வேளாண் அமைச்சர் தோமர் கடிதம் படிக்க பிரதமர் வேண்டுகோள்மத்திய வேளாண்மை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், விவசாய சங்கங்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தை சுட்டிக்காட்டி பிரதமர் மோடி ட்வீட் பதிவிட்டுள்ளார்.. அதில், தொடர்புடைய அனைவரும் இதனை படிக்க வேண்டும் என்றும், நாட்டு மக்கள் இதனை அனைவருக்கும் சென்றடைய செய்ய வேண்டும்" என்றும் வேண்டுகோள் தோமர் லெட்டரை எல்லோரும் படிங்க.. அனைவருக்கும் அது போக வேண்டும்.. மோடி விடுத்த வேண்டுகோள் மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், விவசாய சங்கங்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தை சுட்டிக்காட்டி பிரதமர் மோடி ட்வீட் பதிவிட்டுள்ளார்.. அதில், தொடர்புடைய அனைவரும் இதனை படிக்க வேண்டும் என்றும், நாட்டு மக்கள் இதனை அனைவருக்கும் சென்றடைய செய்ய வேண்டும்" என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார். எனது குடும்பமும் விவசாய குடும்பம் தான்.. விவசாயிகளுக்கு உருகி, உருகி… அமைச்சர் கடிதம்..!புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரி பஞ்சாப், ஹரியானா பகுதிகளில் விவசாயிகளின் போராட்டம் வலுவாகி வருகிறது.. டெல்லி எல்லை பகுதிகளில் இன்று 23-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளின் இந்த போராட்டத்தினால், சிங்கு, திக்ரி, காஜிபூர் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது.. நேற்றும் இங்கு டிராபிக் பாதிப்பு ஏற்படவும், டெல்லியில் நுழைய லம்பூர், சோபியாபாத் உள்ளிட்ட மாற்றுப் பாதைகளை பொதுமக்கள் பயன்படுத்தினர்.. இருந்தாலும் அந்த மாற்றுப் பாதைகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது, விவசாயிகளுடன் மத்திய அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி, ஒரு சுமூக முடிவுக்கு கொண்டு வர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.. அதன் ஒரு பகுதியாக, மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், விவசாய சங்கங்களுக்கு நேற்று ஒரு லெட்டர் அனுப்பியிருந்தார்.. அதில் "குறைந்தபட்ச ஆதார விலை குறித்து எழுத்துப்பூர்வமாக உறுதியளிக்க மத்திய அரசு தயாராக உள்ளது.. விவசாயிகளின் முன்னேற்றத்துக்காக கடந்த 6 ஆண்டு கால மோடி ஆட்சியில் எண்ணற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. குறைந்தபட்ச ஆதார விலை மற்றும் மண்டி விவகாரத்தில் பொய்கள் பரப்பப்படுகின்றன... நானும் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவன் தான். அதனால் அவர்கள் படும் துயரத்தை குழந்தை பருவத்தில் இருந்தே அறிவேன்... விவசாயிகள் மத்தியில் பதற்றத்தை உருவாக்கும் வகையில் காங்கிரஸ் செயல்படுகிறது... குறைந்தபட்ச ஆதார விலை தொடரும்.. பொய்களை விவசாயிகள் நம்ப வேண்டாம்.சில விவசாய சங்கங்கள் மட்டுமே வதந்திகளையும் தவறான தகவல்களையும் பரப்பி வருகின்றன. ரயில்வே தண்டவாளங்களில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன்காரணமாக எல்லையில் நாட்டை காக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் நமது வீரர்களுக்கு உணவு பொருட்களை அனுப்ப முடியவில்லை" என்பன உட்பட பல்வேறு விஷயங்களை அதில் அமைச்சர் குறிப்பிட்டு இருந்தார்.மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் வெளியிட்டிருந்த இந்த 8 பக்க அறிக்கையை சுட்டிக்காட்டி, பிரதமர் மோடி ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார்.. அதில், தனது உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக நரேந்திர சிங் தோமர் விவசாய சகோதர, சகோதரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார்... கனிவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். தொடர்புடைய அனைவரும் இதனை படிக்க வேண்டும்... நாட்டு மக்கள் இதனை அனைவருக்கும் சென்றடைய செய்ய வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா