கேரளத்தில் மகன்களால் கொடியேரி பாலகிருஷ்ணனுக்கு வந்த துன்பம்

கேரளத்தில்

மகன்களால் கொடியேரி பாலகிருஷ்ணனுக்கு வந்த துன்பம். இரண்டு மகன்களின் தனிப்பட்ட நடவடிக்கையால் பதவி விலகும் முடிவுக்கு தள்ளப்பட்டவர், கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராண கொடியேரி பாலகிருஷ்ணன். தான் வகித்த பதவியிலிருந்து தற்காலிகமாக விலகிய பின் உடல்நிலை சரியில்லை எனக் கூறி விலகல் கடிதம் கொடுத்ததையடுத்து, இடைக்காலத் தலைவராக விஜயராகவன்  அறிவிக்கப்பட்டார் கேரள சி.பி.எம் மாநிலச் செயலாளராக 2015 ஆம் ஆண்டில்  முதலாவதாகப் பதவியேற்ற பின் இரண்டாம் முறையாக 2018 ஆம் ஆண்டு  மீண்டும் மாநிலச் செயலாளரானார்.அதிக செல்வாக்கு மிகுந்த நபராக வலம் வந்தவர் 2015 ஆம் ஆண்டில் சி.பி.எம் மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், பினராயி முதல்வரானதற்குப் பின்னால் இருக்கும் இவரின் பங்கு பெரியது.  பினாரயுடன் அதிக நெருக்கமானவராதலால்.  2018 ஆம் ஆண்டில் மீண்டும் மாநிலச் செயலாளர். உடல்நிலை காரணமாக பதவி விலகியிருக்கிறார் சில நாட்களாக கொடியேரியையும், அவரின் குடும்பத்தையும் சுற்றி என்ன நடக்கிறது என்பது எல்லோருக்கும் நன்றாகவே தெரியும். இது அனைத்தும் அவரின் மகன்களால் வந்தது  தொடர் சோதனைகளைச் சந்தித்தும் வருகிறார்.

கொடியேரி பாலகிருஷ்ணன் - வினோதினிக்கு இரண்டு மகன்களில் ஒருவர்  பினோய் கொடியேரி, மற்றொருவர் பினிஷ் கொடியேரி. இருவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை என்பதுபோல, வழக்குகளில் மாட்டிக்கொண்டு தந்தையின் பெயருக்கு களங்கம் விளைவித்து வருகிறார்கள். இதில் முதலில் சிக்கலை தந்தவர், கொடியேரியின் இரண்டாவது மகன் பினோய் கொடியேரி.

கேரள  முதலமைச்சர் பினராயி விஜயனுக்குப் பிறகு சி.பி.எம் கட்சியில் இரண்டாவது தலைவரும் கேரள சி,.பி.எம் மாநிலச் செயலாளருமான கோடியேரி பாலகிருஷ்ணன் உடல்நலப் பிரச்சினைகளை சுட்டிக்காட்டி தனது பதவியில் இருந்து விலகினார். அவருடைய பதவி சி.பி.எம் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணியின் (எல்.டி.எஃப்) ஒருங்கிணைப்பாளர் விஜயராகவனுக்கு தற்காலிகமாக வழங்கப்பட்டுள்ளது.

பெங்களூருவில் போதைப் பொருள் வழக்கில் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு நிதியளித்த குற்றச்சாட்டில் அவரது இளைய மகன் பினீஷ் கோடியேரி அமலாக்கத்துறை இயக்குநரகத்தால் கைது செய்யப்பட்டதையடுத்து, பாலகிருஷ்ணன் கட்சியின் மாநிலச் செயலாளர் பதவியிலிருந்து விலகிய நிலையில்  சிறப்பு நீதிமன்றம் பினீஷின் ஜாமீன் மனுவை நிராகரித்த நவம்பர் 25ம் தேதி வரை அவர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டதால் 

கேரளாவில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கு முன்னோட்டமாக கருதப்படும் டிசம்பர் மாதம் நடைபெற உள்ள 1200 உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலுக்கு முன்னதாக, கொடியேரி பாலகிருஷ்ண பதவி விலகியிருப்பது, அவருடைய மகன் போதைப் பொருள் வழக்கில் கைதாகியிருப்பதும்.

சில ஆண்டுகளுக்கு முன் துபாயில் இருந்த பினோய், அங்கு குடிப்பதற்காக பாருக்கு செல்வது வழக்கம். தினமும் அங்கு செல்லும்போது, அங்கு டான்சராக இருந்த இளம்பெண்ணுடன் பழகி, அவருடன் தனிக்குடித்தனம் நடத்தியுள்ளார். இதில் இருவருக்கும் குழந்தை பிறந்ததாக கூறப்படுகிறது. இந்தக் குழந்தைக்கு தற்போது 10 வயதாகும் நிலையில், அந்தப் பெண்ணை பினோய் ஏமாற்றிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. சம்பந்தப்பட்ட அந்தப் பெண் பீகாரைச் சேர்ந்தவர் என்பதால் சென்ற ஆண்டு இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. சம்பந்தப்பட்ட பெண் டி.என்.ஏ பரிசோதனைக்கு தயாராக இருக்கிறேன் எனக் கூற, பினோய் தலைமறைவானார். இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் குடைச்சல் மேல் குடைச்சலாக கொடுத்து கொடியேரியை ஒருவழி பண்ணியது.

எனினும், ``என் மகன் பினோய் தனிக் குடித்தனமாக வாழ்கிறார். நான் தினமும் அவனை கண்காணிக்கவில்லை. அப்படி கண்காணித்திருந்தால் இதுபோன்ற பிரச்சனை ஏற்பட்டிருக்காது. பாலியல் புகாருக்கு பின் என் மகனை நான் சந்திக்கவில்லை. அவன் தனியாக இந்த வழக்கை சந்தித்து வருகிறான். அதனால் கட்சிக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பினோய் வழக்கில் சமரசம் பேச யாரும் முயற்சி செய்யவில்லை. இது சம்பந்தமாக எந்த உதவியும் நான் செய்யமாட்டேன் என்று என் மனைவியிடம் தெரிவித்துவிட்டேன்" என்று ஸ்டேட்மென்ட் விட்ட பின்பு தான் இந்த விவகாரம்  ஓய்ந்தது. இதற்கிடையே, இதே பினோய் பண மோசடி வழக்கில் ஒன்றில் சிக்கியது தனிக்கதை!

இந்த விசாரணையின்போது பினீஷ்க்கு பணம் கொடுத்த விவகாரத்தை சொல்ல, அமலாக்கத்துறை பினீஷை கொத்தாக தூக்கி விசாரித்த விசாரணைக்கிடையே,  பினீஷை அதிரடியாக கைதும் செய்து சிறையில் அடைத்தது அமலாக்கத்துறை. இந்த நிலையில்தான், கொடியேரி பாலகிருஷ்ணன் தனது பதவியில் இருந்து விலகினார்.  கேரள முதல்வர் பினராயி விஜயன் 17 ஆண்டுகளாக கட்சியின் செயலாளராக இருந்த போது ஒருமுறை கூட கட்சியின் பொறுப்பு அவரது கட்சியின் சக ஊழியர்களுக்கு வழங்கப்படவில்லை. அதேபோல் கொடியேரி 2019 ஆம் ஆண்டு  அக்டோபர் மாதம்  அமெரிக்காவுக்குச் சென்றிருந்தார், ஆனால் அவர் இல்லாத நேரத்தில் வேறு யாரையும் மாநிலச் செயலாளராக நியமிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா