஆகியவை  குறித்து பாரதி பாடல்களைப் புனைந்தார். ஆனால், அதே சமயம், கடந்த கால பெருமைகளைக் கூறி  மட்டும் வாழ்வது போதாது என அவர் நம்மை எச்சரித்தார். அறிவியல் மனநிலை, பலவற்றை தெரிந்து கொள்ளும் துடிப்பு ஆகியவற்றை மேம்படுத்தி, முன்னேறி செல்ல வேண்டியது அவசியம் என திரு மோடி வலியுறுத்தினார்.

மகாகவி பாரதியாரின் வளர்ச்சி பற்றிய விளக்கம் பெண்களின் பங்கை மையமாகக் கொண்டிருந்தது என பிரதமர் கூறினார். சுதந்திரமும், பெண்களின் முன்னேற்றமும் அவரது முக்கியமான தொலை நோக்குகளாக இருந்தன. நிமிர்ந்த நன்னடை, நேர் கொண்ட பார்வை என பெண்கள் பற்றி மகாகவி பாரதியார் எழுதினார். இந்த கண்ணோட்டத்தால், ஊக்கம் பெற்ற அரசு, பெண்களுக்கு அதிகாரம் கிடைக்க பாடுபட்டு வருவதாக பிரதமர் தெரிவித்தார். அரசின் ஒவ்வொரு பணியிலும், பெண்களின் கண்ணியத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. முத்ரா திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் மூலம் 15 கோடிக்கும் மேற்பட்ட பெண் தொழில் முனைவோருக்கு நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இன்று, பெண்கள் நமது ஆயுதப் படைகளில் நிரந்தர பணியுடன் பங்காற்றி வருகின்றனர். சுகாதாரம் இன்றி பிரச்சினைகளை எதிர்கொண்டு வந்த  பரம ஏழை குடும்பங்களைச் சேர்ந்த  பெண்கள் இன்று 10 கோடிக்கும் அதிகமான தூய்மையான, பாதுகாப்பான கழிவறைகள் மூலம் பயனடைந்துள்ளனர். இனி அவர்கள் இத்தகைய பிரச்சினைகளை சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை. ‘’ இது புதிய இந்தியாவின் பெண்கள் சக்தி யுகமாகும். அவர்கள் தடைகளை உடைத்து, தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றனர். இது சுப்பிரமணிய பாரதிக்கு புதிய இந்தியாவின் மரியாதை’’ என்று திரு மோடி கூறினார்.

பிளவுபட்ட எந்த சமுதாயமும் வெற்றி பெற முடியாது என்பதை மகாகவி பாரதியார் உணர்ந்திருந்ததாக பிரதமர் குறிப்பிட்டார். அதே சமயம், அரசியல் சுதந்திரத்தின் வெற்றிடம், சமூக ஏற்றத் தாழ்வுகளையும், சமூக அவலங்களையும் தீர்க்க முடியாது என்றும் அவர் எழுதினார். ‘’ இனி ஒரு விதி செய்வோம், அதை எந்த நாளும் காப்போம். தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம்’’ என்ற பாடலை குறிப்பிட்ட பிரதமர், நாம் ஒற்றுமையாக இருப்பதுடன், ஒவ்வொரு மனிதரையும், குறிப்பாக ஏழைகள், ஒக்கப்பட்ட  பிரிவினர் அதிகாரம் பெறுவதற்கு  உறுதி மேற்கொள்ள வேண்டும் என பாரதியார் நமக்கு போதித்ததாகக் கூறினார்.

பாரதியின் படைப்புகளிலிருந்து நமது இளைஞர்கள் கற்றுக் கொள்ள வேண்டியது ஏராளம் எனக் குறிப்பிட்ட பிரதமர், நாட்டிலுள்ள ஒவ்வொருவரும் அவரது படைப்புகளை படித்து ஊக்கம் பெற வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். பாரதியாரின் போதனைகளைப் பரப்பி வரும் வானவில் கலாச்சார மையத்தின் அற்புதமான பணியை அவர் பாராட்டினார். இந்த விழா, இந்தியாவை புதிய எதிர்காலத்துக்கு கொண்டு செல்லும் வகையில்  ஆக்கபூர்வமான விவாதங்களை உள்ளடக்கியதாக இருக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.   

சர்வதேச பாரதியார் திருவிழா 2020-ல் பிரதமர் ஆற்றிய உரையில்

"முதல்வர் திரு. பழனிசாமி அவர்களே, அமைச்சர் திரு. கே. பாண்டியராஜன் அவர்களே, வானவில் கலாச்சார மைய நிறுவனர் திரு. கே. ரவி அவர்களே, மதிப்புக்குரிய பங்கேற்பாளர்களே, நண்பர்களே! வணக்கம்!நமஸ்காரம்!  மகாகவி பாரதியாருக்கு அவருடைய பிறந்த நாளில் நான் மரியாதை செலுத்தி தொடங்குகிறேன். இதுபோன்ற சிறப்புமிக்க ஒரு நாளில், சர்வதேச பாரதி திருவிழாவில் பங்கேற்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த ஆண்டுக்கான பாரதி விருதை, பாரதியாரின் படைப்புகள் குறித்த ஆராய்ச்சிக்காக தன் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்ட அறிஞர் திரு சீனி விஸ்வநாதன் அவர்களுக்கு அளிப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். 86 வயதிலும் முனைப்புடன் ஆய்வு மேற்கொண்டதற்காக அவரை நான் பாராட்டுகிறேன். சுப்பிரமணிய பாரதியாரை எப்படி விவரிப்பது என்பது மிகவும் கடினமான கேள்வி. பாரதியாரை எந்தவொரு தனிப்பட்ட தொழில் அல்லது பரிமாணத்திற்குள் அடக்கிவிட முடியாது. அவர் ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பத்திரிகையாளர், சமூக சீர்திருத்தவாதி, சுதந்திரப் போராட்ட வீரர், மனிதாபிமானி இன்னும் நிறைய வகையில் குறிப்பிடலாம்.

அவருடைய படைப்புகள், கவிதைகள், தத்துவங்கள் மற்றும் அவரது வாழ்வைப் பார்த்து நாம் ஆச்சர்யப்பட வேண்டும். நாடாளுமன்றத்தில் நான் பிரதிநிதியாக இருப்பதில் கௌரவம் கொணடிருக்கும் வாரணாசியுடனும் அவருக்கு நெருக்கமான தொடர்பு இருந்துள்ளது. அவருடைய படைப்புகளைத் தொகுத்து 16 தொகுப்புகளாக வெளியிட்டிருப்பதை சமீபத்தில் நான் பார்த்தேன். 39 ஆண்டுகள் என்ற குறுகிய வாழ்நாளில் அவர் நிறைய  எழுதி இருக்கிறார். நிறைய பணியாற்றி இருக்கிறார். மிகச் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார். பிரகாசமான எதிர்காலத்தை நோக்கி நமக்கு வழிகாட்டுவதாக அவருடைய எழுத்துகள் உள்ளன.

நண்பர்களே,

சுப்பிரமணிய பாரதியாரிடம் இருந்து இன்றைய இளைஞர்கள் நிறைய கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. மிக முக்கியமாக தைரியமாக இருக்க வேண்டும். சுப்பிரமணிய பாரதியாருக்கு அச்சம் என்றால் என்னவென்றே தெரியாது. அவர் பின்வருமாறு கூறியுள்ளார்:                   அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே

இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும்,

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே

அதாவது, எனக்கு அச்சம் கிடையாது, அச்சமே கிடையாது, ஒட்டுமொத்த உலகமே எதிர்த்து நின்றாலும் அச்சம் கிடையாது என்று கூறியுள்ளார். இந்த உத்வேகத்தை இளம் இந்தியாவில் இன்றைக்கு நான் காண்கிறேன்.  புதுமை சிந்தனை படைப்பு மற்றும் சிறப்பான செயல்பாட்டில் முன்னணியில் இருக்கும் இளைஞர்களிடம் இந்த உத்வேகத்தை நான் காண்கிறேன். இந்தியாவின் ஸ்டார்ட்அப் முயற்சிகளில், அச்சம் இல்லாத இளைஞர்கள், மனிதகுலத்திற்கு புதிதாக எதையாவது தர வேண்டும் என்ற உத்வேகம் உள்ளது. `என்னால் முடியும்' என்ற இந்த உத்வேகம் தேசத்துக்கும், உலகிற்கும் அற்புதங்களைக் கொண்டு வரும்.

நண்பர்களே,

பழங்கால மற்றும் நவீன காலத்தின் ஆரோக்கியமான கலவை தேவை என்பதில் பாரதியார் நம்பிக்கை கொண்டிருந்தார். நமது வேர்களுடன் தொடர்பில் இருக்கும் அதே நேரத்தில், எதிர்காலத்தை நோக்கி முன்னேறும் வகையிலும் இருப்பதே அறிவார்ந்த செயல்பாடு என்று அவர் கருதினார். தமிழ் மொழியையும், தாய்நாடான இந்தியாவையும் தன் இரு கண்களாக அவர் பாவித்தார். பழங்கால இந்தியா பற்றி, வேதங்களின் மற்றும் உபநிஷத்கள், நமது கலாச்சாரம், பாரம்பரியம், ஒளிமயமான கடந்த காலத்தின் சிறப்புகள் பற்றி அவர் பாடல்கள் இயற்றியுள்ளார். ஆனால் அதே சமயத்தில், கடந்தகால பெருமைகளுடன் வாழ்வது மட்டுமே போதுமானதாக இருக்காது என்றும் அவர் எச்சரித்துள்ளார். அறிவியல் சிந்தனையை, விசாரித்து அறியும் உத்வேகத்தை, முன்னேற்றத்தை நோக்கிய பயணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

நண்பர்களே,

மகாகவி பாரதியாரின் வளர்ச்சிக்கான வரையறையில், பெண்களின் பங்களிப்பு தான் மையமானதாக இருந்தது. பெண்கள் சுதந்திரமான, அதிகாரம் பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்பது மிக முக்கியமான தொலைநோக்கு சிந்தனையாக இருந்தது.  பெண்கள் தலைநிமிர்ந்து நடக்க வேண்டும், மக்களை நேருக்கு நேராக கண்களைப் பார்த்து நடக்க வேண்டும் என்று மகாகவி பாரதியார் எழுதியுள்ளார். இந்த தொலைநோக்கு சிந்தனையின் ஊக்கத்தை நாம் எடுத்துக் கொண்டு, பெண்களால் முன்னெடுக்கப்படும் அதிகாரம் அளிப்பை உறுதி செய்ய நாங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். அரசின் செயல்பாட்டில் ஒவ்வொரு அம்சத்திலும், பெண்களின் கண்ணியத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதை அறிந்து நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள்.

இன்றைய காலத்தில் 15 கோடிக்கும் அதிகமான பெண் தொழில்முனைவோருக்கு முத்ரா திட்டம் போன்றவை மூலம் கடன் அளிக்கப் பட்டுள்ளது. அவர்கள் தலைநிமிர்ந்து, நம்மை நேருக்கு நேராக பார்த்து நடக்கிறார்கள், எப்படி தற்சார்பாக மாறலாம் என்று சொல்பவர்களாக இருக்கிறார்கள்.

இன்றைய காலத்தில், நமது ராணுவத்தில் நிரந்தரப் பணிகளில் பெண்கள் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் தலைநிமிர்ந்து நடந்து, நம் கண்களைப் பார்த்துப் பேசுகிறார்கள். தங்கள் கைகளில் தேசம் பாதுகாப்பாக இருக்கிறது என்று உணர்த்துகிறார்கள். பரம ஏழைகளான பெண்கள், பாதுகாப்பான கழிப்பறை வசதிகள் இல்லாத நிலையில் இருந்தவர்கள், 10 கோடிக்கும் மேலான பாதுகாப்பான, சுகாதாரமான கழிப்பறை வசதிகளைப் பெற்றுள்ளனர்.

அவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் கிடையாது. அவர்கள் தலைநிமிர்ந்து நடக்கலாம், எல்லோரையும் கண்ணைப் பார்த்து பேசலாம், மகாகவி பாரதியார் கற்பனை செய்ததைப் போல அவர்கள் இருக்கலாம். இது புதிய இந்தியாவின் மகளிர் சக்திக்கான காலமாக உள்ளது. அவர்கள் தடைகளைத் தகர்த்து, தாக்கத்தை ஏற்படுத்துகின்றனர். இதுதான் சுப்பிரமணிய பாரதிக்கு புதிய இந்தியா செலுத்தும் அஞ்சலியாக உள்ளது.

நண்பர்களே,

பிரிந்து கிடக்கும் சமூகத்தால் வெற்றி பெற முடியாது என்பதை மகாகவி பாரதியார் புரிந்து கொண்டிருந்தார். அதே சமயத்தில், சமூக சமத்துவமற்ற நிலையில், சமூகக் கொடுமைகளுக்குத் தீர்வு காணாத நிலையில் அரசியல் சுதந்திரம் பெறுவதால் மட்டும் பயனில்லை என்று அவர் எழுதியுள்ளார். அவர் பின்வருமாறு எழுதியுள்ளார்:

இனியொரு விதி செய்வோம் - அதை

எந்த நாளும் காப்போம்

தனியொரு வனுக்குணவிலை யெனில்

ஜகத்தினை யழித்திடுவோம்

அதாவது, இப்போது நாம் ஒரு விதியை உருவாக்கி, அதை எப்போதும் பின்பற்றுவோம். தனியொரு நபர் பட்டினி கிடந்தால், உலகை அழித்திடுவோம் என்பதாகும். ஒவ்வொரு தனிநபருக்கும் அதிகாரம் கிடைப்பதை உறுதி செய்வதாக, ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என்று அவர் வலுவாக நினைவூட்டியுள்ளார். குறிப்பாக ஏழைகள் மற்றும் விளிம்புநிலையில் உள்ளவர்களுக்கு அதிகாரம் கிடைக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

நண்பர்களே,

பாரதியிடம் இருந்து நமது இளைஞர்கள் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. நாட்டில் அனைவரும் அவருடைய படைப்புகளைப் படித்து, அதன் மூலம் உத்வேகம் பெற வேண்டும் என்று நான் விரும்புகிறேன். பாரதியார் பற்றிய தகவல்களைப் பரப்புவதில் வானவில் கலாச்சார மையம் ஆற்றிவரும் பணிகளைப் பாராட்டுகிறேன். இந்தியாவை புதிய எதிர்காலத்துக்கு அழைத்துச் செல்ல உதவக் கூடிய வகையில் இந்த திருவிழாவில் ஆக்கபூர்வமான கலந்தாடல்கள் நடைபெறும் என்று நான் நம்புகிறேன்.

நன்றி.

மிக்க நன்றி"......என முடித்தார் பிரதமர் .........                                  காலம் கடந்து செல்ல தமிழ்வழி வாழ வைத்த மஹாகவி பாரதி.ஏட்டயபுரம்  தமிழ்க் கவிஞனுக்கு சம்பாதிக்கத் தெரியாது, அந்நியனுக்கு அடிபணிய தெரியாது, அவனுக்கு அப்போது  செல்வாக்கும் கிடையாது, அவனுக்கு பெரும் ஆதரவுக் கூட்டமும் கிடையாது,  பாக்கெட்டில் பத்து காசு கூடக் கிடையாது, அவனிடம் அதிகாரம் கிடையாது, பெரும் நிலபுலனும் தொழிற்சாலையும் கிடையாது 

அவனிடம் இருந்ததெல்லாம் ஆழ்ந்த அறிவு, சந்தேகத்துக்கு அப்பாற்பட்ட தேசபற்று, பல மொழிகளில் பெரும் அறிவு, மிக தீர்க்கமான ஞானம், இந்துமதம் மேல் அபாரமான நம்பிக்கை, அவனின் தொழில் எழுத்தும் பாட்டும். அவனின் பலம் அது, வாழ்வு அது, மூச்சும் கைகோலும் கைவிளக்கும், வாழ்வின் மூலதனமும் அது . அந்த மொத்த வரத்தையும் இந்நாட்டுக்கும், நாட்டு விடுதலைக்கும், இந்த மதத்துக்கும் கலாச்சார பண்பாட்டுக்குமாய் கொடுத்தான் பாரதி

இந்தியாவில் தேசாபிமானிகள் குறைவு, அதுவும் மிக அறிவார்ந்த சிந்தனைமிக்க தேசியவாதிகள் குறைவு, அதை தனி மனிதனாக நின்று லட்சம்பேர் சுமக்க வேண்டிய சுமையினை தனித்து சுமந்தான்.. நிச்சயமாக கட்டபொம்மனும் பூலித்தேவனும் ஆயுதவழிப் போரை தொடங்கி வைத்த சீமை தான் சுப்பிரமணிய பாரதியை கொடுத்து பேச்சிலும் எழுத்திலும் பாட்டிலும் சுதந்திரப் போரை தொடங்கி வைத்தது. சட்டர்ஜிக்கு முன்பே வந்தே மாதரம் பாடியவன் அவனே, தன் எழுத்து ஒன்றாலே இந்தியா முழுக்க தேசபக்தர்களை்த் திரட்டியவனும் அவனே                  ஒரு விளக்கு ஓராயிரம் விளக்கினை ஏற்றிவைக்கும் என்பது போல அந்த சிறு கூட்டம் பேரோளியினை இங்கு ஏற்றியது, அவர்கள் கொடுத்த வீச்சும் ஏற்றிவைத்த புரட்சி தீயும் கொஞ்சமல்ல‌. ஒருவன் காலமான பின்பும் அவனுக்கு எது எஞ்சி நிற்கின்றதோ அதுதான் அவன் வாழ்ந்த வாழ்வின் அடையாளமும் அவனின் வாழ்வின் தத்துவமும். அப்படி இங்கு புகழோடு வீற்றிருப்பவர் வெகு சிலரே அதில் ஒருவன் எங்கள் மஹாகவி பாரதி, தெற்கத்தி மண் கொடுத்த எங்கள் சிங்க நிகர் பாரதி. அந்தத் திருகமகன் மகாகவி சுப்பிரமணிய பாரதி ஒரு பிறவி ஞானி, பலதலைமுறை ரிஷிகளின் ஞானமும் அறிவும் ஒருங்கே பிறந்த பிறப்பு, தெய்வம் அவனுக்கு பாடும் வரத்தை கொடுத்தது. அந்தப் பாடலையும் அவன் தனக்காக பாடவில்லை, அவனின் பாடெலெல்லாம் தேசம், சமூகம் , தெய்வம் என இந்த மூன்று பிரிவில்தான் வருமே தவிர, அவனுக்காகவோ அவன் குடும்பத்துக்காகவோ அவன் பாடவில்லை. நெல்லையின் வறண்ட பகுதியில் வளரும் மரமெல்லாம் நீருக்கு ஏங்கி தவிக்க வேண்டும் என்பதும், தமிழகத்தில் இருக்கும் அறிவாளியெல்லாம் ஒரு அங்கீகாரத்துக்கு ஏங்கி தவிக்க வேண்டும் என்பது விதி அந்தக் கொடுமைக்கு அவனும் தப்பவில்லை.ஆச்சரியமானவன் அந்த சுப்பிரமணி, 6 வயதில் கவிதை எழுதினார், நெல்லையில் தான் தமிழைக் கற்றார், அந்த ரிஷிகேஷ் சன்னியாசி சிவானந்தாவும் அவரும் வகுப்பு தோழர்கள். எட்டயபுரம் மன்னர் அந்த அறிவில் சிறந்த மாணவர்களை தன் ஆதரவில் படிக்க வைத்தார். இருவருமே சரித்திரமானது ஆச்சரியம். காசி சுப்பிரமணியினை உருவாக்கியது, அவன் பாரதியாக மலர்ந்து ஞானம்பெற்றது அங்குதான், பல மொழிகளை கற்று மொத்த இந்தியாவினையும் உணர்ந்தது அங்குதான், அதன் பின்புதான் சொன்னான்

"யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்",

உண்மைதான் பல ஊர்களில் தண்ணீர் குடித்தால்தான் சுவையான நீர் எது என்று தெரியும், அது அவருக்கு தெரிந்தது.

வெறும் தமிழ்படித்துவிட்டு தமிழ் உயர்ந்தது என சொல்வதில் என்ன இருக்கின்றது, உலகமொழியெல்லாம் சொன்னானே பாரதி, அதில் இருந்தது உண்மை. எல்லா மொழியும் கற்றாலும் தமிழரிடம் தமிழிலும் உருது பேசும் வடக்கத்திய‌ இஸ்லாமியரிடம் இந்தியிலும் தான் பேசினார், இந்நாட்டு மொழியில் அவருக்கு ஒரு தீரா பெருமை இருந்தது.தமிழ்மேல் தீரா பாசம் இருந்தது தமிழ்கவிதைக்கு தலைகீழ் திருப்பம் கொடுத்தார், பல்லாண்டு கால இலக்கிய உலகுக்கு திடீர் திருப்பம் அவரே கொடுத்தார். பாரதியின் வாழ்வில் நாம் கண்ட விஷயம் அம்மனிதனிடம் உண்மை இருந்தது, அது அநீதியினை கண்டபொழுதெல்லாம் பொங்க சொன்னது. இந்த தேசத்துக்காக அவனை எழுதச் சொன்னது. சில உண்மைகளை இன்னொருவர் மூலம் தெய்வம் உணர்த்திய பொழுது அதை ஏற்கும் மனமும் பாரதிக்கு இருந்தது, அருட்சகோதரி நிவேதிதாவை கல்கத்தாவில் கண்டார் உண்மை உணர்ந்து பெண்விடுதலைக்கு தமிழகத்தில் முதல் குரல் கொடுத்தார்.

இங்கு பெண்ணுக்கும் எல்லா உரிமையும் வேண்டும் என்ற முதல் குரல் அவனிடமிருந்தே வந்தது, ஈரோட்டு ராம்சாமியெல்லாம் பின்னாளில் பாரதி சொன்னதைத் தான் சொன்னது பாரதி பணத்துக் காகவும் வாய்ப்புக்காகவும் வாழ்ந்திருந்தால் அவன் வாழ்வு எப்படி இருந்திருக்கும்? எந்த வம்புதும்புக்கும் போகாமல் எழுதிமட்டும் கொண்டிருந்தால் தாகூரை விட பெரும் கவிஞனாக கொண்டாடபட்டிருப்பான். ஆங்கிலேயனை ஆதரித்திருந்தால் இன்று பெரும் பணக்கார கவிஞனாக வரலாற்றில் இருந்திருப்பான் இங்கல்ல இலண்டனில், அவரது ஆங்கிலப்புலமை அப்படி. தாகூர் ஒரு ஆங்கில அறிவாளி , நேருவின் மகோன்னத சாயல். எழுதிய பாடல் இங்கு தேசிய கீதமானது . பாரதி தாகூரை போல் வளைந்திருந்தால் மிகபெரிய கவிஞனாக அவனால் இலண்டனில் வலம் வந்திருக்க முடியும், பெரும் சுகபோகத்துடன் வாழ்ந்திருக்க முடியும். ஏன் எட்டயபுர மன்னரைப் புகழ்ந்து ஒரு நாளைக்கு 2 பாடல் எழுதியிருந்தால் இன்று பாரதியின் வம்சம் 4 மில்களோடு நெல்லையையும், தூத்துகுடியினை ஆண்டுகொண்டிருக்கும். அவ்வளவு ஏன் மதுரை சேதுபதி பள்ளி  ஆசிரியப்பணியினை ஒழுங்காகச் செய்தால் கூட ராதாகிருஷ்ணன் அளவிற்கு உயர்ந்திருப்பான். அந்தப் பத்திரிகையாவது ஒழுங்காக நடத்தினால் இன்று அது தொலைகாட்சிகள் நடத்தும் அளவிற்கு பெரும் ஊடகமாக வளர்ந்திருக்கும். அப்பாவி சுப்பிரமணிய பாரதி இவற்றை எல்லாம் எப்படி தவறவிட்டார் என்றால் இரண்டே காரணம்தான் ஒன்று இந்த நாட்டை தீவிரமாக நேசித்தது, இன்னொன்று இந்து மதம் நிலைக்க, மதமாற்றம் தடுக்க வாய்ப்பாய் இருந்த சில சமூகத் தீய பழக்க வழக்கங்களை கண்டித்து உண்மையை உரக்க சொன்னது. ஆம் யாராலும் புரிந்து கொள்ளமுடியா அந்த பாரதி உண்மை பேசினான், நாட்டை நேசித்தான், வாழ்வை இழந்தான், அவனது தேசபற்று ஆட்சியாளர் களின் கோபத்தைக் கிளறியது, சமூகபற்றும் மதபற்றும் சொந்த மக்களே பாரதியை விரட்ட வைத்தது. ஜெருசலேம் வீதிகளில் இயேசுவுக்கு நடந்ததுதான் எட்டயபுரத்திலும் சென்னையிலும் பாரதிக்கும் நடந்தது. அவன் போராடினான், நம்பினான், தன்னாலும் வாழமுடியும் என நம்பினான். ஒரு அங்கீகாரத்துக்கு ஏங்கினான். அவனைப்  புரிந்து கொள்ள கெஞ்சினான், ஆனால் அவனின் 7ம் அறிவுக்கும் இங்கிருந்தோரின் ஐந்தாம் அறிவுக்கும் பொருந்தவில்லை

வளைந்தும், நெளிந்தும், கெஞ்சியும், கொஞ்சியும்,மிரட்டியும், விரட்டியும் வாழவேண்டிய சமூகத்தில் அவர் மட்டும் மனிதனாக வாழ்ந்தான், மனித நேயத்தோடு வாழ்ந்தான். உண்மையில் பராசக்தி வசனம் அவருக்குதான் பொருந்தும், அது பாரதியினை நினைத்தால் ஒவ்வொருவர் மனதிலும் தானாக வரும்

பிரிட்டிசார் விரட்டினர் ஓடினான், வறுமை விரட்டியது ஓடினான், சமூக கொடுமைகள் விரட்டியது ஓடினான்,ஓடினான் முடிந்தவரை ஓடினான், முடியவில்லை திருவல்லிக்கேணி யானை தின்ற கரும்பாணான்   இறந்தான். ஒரு மனிதனுக்கு தாங்கமுடியாத அவமானம் என்பது அவனது திறமையை பரிகாசிப்பது, அதற்கு அங்கீகாரம் தர மறுப்பது, ஒரு வகையில் அது ஒரு உளவியல் கொலை, அதைத்தான் அந்த சமூகம் பாரதிக்கு செயதது, பாவம் அவன் "நல்லதோர் வீணை செய்தே" என அவனால் தெய்வத்திடம் புலம்பத்தான் முடிந்தது, "சக்திகொடு" என கெஞ்சத்தான் முடிந்தது,

அவனுக்கிருந்த அறிவிற்கு அவனோடு சமமாக பேசகூட யாருமில்லை, பேசினாலும் அவனை புரிந்து கொள்ள முடியவில்லை. ஒருவன் கையில் எவ்வளவு இருக்கின்றது, சொத்துபத்து எவ்வளவு இருக்கின்றது என காணும் செல்வங்களையே கணக்கிட்ட உலகம் அவனின் பெரும் அறிவு செல்வத்தை கண்டு கொள்ளவில்லை. கொண்டாடப்பட வேண்டியவனை பைத்தியம் என ஒதுக்கினார்கள்,விரட்டினார்கள் அவன் கவிதையோடும், கடவுளோடும், பறவையோடும், கழுதையோடும் பேசிக்கொண்டிருந்தான் அந்தோ பரிதாபம். அங்குமிங்கும் ஓடினான், இந்த சமூகத்தில் தனக்கான இடத்தை பிடிக்கலாம் என நம்பினான், முடியவில்லை.

உலகிலே மிக கொடுமையான ஒரு விஷயம் உண்டென்றால் ஒரு அறிவாளியினை 10 முட்டாள்களோடு வாழவிடுவது அதுதான் பாரதிக்கும் நடந்தது. குடும்பமும் வறுமையும் அவனை பணம் சம்பாதிக்க கட்டாயபடுத்தின, அவனும் முடிந்ததை எல்லாம் செய்துபார்த்தான், காலம் அவனுக்கு வாய்க்கவில்லை,அந்த வறுமையிலும் கண்ணனை நினைத்து பாடி மகிழ்ந்தான், அப்பொழுதும் பாரதபோரையும் இந்திய சுதந்திரத்தினையும் தொடர்புபடுத்தி பாஞ்சாலி சபதம்தான் எழுத துணிந்தான். ஆனாலும் கொடும் துன்பங்கள் அவருக்கு உண்மையை உணர்த்திற்று,

கனவு வேறு,கடமை வேறு, வாழ்க்கைவேறு, என்பது மெல்ல விளங்கிற்று. அதை உணர்த்தியது அவரது தோழரான‌வ.உ.சியின் சிறைகொடுமையும், சுப்பிரமணிய சிவாவின் கொடுமையான இறுதிகாலமும்.இன்னும் வ.வேசு அய்யர் முதல் நீலகண்ட பிரம்மச்சாரி வரை அவரின் தோழர்களுக்கு நிகழ்ந்ததை எலலம் எண்ணி மனம் வருந்தினான். ஆம் வெள்ளையனின் நரிதிட்டத்தில் தேசம் அவர்களை கைவிட்டது, வெள்ளையரிகளின் கைகூலிகள் நிரம்பிய காங்கிரஸ் சுதந்திரத்தை மெல்ல மனதுக்குள் சொல்லும் அளவு போர்குணத்தை அடக்கியது

மக்களால் கைவிடபட்ட போராளிகள் வரிசையில் தன் கண்முன்னே தன் தோழர்கள் இணைந்து சரிவதை கண்டு துடித்தான் பாரதி, அவனின் பாடலும் எழுத்தும் கூட மக்களிடம் சென்று சேர்வது தடுக்கபட்டது, வெள்ளையனை விட அவன் கைகூலிகள் அதை சரியாக செய்தனர். விளைவு ஒரு பெரும் கவிஞன், பன்மொழி ஆசிரியன், பெரும் காவியங்களை படைக்கும் ஆற்றல் உள்ளவன் ஒரு சாதாரண பத்திரிகையாளன் ஆனார், அந்த யானை விறகு பொறுக்க கிளம்பியது, அந்த சிங்கம் எலி வேட்டைக்கு சென்றது, அந்த சூரியன் ஒரு அறைக்கு விளக்காக முயன்றது. இறுதிகாலத்தில் பித்துபிடித்தவர் என்றும், வாழதெரியாதவர் என்றும் புறக்கணிக்கபட்டவர், அப்போதும் ஏதோ எழுதிகொண்டிருந்தார், அப்பொழுது எழுதியவைதான் சாகாவரம் பெற்ற தேசபக்தி பாடல்களும், இன்னும் பல அழியா பாடல்களும். ஒன்று நிச்சயமாக சொல்லலாம், இந்தியாவின் தேசியகீதமாக்குவதற்கு அவரது பாடல்களை தவிர நிச்சயமாக எக்காலத்திலும் வேறு பாடல்களில்லை. ஆனால் இந்திய இலக்கிய உலகம் வங்காளிகள் கையில் இருந்தது, எளிதாக தாகூரின் பாடல் 1911ல் ஜார்ஜ் மன்னருக்காக‌ தாகூர் எழுதியது இந்தியாவில் இல்லாத சிந்து, (பிரிந்த) பஞ்சாபையும், வங்கதேசம் ஆகிவிட்ட வங்கத்தையும் சேர்த்து. சிந்துவை இன்னமும் வாழ்த்திகொண்டிருக்கின்றோம்ஆனால் அதன் கரையிலே தான் இந்தியாவினை அழித்தொழிக்க திட்டம் தீட்டபட்டு கொண்டிருக்கின்றது என்ன கொடுமை இது. ஆனால் "தாயின் மணிக்கொடிபாரீர்" அல்லது "வந்தே மாதரம் என்போம்" போன்ற பாடல்களில் சிறிது மாற்றம் செய்துபாருங்கள், அற்புதமான தேசிய பாடல்கள் கிடைக்கும். தாகூருக்கு வெள்ளையர் கொடுத்த பெரும் வெகுமதி பின்னாளைய "நோபல் பரிசு", பாரதியோ வெள்ளையர் விரோதியாய் பாண்டிச்சேரியில் "ஆடுவோமே பள்ளு பாடுவோமே" என பாடிகொண்டிருந்தார், அவருக்கு வெள்ளையன் கொடுத்தது "தேச துரோகி" பட்டமும் சிறைதண்டனையும். பாரதி இந்தியாவினை எவ்வளவு நேசித்தார் அல்லது இந்தியா பற்றி அவரின் கனவு என்ன என்பதற்கு அவரின் பாடல்களே சாட்சி, தாகூர் சிறந்த கவிஞர்தான் ஆனால் பாரதியின் "கணல்" அல்லது "உணர்ச்சி" அவர் பாடலில் இல்லை. இன்றும் சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம் என அவன் பாடியதே நடந்து கொண்டிருகின்றது அவரது கனவுபடியே இந்தியா சுதந்திரம் பெற்றது, ஆனால் அவர் மிகவும் நேசித்த சிந்து நதி கூட இன்று இந்தியாவிற்கு இல்லை, பாரதி முன்னமே இறந்தார் இல்லை 1947ல் இறந்திருப்பார்.

எப்படியோ பெண்விடுதலைக்கும், தீண்டாமை கொடுமைக்கும், சாதி கொடுமைக்கும் எதிராக தீ வைக்க துணிந்தவர் பாரதி. அவர் பாஷையில் சொல்வதென்றால் "அக்கினிக் குஞ்சொன்று கண்டேன், அதை அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன் வெந்து தணிந்தது காடு". அவர் வைத்த அந்த‌ தீ தான், பின்னாளில் எழுந்து பல தமிழக சமூக மாற்றங்களுக்கு வழிவிட்டது. பாரதியின் வாழ்க்கையே கொடுமையானது, அவராவ‌து அறிவாளி இந்த சமூகத்தோடு ஒட்டமுடியாமல் அவதிபட்டார் விதி, ஆனால் அவரை நம்பி வந்த மனைவியின் வாழ்வே மகா கொடுமை, வறுமையும் புலமையும் அந்நாளைய தமிழக அறிஞர்களின் சாபம்தான். வருமானம் இல்லை, கடன் வாங்கி அரிசி வாங்க பணம் கொடுத்தால் புத்தகம் வாங்குவது, பக்கத்து வீட்டில் கடனுக்கு அரிசியாக‌ வாங்கி வைத்தால் காக்கா குருவிக்கு வீசி கவிதைபாடுவது, உச்சகட்டமாக குடும்பமே பசியில் வாடினால் அவர் விழித்திருந்து அழுது கவிதை எழுதுவார், பிள்ளைகளுக்காய் அல்ல பிஜி தீவில் கரும்புகாட்டில் அவதிபடும் இந்தியருக்காக‌,உலகின் கஷ்டத்த்தினை எல்லாம் உணர்ந்த பாரதிக்கு மனைவியின் கஷ்டம் புரியவில்லை,புரியவும் புரியாது காரணம் அவர் மனநிலை அப்படி.புரிந்தாலும் அவரால் ஒன்றும் செய்யமுடியாத ஒரு நிலை. இறுதியாகச் சென்னை திருவல்லிகேணியில் ஒரு வாடகை வீட்டில் ஒண்டுகுடித்தனம் நடத்தும்பொழுதும் பாரதி அப்படியே இருந்தார், சொந்த பந்தம் யாருமில்லாத அபலையாக செல்லம்மாள் அந்த கோயிலிலே அழுவார். கோயிலின் தெய்வம் கோபபடவில்லை, ஆனால் கோயில் யானை தாக்கியது, வழக்கம்போல பழம்கொடுக்க "அப்பனே கணேசா.." என அருகில் சென்ற பாரதியை லேசாக தாக்கிற்று. அன்று நோயில் விழுந்தவர் விரைவாக உடல்நலம் கெட்டு செப்டம்பர் 11ல் காலமானார். உண்மையில் அந்த யானை பாரதியினை கோபபட்டு தாக்கவில்லை, அது உண்மையில் அவருடன் விளையாடியது, அனுதினமும் பழம் கொடுத்து விளையாடும் அவருடன் கொஞ்சம் முரட்டுதனமாக விளையாடியது ஆனால் மனதாலும் உடலாலும் தளர்ந்திருந்த பாரதி எளிதில் காயமடைந்தார், அப்பொழுது பாரதிக்கு ஏதோ நடந்துவிட்டதை அறிந்து அந்த யானை அமைதியாய் ஒதுங்கி நின்று கண்ணீர் விட்டது என்பதை கண்டோர் உண்டு.மொத்ததில் இந்தியா பிளவுபடுவதை பார்த்தால் பாரதி தாங்கமாட்டான், அதுவும் நாத்திக கோஷ்டிகளின் அட்டகாசத்தை கண்டால் அவன் செத்தேவிடுவான் என முன்னறிந்த தெய்வம் அவனை அப்படியே யானை வடிவில் எடுத்து கொண்டது.

இன்று அவர் பெரும் கவிஞர், இனி எந்த கவிஞனும் பிடிக்க முடியாத இடத்திற்கு சொந்தகாரர், கம்பனுக்கு பின் தமிழகம் கண்ட பெரும் கவிஞன், எந்த உண்ர்ச்சியில் பாட்டெழுதுகின்றானோ அதே உணர்ச்சியை அந்த‌ பாடலை கேட்பவருக்குள்ளும் கொண்டுவரும் அனாசய வித்தைக்கு சொந்தகாரன். 60 வருடம் 100 வருடம் கழித்து போடபடும் இசைக்கும் கட்டுபடும் வரிகளை மிக அழகாக எழுதியிருப்பது தான் பாரதியின் பெரும் சிறப்பு. ஆனால் வாழும் பொழுது அவருக்கு ஒரு செம்பு தண்ணீர் கொடுக்கவும் ஆளில்லை, பேச கூட விரும்பவில்லை, ஒரு அகதியாய், ஒரு அனாதயாய் விரட்டி விரட்டி கொத்தபட்ட ஒரு பரிதாபத்திற்குரிய அறிஞன். ஆனால் 38 ஆண்டுகள் வாழ்வதற்குள்ளாகவே வரலாற்றில் இடம்பெற்ற அறிஞன் அவர், தமிழ் இலக்கியம் உள்ள காலமட்டும் பாரதியார் வாழ்வார், அப்படி ஒரு சூரியனை கொடுத்தது என்பதற்காக நெல்லையின் மக்களான நாமும் பெருமை அடையலாம். எம்மைப் பொறுத்தவரை பாரதி திருஞான ச்ம்பந்தரின் ஒரு சாயல் கொண்ட பிறப்பு, அதில் சந்தேகமில்லை தனது ஏதாவது ஒரு வரியில் பாரதி நிச்சயம் ஒவ்வொருவரின் உள்ளத்தையும் தொட்டிருப்பார், அந்த மகா கவிஞனுக்கு ஒரு தமிழனாய், அஞ்சலி செலுத்துவோம். வாழும்பொழுது வெள்ளையனை எதிர்த்தவன் என்பதற்காக விரட்டபட்டான், சுதந்திர இந்தியாவின் தமிழகத்தில் பிராமணன் என்பதர்க்காக அவன் புகழ் திட்டமிட்டு மறைக்கபட்டது. பாரதியினை கொண்டாடினால் அவனின் தேசபக்தியும், ஒருங்கிணைந்த இந்தியாவினையும் கொண்டாடவேண்டும் என்ற நோக்கில் அவன் திட்டமிட்டு மறைக்கபட்டான், தமிழ் பக்தரான பாரதிதாசன் கொண்டாடபட்டான், பாரதியின் வாரிசு என கொஞ்சமும் சொல்லமுடியாத தகுதி கொண்ட  பாரதிதாசன். பாரதிக்கு இருந்த தேச அபிமானமும் அறிவும் அவனுக்கு கொஞ்சமுமில்லை, அறிவுகெட்ட தேசவிரோதிகளை கொண்டாடும் திராவிடம் பேசும் நபர்கள் பாரதியார் சீடரான  பாரதிதாசனைக் கொண்டாடியதில் அதிசயமில்லை. ஆம், கவனியுங்கள் தேசாபிமானி பாரதியினை அதிகம் கண்டுகொள்ளா அந்தக் கும்பல் பாரதிதாசனை கொண்டாடும், காங்கிரஸுக்கு எதிரி என்பதால் அந்த கட்சியும் பாரதியாரை அதிகம் தொடாது, இப்பொழுது தமிழகத்தில் பாஜக குரல் எழும்புகின்றது, அந்த பாஜகவினராவது அவனுக்கு கொடுக்கவேண்டிய மரியாதையினை கொடுக்கட்டும். தமிழக பாஜகவினர் அவனுக்கு செய்வதாக இருந்தால் அவன் பாடல்களை இந்தியா முழுக்க கொண்டு செல்லலாம், வந்தே மாதரம் பாடலுக்கும், ஜனகணமன விற்கும் சற்றும் குறையாத பாடல் அவனுடையது.

தேசபக்தி என்றால் என்னவென்று வாழ்விலும் , பாடலிலும் சொல்லி சென்றவன் அவன். உண்மையான தேசபக்தி என்பது பாரதியிக்கு அஞ்சலி செலுத்துவதிலும் அவன் பாடாலை நாடெல்லாம் கொண்டு செல்வதிலும் இருக்கின்றது.

தாயின் மணிக்கொடி பாரீர் என்பதை விட மிக உருக்கமான தேசிய‌கொடி வாழ்த்து பாடலை எங்கு காணமுடியும்? வந்தே மாதரம் என்போம் என்பதை விட உணர்ச்சிமிக்க தேசிய பாடல் எங்கு இருக்கின்றது?

அவன் பாடல்களையும் தேசியமயமாக்க சொல்லலாம், எல்லா இந்தியனும் அதனை படிக்கலை

சுதந்திர இந்தியாவின் முதல் முறையாக சுதந்திர தினத்தில் செங்கோட்டையில் பாரதியின் வரிகளை மேற்கோள் காட்டி பேசினார் பிரதமர் மோடி

கைகளை கூப்பி கண்ணீர் விட்டு சொல்லலாம், 1920 க்கு பின் ஒரு உச்சபீட தலைவன் இந்தியாவில் பாரதியினை நினைவு கூர்ந்தார் என்றால் அது பிரதமர் நரேந்திர மோடிதான்

காந்தி, நேரு இந்திரா ராஜிவ் என யாரும் செய்யாத அந்த மகா தூய செயலை இன்று  மோடி தான் செய்தார், உண்மையான தேசபக்தன் ஒருவனுக்கே மாபெரும் தேசபக்தனான பாரதியின் பெருமை தெரிந்தது

இதற்கு 100 ஆண்டுகள் ஆகியிருக்க்கின்றது

பாரதிக்கான மிகபெரும் அங்கிகாரம் அது, அது இன்னும் தொடரவேண்டும், பாரதி புகழ் இந்தியா எங்கும் பரவி நிலைக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்குத்தான் இருந்தது

ஆம், பாரதீய ஜனதா என அவர்கள் பின்னாளிதாண் கட்சி தொடங்கினார்கள் ஆனால் முதன் முதல் "பாரதி" என பட்டத்தை சுமந்தவன் அந்த சுப்பிரமணி

அந்த சுப்பிரமணி பாதையில் நடந்த கட்சிதான் இன்று ஆட்சியில் இருக்கின்றது, அவன் சொல்லியபடிதான் "வெள்ளிப்பனிமலையில் மீதுலவுவோம்" என சீனாவினை மிரட்டி கொண்டிருக்கின்றது

அவனின் பாடலை கவனியுங்கள், அவனுக்கு பெரும் உலக கவனமும் தேசாபிமானமும் எதிர்கால சமூக சிந்தனையும் நிரம்பி இருந்திருக்கின்றது

நாத்திகத்தின் போக்கை 1917லே உணர்ந்தான், எல்லோரும் ரஷ்ய புரட்சியினை மானிட சாதனை என சொல்ல "பராசக்தி எழுந்தாள்" என நெற்றியில் அடித்து சொன்னவன் பாரதி

அவன் பாடலில் தேசத்தின் நலம், எதிர்காலம், கலாச்சாரம், சமூகம், மானிடம், விஞ்ஞானம், இந்துமத கோட்பாடுகள் என எல்லாமும் எல்லாமும் கலந்திருக்கும்

அப்படி ஒரு கவிஞன் இனி சாத்தியமில்லை, அவன் வறுமையில் போராடினான், அவன் ஓட விரட்டபட்டான், வறுமையும் வெள்ளையனும் அவனை விரட்டி கொண்டே இருந்தன‌

ஆனால் அவன் கண்ட கனவு பெரிது, மிகபெரிய மனசிகரத்தில் அமர்ந்து எல்லா பக்கமும் பார்த்து பார்த்து அவன் எழுதிய பாடல்களின் தன்மையும் சிந்தனையும் அதை அறுதியிட்டுச் சொல்கின்றது

கற்பனையில் எதை எலலமோ தேசம் பற்றி எழுதிவிட்டு, பின் தன் வறுமை உணர்ந்து "சக்திகொடு" என சக்திதேவியிடம் கெஞ்சியிருக்கின்றான்

கொஞ்சம் நம்பிக்கையில் "கிழம் கூடி வெட்டி மனிதரை போலே" என சீறியிருக்கின்றான், திடீரென "நல்லதோர் வீணை செய்தே, சொல்லடி சிவசக்தி" என கதறி இருக்கின்றான்

ஒரு கணம் அவன் இடத்தில் இருந்து நினையுங்கள் அந்த ஞான ஒளி காற்றில் ஆடிய கோலம் தெரியும் , அந்த சிங்கத்தின் வலியும் வேதனையும் புரியும். நல்லவர்களும் ஞானிகளும் வாழும் பொழ்தை விட காலமான பின்பே விஸ்வரூபமெடுப்பார்கள் அந்த தென்னக ஞான வீணை நலங்கெட புழுதியில் எறியபட்டாலும் அதன் இன்னிசை எந்நாளும் இந்நாட்டில் கேட்டுகொண்டே இருக்கும்.நாட்டிற்காகவும், இச்சமூகத்திற்காகவும் ஒலித்த வீனை அது , தமிழ்சமூகத்தின் அறிவுடை மகனுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள், மாபெரும் தேசபற்றாளனுக்கு "பாரத தேசமென்று பெயர் சொல்லுவார்.." என்ற அவரின் வரிகளுடன் அஞ்சலிகள்

பாரதியின் மனைவி செல்லம்மாள் ஒரு பேட்டியில் சொன்னார் , "அவர் ஒரு யுகபுருஷன் என்பது எனக்கு பின்னர்தான் தெரிந்தது, ஒரு யுகபுருஷனுடன் வாழ்ந்திருக்கின்றேன் என்பதை விட என்ன பெருமை வேண்டும்" ஆம் பாரதி பிறந்த மண்ணில் பிறந்தோம், அவன் பேசிய பேச்சினை பேசினோம் என்பதைவிட என்ன பெருமை வேண்டும். பாரதியில் கரைந்தோரெல்லாம் தேசியம் பேசினார்கள், ஜெயகாந்தன் பேசினார், கண்ணதாசன் பேசினார், எல்லோரும் பேசினார்கள், இத்தேசத்தில் எங்கெல்லாம் தேசியம் பேசபடுமோ அங்கெல்லாம் மூல முதல்வராக பாரதி நிற்பார் அவரின் வரி அவரை விட முந்தி கொண்டு நிற்கும். அதுதான் நம் பாரதியின் வெற்றி, அவன் வணங்கிய காளி கொடுத்த தனிபெரும் வெற்றி, எக்காலமும் இங்கு கவிராஜனாய் அவன் நிலைத்து நிற்கும் வெற்றி. தேசத்தை மனமார நேசிப்பவர்கள், இந்துமதத்தை தன் மனமார நேசிப்பவர்கள் காலம் காலமாய் இங்கு நிலைப்பார்கள் எனப்தற்கு, தன் திறமையினை நாட்டுக்கும் மதத்துக்கும் கொடுத்த ஒருவன் எக்காலமும் நிலைப்பான் என்பதற்கு தெய்வம் கொடுத்த ஒரு பெரும் சாட்சி பாரதியார்.. பாரதியைப் படிக்காமல் தேசபற்று வராது, நல்ல தமிழ் கவிதை வராது, பாடல் வராது. தேசியமோ தமிழோ எதுவுமே உருப்படியாக வராது. பாரதியினை படித்தோரெல்லாம் இங்கு மாபெரும் அறிவுசுடராய் தேசியவாதிகளாய் மாபெரும் கலைஞர்களாய் ஜொலித்தார்கள். அது சுஜாதா, ஜெயகாந்தன்,பாலசந்தர் என பெரும் வரிசை. அந்த ஞானத்தமிழன் பெயர் அவன் நடமாடிய சென்னை கடற்கரைக்கு சூட்டபட வேண்டும், அவனை உருவாக்கிய ஞானபூமியான காசியில் அவனுக்கோர் பெரும் சிலை வேண்டும்

"தண்ணீர் விட்டா வளர்த்தோம் ? சர்வேசா இப்பயிரைக்

கண்ணீரால் காத்தோம்" என தேசியத்தை காக்க அவன் இங்கு வேண்டும்

"மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையினை கொளுத்துவோம்" என பெண்ணுரிமை காக்க அவன் வேண்டும்

"பாரத தேசமென்று பெயர் சொல்லுவார் - 

மிடிப் பயங்கொல்லு வார்துயர்ப் பகைவெல்லுவார" என முரசு கொட்ட அவன் வேண்டும்

"சொல்லுக் கடங்காவே-பரா சக்தி    சூரத் தனங்க ளெல்லாம்;    வல்லமை தந்திடுவாள்-பரா சக்தி வாழியென்றேதுதிப்போம்" என ஆன்மீகத்தை துணிச்சலாய் பேச அவன் வேண்டும்.

"மோதி விளையாடு பாப்பா.. " என அடுத்த தலைமுறையினை கைபிடித்து அழைத்து செல்ல அவன் வேண்டும்

"சுற்றி நில்லாதே போ!-பகையே!

துள்ளி வருகுது வேல்." என பாட அவன் வேண்டும் 

பாரதம் பாரதமாக வாழவும், தமிழகம் ஞான பூமியாய் பாரதத்துக்கு வழிகாட்டி நிற்கவும் அவன் இங்கு வேண்டும் , எக்காலமும் எங்கள் பெருமைக்குரிய பாரதி வேண்டும்

( பாரதியின் உண்மையான படம் இது, நன்றாக பாருங்கள் அவர் நெற்றியில் விபூதியும் குங்குமமும் இருக்கும்.) திலகம் இன்றி வெளிவரமாட்டார் பாரதியார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த