காங்கிரஸ் கட்சி முன்னாள் பொருளாளர் மோதிலால் வோரா காலமானார்.

நேற்று பிறந்த நாள் கொண்டாடிய  காங்கிரஸ் கட்சி முன்னாள் பொருளாளர் மூத்த தலைவர்  மோதிலால் வோரா  இன்று  காலமானார்.


தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு  உறுப்பினர் சேர்க்கையின் போது  மேலிட பார்வையாளராக கலந்து கொண்டபோது மறைந்த தலைவர் வாழப்பாடியாரின் பணியினை நினைவுகூர்ந்து பேசினார்.        காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மோதிலால் ஓரா உடல் நலக் குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 93.

கொரோனாவிலிருந்து மீண்டு, அதன் தொடர் பாதிப்புகளால், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மோதிலால் ஓரா இன்று காலமானார்.

கடந்த சில நாள்களுக்கு முன்பு சிறுநீரக தொற்று காரணமாக ஓக்லாவிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவருக்கு நுரையீரல் தொற்று ஏற்பட்டதால் செயற்கை சுவாசக் கருவியின் உதவியோடு சிகிச்சை பெற்று வந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

மருத்துவமனையிலிருந்து அவரது உடல் இல்லத்துக்குக் கொண்டு வரப்பட்டதும் இன்று மாலை அல்லது நாளை சட்டீஸ்கரில் தகனம் செய்யப்படும் என்றும் குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா