ஆஸ்ரம் பள்ளி அடுத்தாண்டு மாணவர் சேர்க்கை நடத்தக் கூடாது உயர்நீதிமன்றம் உத்தரவு

 ஸ்ரீ ராகவேந்திரா கல்விச் சங்கச் செயலாளர் லதா ரஜினிகாந்த் சென்னை கிண்டியில் ஆஸ்ரம் எனும் பள்ளியை நடத்தி வருகிறார். வெங்கடேஸ்வரலு, பூர்ணச்சந்திர ராவ் உள்ளிட்டோருக்குச் சொந்தமான இடத்திற்கு வாடகை தொடர்பாக பிரச்சனைகள் இருந்து வந்த நிலையில் 2013 ஆம் ஆண்டு மார்ச் மாதம்  வரை வாடகைப் பாக்கி ஒரு கோடியே 99 லட்சத்தைச் செலுத்த உத்தரவிடக்கோரி இட உரிமையாளர்கள் 2014 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து வழக்கு நிலுவையிலிருந்த நிலையில், 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16 ஆம் தேதி திடீரெனப் பள்ளியின் கேட்டைப் பூட்டியதால். பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி பள்ளி திறக்கப்பட்டுச் செயல்பட்டு வருகிறது. பின்னரும் வாடகைப் பிரச்சினை நீடித்த நிலையில் 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3 ஆம் தேதி இரு தரப்பிற்கும் உடன்பாடு ஏற்பட்டு 2020. ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் இடத்தைக் காலி செய்வதென ஸ்ரீ ராகவேந்திரா கல்விச் சங்கம் ஒப்புக்கொண்டநிலையில், கொரோனா பரவல் காரணமாக தாங்கள் உறுதியளித்தப்படி காலி செய்ய முடியாததால், மேலும் ஒரு வருடம் அவகாசத்தை நீட்டிக்கக் கோரி  லதா ரஜினிகாந்த் சென்னை உயர் நீதிமன்றத்தில் நில உரிமையாளர்கள் தொடர்ந்த வழக்கில் கூடுதல் மனுத்தாக்கல் செய்திருந்த வழக்கை நீதிபதி என். சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, இடத்தைக் காலி செய்வதற்கான ஒப்பந்தத்தில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், மாத வாடகையாக டி.டி.எஸ். தொகை உட்பட 8 லட்ச ரூபாய் முறையாக செலுத்தி வருவதாகவும், எனவே கால அவலாசத்தை இந்தக் கல்வி ஆண்டு முடியும் வரை நீட்டிக்க வேண்டுமென லதா ரஜினிகாந்த் தரப்பில் வாதிடப்பட்டது. நீதிபதி சதீஷ்குமார் பிரப்பித்த உத்தரவில், கிண்டியில் ஆஸ்ரம் பள்ளி இயங்கி வரும் கட்டிடத்தை காலிசெய்ய ஸ்ரீ ராககவேந்திரா கல்வி சங்கத்திற்கு ஏப்ரல் 30 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளார். அவ்வாறு காலி செய்யாவிட்டால், கல்விச் சங்கம் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு உள்ளாக நேரிடுமென அதன் செயலாளர் லதா ரஜினிகாந்தை நீதிபதி எச்சரித்துள்ளார். ஆஸ்ரம் பள்ளி தற்போது இயங்கும் முகவரியில் 2021-22 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையை நடத்தக்கூடாதெனவும் ஸ்ரீ ராகவேந்திரா கல்வி சங்கத்திற்குத் தடைவிதித்துள்ளார்.கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா