நகர் ஊரமைப்புத்துறை துணை இயக்குநர் அலுவலகத்தில் சோதனையில் சிக்கியது ரூ ஒரு இலட்சம்


சிவகங்கை நகர் ஊரமைப்புத் துணை இயக்குநர் அலுவலகத்தில் இலஞ்ச ஒழிப்புத் துறை  சோதனை  கணக்கில் வராத ரூபாய்.ஒரு லட்சம் பணம் பறிமுதல்  தொடர்ந்து பல புகார்கள் வந்த

நிலையில் நேற்று  மாலை இலஞ்ச ஒழிப்புத்துறை துணைக் கண்காணிப்பாளர்  கருப்பையா தலைமையில் ஆய்வாளர்கள்குமாரவேல், சந்திரன், உதவி ஆய்வாளர்  ராஜாமுகமது உள்ளிட்டோர் சோதனையில் ஈடுபட்டனர்.

நகர் ஊரமைப்புத் துறை  அலுவலகத்திற்குள் இலஞ்ச ஒழிப்புத் துறையினர்  நுழைந்ததும், உள்ளே இருப்பவர்களை வெளியே செல்லவிடாமல் கதவு பூட்டப்பட்ட து பின் அவர்களிடமிருந்த மொபைல் தொலைபேசிகளையும் பறிக்கப்பட்டது. துணை இயக்குநர் மற்றும் ஊழியர்களின் இருக்கைகளில் சோதனையிட்டதில் துணை இயக்குநர் அறையில் இருந்து மட்டும்  கணக்கில் வராத ரூபாய் ஒரு இலட்சம்  பணத்தைப் பறிமுதல் செய்து அவர்களிடம் இரவு வரை விசாரணை நடத்தினர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா