நடிகை விஜயசாந்தி பாஜக வில் இணைந்தார்
நடிகை விஜயசாந்தி 1966 சூன் 24 ல் சென்னையில்  வரலட்சுமிக்கும் சீனிவாச பிரசாத்துக்கும்  ஆந்திரா கோதாவரி மாவட்டம் ராஜமுந்திரியில் பிறந்தவர் ஆந்திராவின் வாராங்கல் மாவட்டத்தில் ராமாங்குடம் பகுதியில் தற்போது தெலுங்கானாவில் வாழ்ந்து வருகிறார். திரைப்படங்களில் நடிக்கத் தொடங்குவதற்கு முன்பு சென்னையில் ஹோலி ஏஞ்சல்ஸ் உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பை பூர்த்தி செய்தார். ஆந்திராவைச் சேர்ந்த எம். வி. சீனிவாச பிரசாத் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

அண்மையில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவை டெல்லியில் விஜயசாந்தி சந்தித்ததையடுத்து காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் அவர் இணைய  மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷண் ரெட்டியை  சந்தித்துப் பேசியதையடுத்து இன்று பாஜகவில் முறைப்படி இணைந்தார்.

டெல்லி பாஜக அலுவலகத்தில் மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டி, தெலங்கானா மாநில பாஜக தலைவர் சஞ்சய் பந்தி உட்பட கட்சியின் மூத்த தலைவர்கள் முன்னிலையில் அவர் இணைந்தார். முன்னதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை விஜய சாந்தி சந்தித்தார்.                தமிழ், தெலுங்கு  மொழிகளில் ஆக்ஷ்ன் ஹீரோயினாக நடித்துப் பிரபலமானவர் நடிகை விஜயசாந்தி. அதன்பின் அரசியலில் நுழைந்தவர் 'தல்லி தெலங்கானா' என்னும் தனிக்கட்சியை தொடங்கினார். பின் கலைத்துவிட்டு பாஜகவில் இணைந்து பின் விலகி தெலுங்கானா ராஷ்டிரீய சமிதியில் இணைந்தார்.  கட்சியின் தலைவர் சந்திரசேகர் ராவிற்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால்  டிஆர்எஸ் கட்சியிலிருந்து  விலகி காங்கிரஸ் கட்சியின் பிரச்சாரகஹ குழுத் தலைவராக செயல்பட்ட நிலையில் சமீபத்தில் மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷண் ரெட்டியை சந்தித்து இரு முறை பேச்சு வார்த்தை நடத்திய நிலையில் இன்று டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா