வக்கீல் மீது தாக்குதல்; திருச்சியில் ஓடும்போதே விரட்டி வெட்டிய கும்பல்


வக்கீல் மீது தாக்குதல்; திருச்சியில் ஓடும்போதே விரட்டி வெட்டிய கும்பல்! 

திருச்சிராப்பள்ளி மாவட்டம் அல்லிதுறைய்ச் சேர்ந்தவர் சந்தர். இவர் திருச்சி நீதிமன்றத்தில் வக்கீலாக உள்ளார் தென்னூர் உக்கிர காளியம்மன் கோவிலருகே  இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்த போது டாட்டா சுமோ காரில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல்  ஆயுதங்களுடன் வக்கீல் சந்தரைத் தலையில் வெட்டியதால் அங்கிருந்து ஓடிய சந்தரை கை, முகத்தில் வெட்டிய கும்பல்  அலறியபடியே சந்தர் ஓடியதைக் கண்ட பொதுமக்கள் அந்தப் பகுதியில் கூடியிருக்கிறார்கள் எனவே  பொதுமக்கள் பிடித்துவிடுவார்கள் எனும் பயத்தில்  மர்மக் கும்பல் டூ வீலர், காரில்  தப்பியது.

பின் படுகாயமடைந்த சந்தர் மீட்கப்பட்டு தென்னூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இது குறித்து தகவல் அறிநது வந்த தில்லைநகர் காவல்துறை  வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள் வக்கீல்  சந்தரை வெட்டியவர்களைக் கைது செய்யக் கோரி,  ஆதரவாளர்கள் மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். காவல்துறை  பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டது. சம்பவம் நடந்த பகுதியிலுள்ள சிசிடிவி காட்சிகளைக்கொண்டு காவல்துறை  விசாரணை நடத்திவருகின்றனர்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா