மத்திய அரசின்
வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் பல்வேறு மாநில விவசாயிகளின் அமைப்பு நவம்பர் மாத இறுதியிலிருந்து தொடர் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். அரசுடன் விவசாய சங்கங்கள் பல கட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று சுமூகத் தீர்வு எட்டப்படவில்லை. தங்களது கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தை விவசாயிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.அடுத்தகட்ட பேச்சுவார்த்தை டிசம்பர் 9 ஆம் தேதி நடைபெறும் நிலையில் டிசம்பர் 8 ஆம் தேதி இந்தியாவில் முழு அடைப்பிற்கு விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளதையொட்டி டெல்லியின் சிங்குவா, அவுசாண்டி, பியா மனியாரி, மங்கேஷ் எல்லைகள் மூடப்பட்டுள்ளன. தேசிய நெடுஞ்சாலை 44 ன் இருபுறமும் மூடப்பட்டதற்குப் பதிலாக லாம்பூர், சஃபியாபாத், சபோலி எல்லைகள் வழியாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.முகர்பா, ஜி.டி.கே சாலைகளில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அவுட்டர் ரிங் ரோடு, ஜி.டி.கே சாலை, தேசிய நெடுஞ்சாலை 44 உள்ளிட்ட சாலைகளைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விவசாயிகள் குழுப் போராட்டத்திற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், இடதுசாரித் தலைவர்கள் சீதாராம் யெச்சூரி, டி.ராஜா உள்ளிட்ட 11 கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில்
நாளை டிசம்பர் 8 நடைபெறும் பாரத் பந்திற்கு தங்களது ஆதரவை முழு மனதுடன் அளிப்பதாக குறிப்பிட்டுள்ளனர். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள கூட்டறிக்கையில், புதிய வேளாண் சட்டங்கள் இந்தியாவின் உணவு பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கிறது. நாட்டின் ஒட்டுமொத்த விவசாயத்தையும், விவசாயிகளையும் அழித்துவிடும்.
எனவே விவசாய அமைப்புகள், வணிகர் சங்கங்கள், தொழிற்சங்கங்கள், அரசு அலுவலர் சங்கங்கள், சமூக நல அமைப்புகள் மற்றும் அனைத்து தரப்பு மக்களும் அமோக ஆதரவளித்து பாரத் பந்த்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் சிவசேனா, திரிணாமூல் காங்கிரஸ், தெலங்கானா ராஷ்டிரிய சமிதி, அகாலி தளம், ஆம் ஆத்மி கட்சி, அசாமின் அஸாம் கன பரிஷத், ராஜஸ்தானின் ராஷ்டிரிய லோக்தந்திரிக் கட்சி உள்ளிட்டவையும் ஆதரவு அளித்துள்ள சூழ் நிலையில். மிகப்பெரிய உழவர் எதிர்ப்பு தளமான சிங்கு எல்லையில் கோவிட் -19 பாதிப்புக் கவலையாகும். சோனிபட் நிர்வாகம் சில அறிகுறிகளைக் காட்டிய போதிலும், சோதனையிட மறுக்கிறார்கள், சுமார் 40 பேர் அதிகக் காய்ச்சலுடன் உள்ளனர். முகமூடிகள் விநியோகிக்கப்பட்டன, ஆனால் யாரும் அதை அணியவில்லை, அபராதமும் விதிக்கப்படவில்லை. கோவிட்-19 எண்ணிக்கை உயர்ந்து வரும் நிலையில் பாதிப்புகள் காரணமாக நொய்டா காவல்துறை நொய்டாவில் பிரிவு 144 தடை உத்தரவு 2021 ஜனவரி 2 ஆம் தேதி வரை விதித்துள்ளது.
கருத்துகள்