ஏஎஸ்சிஐ வழிகாட்டுதல்களை பின்பற்ற தனியார் டி.வி சேனல்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்.
 தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

ஆன்லைன் மற்றும் கற்பனை விளையாட்டு பற்றிய விளம்பரங்களை வெளியிடும்போது, இந்திய விளம்பர தர நிர்ணய குழு(ஏஎஸ்சிஐ) வழிகாட்டுதல்களை பின்பற்ற தனியார் டி.வி சேனல்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்.

ஆன்லைன் மற்றும் கற்பனை விளையாட்டு தொடர்பான விளம்பரங்களை வெளியிடும்போது, ‘இந்திய விளம்பர தர நிர்ணய குழு’ வழங்கியுள்ள வழிகாட்டுதல்களை பின்பற்றும்படி, அனைத்து தனியார் டி.வி ஒலிபரப்பாளர்களை, மத்திய தகவல் மற்றும் ஒலிரப்புத்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

தடை செய்யப்பட்ட எந்த நடவடிக்கையையும், விளம்பரங்கள் ஊக்குவிக்க கூடாது என மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

ஆன்லைன் மற்றும் கற்பனை விளையாட்டுக்கள் குறித்த விளம்பரங்கள் தனியார் டி.வி.க்களில் வருவது மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், இது தவறான பாதைக்கு வழிவகுக்கும் எனவும், இதனுடன் தொடர்புடைய நிதி உட்பட இதர அபாயங்கள் வாடிக்கையாளர்களுக்கு சரியாக தெரிவிக்கப்படவில்லை எனவும் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேபிள் டி.வி ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் உள்ள விளம்பர விதிமுறைகளையும், நுகர்வோர் பாதுகாப்பு சட்ட விதிமுறைகளும் சரியாக பின்பற்றப்படவில்லை என மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவுறுத்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் விவகாரத்துறை, இந்திய விளம்பர தர நிர்ணய குழு, நுகர்வோர் அமைச்சகம், அகில இந்திய விளையாட்டு கூட்டமைப்பு, கற்பனை விளையாட்டு கூட்டமைப்பு, ஆன்லைன் ரம்பி கூட்டமைப்பு அதிகாரிகளிடம் ஆலோசித்து இந்த ஆலோசனையை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் வழங்கியுள்ளது.

கற்பனை விளையாட்டுகள் குறித்த விளம்பரங்களில், கீழ்கண்ட தகவல்களை சேர்க்க வேண்டும் என அகில இந்திய விளம்பர தர கவுன்சில் விதிமுறையில் உள்ளது:

‘‘இந்த விளையாட்டில், நிதி அபாயம், அடிமையாவதற்கான வாய்ப்பு ஆகியவை உள்ளது. எனவே, தயவு செய்து பொறுப்புடன்  விளையாடுங்கள்’’ என்ற எச்சரிக்கை தகவலும் விளம்பரத்தில் 20 சதவீதம் இடம் பெற வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா