இரவல் கட்சிக்கு பெயர்மாற்றம் செய்த மக்கள் சேவை கட்சி

ரஜினிகாந்தின்  ‘மக்கள் சேவை கட்சி’ அலு

வலகமாக சென்னை எர்ணாவூர் ரசிகர் மன்ற நிர்வாகியின்  முகவரியில் உள்ளது.கடந்த 2019 ஆம் ஆண்டில் பதிவு செய்த  அரசியல் கட்சியை அதன் நிர்வாகிகளிடம் பேசி நடிகர் ரஜினிகாந்த் பெற்று பெயர் மாற்றம் செய்ததாகத்  தெரிகிறது. அரசியல் கட்சி  மேற்பார்வை யாளராக தமிழருவி மணியன், தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுனமூர்த்தி ஆகியோர்   நியமித்த

ரஜினியின் அறிவிப்புக்குப் பின் புதிய கட்சி  குறித்து தலைமை தேர்தல் ஆணை யத்தில் ரஜினி விண்ணப்பித்தாரா என்ற வினா வந்த சூழலில்

புதிய அரசியல் கட்சி தொடங்குவது குறித்து டெல்லி பிரபல வழக் கறிஞரிடம் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தி டெல்லி டாக்டர் அப்துல் கலாம் சாலையாக மாற்றமான பழைய ஔவுரங்கசீப் சாலையிலுள்ள பங்களாவில் ஆலோசித்து     ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் குறித்து  முடிவான பிறகு டெல்லியின் இருதயப் பகுதியில் உள்ள இந்த பங்களா அவருக்காக வாங்கப்பட்டதாகவும் தெரிகிறது.

 ‘‘புதிதாக அரசியல் கட்சி பதிவு செய்வதில் அமைப்புச் சட்டம், துணை விதிகள்  மற்றும்  சுமார் 300 பக்கத்துக்கு சமர்ப் பிக்கப்படும் நிர்வாகிகளின் பிரமாணப் பத்திரங்களில் அவர்களின் சொத்து விபரம்  உள்ளிட்டவைகள் தாக்கல் செய்யப்பட வேண்டுய சூழ்நிலை உள்ளதால் சிவாஜி படப் பாணியில் "நீங்க வந்தாமட்டும் போதும் ,வாங்க பழகலாம்" எனபது போல  ஏற்கெனவே பதிவு செய்துள்ள ஒரு கட்சியைப் வாங்கி பெயர் மாற்றம் செய்வதெளிது என்பதால், அந்த வழியை நாடியதாகவும் தகவலிது முன்கூட்டியே வெளியில் வந்துவிடக் கூடாது என்பதற்காக தனது நம்பிக்கைக்குரிய மகாராஷ்டிராவின் வழக்கறிஞர்  ஒருவர் இதற்கான பணியில் அமர்த்தி 2018 ஆம் ஆண்டு  இறுதியில், ‘அனைத்திந்திய மக்கள் சக்தி கழகம்’ எனும் பெயரில் பதிவான ஒரு அரசியல் கட்சியின் நிர்வாகிகளிடம் அந்த வழக்கறிஞர் பேச்சுவார்த்தை நடத்தி இப்போது மக்கள் சேவை கட்சியாக மாறியது.

ஒரு கட்சி பதிவாகி அதன் பெயர் அல்லது நிர்வாகிகளை மாற்ற குறைந்தது ஒரு வருடம் அவகாசமாவது ஆகும் ஆகவே சிலரை நிர்வாகிகளாகப் போட்டு, கட்சியின் பெயரை ‘மக்கள் சேவை கட்சி’ என மாற்றியதன் தலைவராக எஸ்.பி.ஜேம்ஸ், பொதுச்செயலாளராக ஆண்டனி ஜோ ராஜா, பொருளாளராக மரியா ஜான் அகஸ்டின் ஆகியோர் இவர்கள் அனைவரும் தூத்துக்குடி மாவட்ட ரஜினி மக்கள் மன்றச் செயலாளராக இருந்த ஏ.பி. ஜோசப் ஸ்டாலின் குடும்பத்தினராகும் இவர் பல வருடங் களுக்கு முன்பு தூத்துக்குடியிலிருந்து மகராஷ்டிராவுக்கு புலம் பெயர்ந்து அங்கு சுரங்கம் உள்ளிட்ட பல தொழில்களைச் செய்து வந்தவருடன் பணியாற்றிய ஜோசப் ஸ்டாலின்,  கோடீஸ்வரராகும்.

அவ்வப்போது தூத்துக்குடிக்கு வந்து ரஜினி ரசிகர் மன்றத்தின் பொறுப்பு களையும்  கவனித்து வருவதாகத் தெரிகிறது. நிர்வாகிகள் பட்டியலில் ரஜினியின் பெயர் இடம் பெறவில்லை. மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூட அதன் நிர்வாகிகள் பட்டியலில் தனது பெயரை குறிப்பிடவில்லை என்பதும் இங்கே  கவனிக்கப்பட. வேண்டியதாகும்.

மக்கள் சேவை கட்சியின் 2018-19 ஆண் டுக்கான வரவாக குறிப்பிடப்பட்ட தொகை  ரூபாய் .34 ஆயி ரத்தைச்  செலவாக தேர்தல் ஆணையத்திடம் ஆடிட் ரிப்போர்ட்டாகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதியில் பெயர் மாற்றப்பட்டதாகச் செய்தி மக்கள் சேவை கட்சியின் அலுவலக முகவரியாக சென்னை எர்ணாவூர் பாலாஜி நகர் ஜோசப் ஸ்டாலின் வீட்டு முகவரி உள்ளது. மக்கள் சேவை கட்சிக்கு ஆட்டோ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது  பொதுச் சின்னங்கள் பட்டியலில் உள்ளது. இக் கட்சி இச்சின்னத்தில் போட்டியிட்டு குறைந்தது 6 தொகுதிகளில் வெற்றியோ அல்லது பதிவாகும் மொத்த வாக்குகளில் 5 சதவீத வாக்குகளைப் பெற்றால் மட்டுமே  அவரது கட்சிக்கு ஆட்டோ சின்னம் நிரந்தரமாகும். முன்பே பதிவான கட்சியை ரஜினி பேசி பெறுகிறார் என்ற செய்தி ஊடகங்களில் கசிந்ததையடுத்து ரஜினி மக்கள் மன்றம் சார்பில் நேற்று ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மன்றத்தின் நிர்வாகி வி.எம்.சுதாகர் பெயரில் வெளியான அந்த அறிக்கையில்,

‘இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையை மேற்கோள் காட்டி அதில் இடம்பெற்றிருந்த ஒரு கட்சியின் பெயரும், சின்னமும் ரஜினி மக்கள் மன்றத்தினுடையது என்று சில ஊடகங்கள் செய்தி

வெளியிட்டுள்ளன. தலைமையிலிருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரும் வரை நம் ரஜினி மக்கள் மன்றக் காவலர்கள் காத்திருக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊடக செய்திகளை மறுக்காமல், தலைமையிடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை காத்திருக்கும்படி மட்டும் அறிக்கையில் வேண்டுகோளாக விடப்பட்டுள்ளது. எனவே, நடிகர்  ரஜினிகாந்த்  கூறியபடி டிசம்பர் 31 க்கு முன்பாகவே அவரது கட்சியின் பெயர் குறித்த விவரங்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா