சுற்றுச்சூழல் துறை உதவிப் பொறியாளர் தன்ராஜ் வீட்டிலிருந்து கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுக்கள் பறிமுதல்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் துறை உதவிப் பொறியாளர் தன்ராஜ் வீட்டிலிருந்து கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுக்கள் பறிமுதல்.

இலஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் லஞ்சப்பணம் ₹ 62 லட்சம் சிக்கியுள்ளது.ரூபாய்.40 ஆயிரம் இலஞ்சம் வாங்கியபோது பிடிபட்டார்.

திருவாரூர் மாவட்டம் விளமலை பகுதியைச் சேர்ந்த  அரிசி ஆலை ஒன்றில், காற்று மற்றும் நீர் உரிமத்தைப் புதுப்பிக்க அதன் உரிமையாளர் துரைசாமி மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் மனு அளித்திருந்தார். இந்த மனு மீது புதுப்பிக்கச் சான்றிதழ் வழங்காமல் நீண்ட நாட்களாக இழுத்தடித்து வந்ததாகவும், ரூபாய் 40 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் புதுப்பித்து  தருவதாக தன்ராஜ் தெரிவிக்கவே இது குறித்து அரிசி ஆலையின் உரிமையாளர் துரைசாமி, திருவாரூர் மாவட்ட இலஞ்ச ஒழிப்புத் துறையில்  புகார் அளித்ததன் பேரில் ஊழல் தடுப்புத் துறை  அறிவுரையின்படி பினாப்தலின் இரசாயன பொடி தடவிய நோட்டுகளாக ரூபாய். 40 ஆயிரத்தை நேற்று மாலை அந்த  அரிசி ஆலைக்கு வந்த பொறியாளர் தன்ராஜ் பெற்ற போது, அங்கு மறைந்திருந்த இலஞ்ச ஒழிப்புத்துறை  துணைக் கண்காணிப்பாளர் நந்தகோபால் மற்றும் ஆய்வாளர்  தமிழ்ச்செல்வி தலைமையிலான ஊழல் தடுப்புத் துறையினர் அவரை  கையும் களவுமாகப் பிடித்துக் கைது செய்தனர்.

அரிசி ஆலையில் இலஞ்சம் பெற்றபோது திருவாரூரில் பிடிபட்ட அவரது  வீட்டில் நடந்த சோதனையில் கணக்கில் வராத 3 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது நாகை ஆண்டோ சிட்டி பகுதியில் உள்ள பொறியாளர் தனராஜ் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் ரமேஷ் குமார் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில் 3 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா